Monday, 14 May 2018

சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வரைவு திட்ட அறிக்கை தாக்கல்

புதுடில்லி : காவிரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீலிட்ட கவரில் வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மே 3ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில், இனி கூடுதல் அவகாசம் ஏதும் வழங்கப்படாது என்ற நிபந்தனையுடன் மே 14ம் தேதி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அமைச்சரவை ஒப்புதல் தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியிருந்ததால், காவிரி நதிநீர் பங்கீடு செயல் திட்டத்திற்கான வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

இதற்காக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி இருந்தார். அவர் வரைவு திட்ட அறிக்கையை நேரடியாக தாக்கல் செய்துள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு காவிரி திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


என்ன திட்டம்:
மத்திய அரசின் வரைவு திட்டத்தில், காவி மேலாண்மையை வாரியமாகவோ, கமிஷனாகவோ அமைக்கலாம் என்றும் அக்குழுவில் 10 பேர் வரை உறுப்பினர்கள் இருக்கலாம் என்றும் யோசனை கூறப்பட்டுள்ளது.
வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, விசாரணையை மே 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்.

No comments:

Post a Comment