Saturday, 24 February 2018

முக்கிய செய்திகள்


: ஜெ.வின் கனவுத் திட்டம் "அம்மா ஸ்கூட்டி".. தொடங்கி வைத்தார் மோடி
                                                                                                                  ஜெயலலிதா பிறந்த
 


நாளையொட்டி, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு சார்பில் பிரதமர் மோடி இன்று தொடக்கி வைத்து பேசி வருகிறார். கவர்னர் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள்  கலந்து கொண்டனர்






: தமிழில் வணக்கம் சொல்லி பேச்சை தொடங்கினார் பிரதமர் மோடி.

தமிழுக்கும், தமிழ் பாரம்பரியத்திற்கும் நான் தலைவணங்குகிறேன் - தமிழில் பிரதமர் பேச்சு.

பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமைப்படுகிறேன், பெண்கள் படித்தால் குடும்பமே கற்றதாக அர்த்தம் - பிரதமர் மோடி.




: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏராளமான நிதி வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி.

காங்கிரஸ் அரசை விட அதிக நிதியை திட்டக் கமிஷனில் இருந்து பெற்று தந்தோம் - பிரதமர் மோடி.

உஜாலா திட்டத்தின் மூலமாக கரியமில வாயு மாசு குறைந்துள்ளது - பிரதமர் மோடி.



: முத்ரா யோஜனா திட்டத்தில் பலனடைந்தவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் - பிரதமர் மோடி.

பெண்களுக்கான மகப்பேறு விடுமுறையை 26 வாரங்களாக அதிகரித்து தந்துள்ளோம் - பிரதமர் மோடி.



 காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்க நடவடிக்கை எடுக்க தமிழக மக்களின் சார்பாக பிரதமருக்கு கோரிக்கை வைக்கிறேன் -முதலமைச்சர் பழனிசாமி.

காவிரிக்கு பதில் இல்லை...

காவிரி மேலாண்மை வாரியம் - காவிரி நதிநீர் பிரச்னை பற்றி தனது உரையில் பிரதமர் மோடி எதுவும் குறிப்பிடவில்லை.



: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் சேவை மையம் நாளை செயல்படும் - பிஎஸ்என்எல் அறிவிப்பு

No comments:

Post a Comment