அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள நடிகை குஷ்பு நேற்று முதன் முதலாக டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நடுத்தர மக்கள் பயன் அடையும் வகையில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.5 லட்சம் ஆக உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார். இரண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்ட பிறகும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. நிலமற்ற தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்கள் உள்ளிட்ட யாருக்கும் மோடி அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை. எனவே நிலம் கையகப்படுத்துதல் சட்டம், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை நாம் கடுமையாக எதிர்த்து போராட வேண்டும். வி.கே.சிங் வெளியிட்ட கருத்துக்காக அவரை மத்திய மந்திரி பதவியில் இருந்து மோடி நீக்க வேண்டும்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் வருகை பற்றி அடிக்கடி கேட்கிறார்கள். அவர் வரும்போது உங்கள் அனைவருக்கும் தெரியும். திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்களை ஆந்திர மாநில போலீசார் சுட்டுக்கொன்றிருப்பது மிகுந்த வேதனை தருகிறது. அது என்கவுண்டரா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலையா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
20 தமிழர்களின் உடல்களில் காணப்படும் குண்டு காயங்கள் பல்வேறு சந்தேகத்தை கொடுக்கிறது. மேலும் உடல்கள் கிடந்த இடத்தில் பழைய செம்மரக்கட்டைகள் போடப்பட்டிருந்தது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. எனவே இந்த சம்பவத்தில் உண்மையை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும் வரை காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும்.
காஷ்மீரில் பண்டிட்களை மறுகுடியமர்த்துவதை காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால் அவர்கள் கவுரவமாகவும், பாதுகாப்புடனும் வாழ காஷ்மீர் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் பெய்த பலத்த மழையால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா கடிதம் எழுதினார்.
அதன் பிறகே மோடி அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது கர்நாடகா, அரியானா விவசாயிகளுக்கு போதுமான அளவுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மோடி அரசு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் கண் துடைப்பு செயல்களில்தான் ஈடுபடுகிறது. இந்த விஷயத்தில் மோடி மீண்டும், மீண்டும் வார்த்தை ஜாலத்தால் மண் வீடு கட்டுகிறார்.
மோடி ஏழை விவசாயிகளை தன் வார்த்தை வலையில் சிக்க வைக்க முயல்கிறார். அவர் என்ன சொன்னாலும் கேட்பதற்கு நாட்டு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காவிரி நதிநீர் பிரச்சனை தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநிலங்களுக்கு உரிய பிரச்சனை. இரு மாநிலங்களிலும் தங்கள் மக்களின் நலனையே முக்கியமாக கருதுகின்றன.
எனவே இந்த பிரச்சனையை இரு மாநில அரசுகளும் உட்கார்ந்து பேசி, சுமூக தீர்வு காண விட்டு விட வேண்டும் என்று நினைக்கிறேன். இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த நாம் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.

No comments:
Post a Comment