Saturday, 8 March 2025

மக்கள் மருந்தக தினம்: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மக்கள் மருந்தகத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பார்வையிட்டார்

 

    7-வது மக்கள் மருந்தக தினம்  நாடு முழுவதும் உள்ள  30 மாநிலங்களின் 30 நகரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்களால் கொண்டாடப்பட்டது. மக்கள் மருந்தக மையங்களில் இந்தக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள பிரதமரின் மக்கள் மருந்தக மையத்திற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இன்று (07.03.2025) வருகை தந்தார். மக்கள் மருந்தகத்தின் பொறுப்பு அதிகாரி திரு நாராயணா மற்றும் ஊழியர்கள் அமைச்சரை வரவேற்றனர். மருந்தக ஊழியர்களுடன் உரையாடிய அமைச்சர், அங்குள்ள மருந்துகள் மற்றும் விற்பனை செய்யப்படும் பொருட்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.


    பயனாளிகளுக்கு மருந்துகளை வழங்கிய அமைச்சர், அவர்களுடன் உரையாடினார். குறைந்த விலையில் வழங்கப்படும் இந்த மருந்துகள் மூலம் தங்களுக்கு மருத்துவ செலவுக்கான பணம் மிச்சமாவதாகவும், பிரதமரின் மக்கள் மருந்தகம் தங்களுக்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது என்றும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். மக்கள் மருந்தகத்தின் முக்கியத்துவம் குறித்து குறிப்பிட்ட அமைச்சர், மலிவான விலையில் தரமான மருந்துகள் கிடைப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  மேலும் மருந்தகத்தை மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



No comments:

Post a Comment