புதுடெல்லி, ஏப். 9–
2 ஜி முறைகேடு வழக்கில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கை மாறியது தொடர்பான வழக்கு தனியாக டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தயாளு அம்மாள் உடல் நிலை குறித்து டாக்டர் பி.கோபால் இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்தார். அதில் தயாளு அம்மாளுக்கு ‘அல்சைமர்’ என்ற மறதி நோய் இருப்பது 2012–ல் கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது அவர் அதே நிலையில் தான் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அப்போது டாக்டர் கோபாலிடம் அமலாக்கத் துறை வக்கீல், 2014–ம் ஆண்டு தேர்தலில் வாக்களித்தது பற்றி தெரியுமா? என்று கேட்டார். அதற்கு தனக்கு வாக்களித்தது பற்றி தெரியாது என்று டாக்டர் பதில் அளித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை வருகி
ற 13–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது
No comments:
Post a Comment