சென்னையில் 20 ஆயிரம் போலீசார் குவிப்ப
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்படுகிறது
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். திறந்துவைக்கின்றனர்
தமிழக அரசின் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை இன்று தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் வருகையொட்டி சென்னையில் 20 ஆயிரம் போலீசார் குவிப்பு
ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு.
திருவாரூர்: கமலாபுரம் அருகே விளைநிலத்தில் பதிக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு.
குழாயில் இருந்து வெளியான கச்சா எண்ணெய் வயல் வெளிகளில் பரவியதாக விவசாயிகள் புகார்.
காலா டீசர் வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் அறிவிப்பு.
மார்ச் 1-ம் தேதி காலா டீசர் வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் அறிவிப்பு.
”இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பார்த்தது இல்ல..ல... பார்ப்பீங்க..." என சமூகவலைதளத்தில் தனுஷ் பதிவு.
.
1,500 சிறை கைதிகளை விடுதலை
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 1500 சிறை கைதிகள் விடுதலையாகின்றனர்.
மாநிலம் முழுவதும் 1,500 சிறை கைதிகளை விடுதலை செய்ய அரசு உத்தரவு.
மதுரையில் 340, பாளையங்கோட்டையில் 300 கைதிகள் விடுதலையாக உள்ளனர்.
அரசு உத்தரவு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உடன் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.
அனைத்துக்கட்சித் தலைவர்கள் அடுத்தவாரம் டெல்லி பயணம் -
பிரதமர் மோடியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த அனைத்துக்கட்சித் தலைவர்கள் அடுத்தவாரம் டெல்லி பயணம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்பேச்சு
மக்களை காப்பாற்றப் போவது நாங்கள் தான் என்பவர்களின் பேச்சு விரைவில் புஸ்வாணமாகும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.
தன்மானத்துடன் வாழ்வது அடிப்படை உரிமை - ப.சிதம்பரம் மனு.
அரசியல் வானில் பறக்க நினைக்கும் அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் வெடித்து சிதறும் - துணை முதலமைச்சர்.
எனது மற்றும் என் மகன் இல்லங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை செய்வது அடிப்படை உரிமையை பறிப்பதாக உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு.
தன்மானத்துடன் வாழ்வது அடிப்படை உரிமை - ப.சிதம்பரம் மனு.
ரத்த பரிசோதனை மைய ஊழியர் யமுனா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
சென்னை மடிப்பாக்கத்தில் கடந்த வாரம் எரிசாராயம் வீசப்பட்ட தனியார் ரத்த பரிசோதனை மைய ஊழியர் யமுனா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
யமுனா மீது எரிசாராயம் வீசியதாக ரத்த பரிசோதனை மைய உரிமையாளர் ராஜா ஏற்கனவே கைது.
பள்ளி வளாகத்திற்குள் வாகனம் புகுந்து கொடூர விபத்து.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் பள்ளி வளாகத்திற்குள் வாகனம் புகுந்து கொடூர விபத்து.
வாகனம் மோதியதில் 9 மாணவர்கள் உயிரிழப்பு.
விபத்தில் 24 மாணவர்கள் படுகாயம்....
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் இன்று வெளியீடு
ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ”நமது புரட்சித்தலைவி அம்மா” வெளியீடு.
கிரிக்கெட்
இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு 20 -ஓவர் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி, தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் படையினர் அத்துமீறிதுப்பாக்கிச்சூடு .
காஷ்மீரின் எல்லையில் அமைந்துள்ள உரி பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி இந்திய ராணுவம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
கரை வேட்டி கட்ட வேண்டாம்: கமல் வேண்டுகோள்
கரை வேட்டி கட்ட வேண்டாம், காவல்துறை அனுமதியின்றி பேனர் ,
வைத்தல் ' விளம்பரம் செய்தல் கூடாது என நடிகர் கமலஹாசன் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், மதுரையை விட திருச்சி பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் எனவும் நிர்வாகிகளுடன் கமல் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெ. சிலையை வடிவமைத்தவருக்கு தங்க மோதிரம் பரிசு...