Saturday, 24 February 2018

நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மார்ச் 1 முதல் காரைக்காலில் விண்ணப்பிக்கலாம்.

நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மார்ச் 1 முதல் காரைக்காலில் விண்ணப்பிக்கலாம்.

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள அஞ்சலகத்தில் கடந்த ஜனவரி 19ம் தேதி பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டது. சென்னை பாஸ்போர்ட் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த இந்த மையத்தில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் விண்ணப்பித்து வந்தனர்.

அருகிலுள்ள நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் காரைக்காலில் விண்ணப்பிக்க வசதி செய்து தர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.

நாகை, திருவாரூர் மாவட்டங்கள் திருச்சி பாஸ்போர்ட் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் நிர்வாக சிக்கல் ஏற்பட்டது.

பாஸ்போர்ட் மண்டலங்களுக்கு இடையேயான எல்லைகளை சீரமைக்க. வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவெடுத்தது.

சென்னை பாஸ்போர்ட் மண்டலத்தின் கட்டுப்பாட்டிலிருந்து மார்ச் 1ம் தேதி முதல் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறது.

எனவே மார்ச் 1ம் தேதிக்கு பின்னர் நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் காரைக்காலில் விண்ணப்பிக்கலாம். இனி அவர்கள் தஞ்சாவூர் பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு வரவேண்டியதில்லை  என திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment