Thursday, 9 April 2015

ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவ கல்லூரியை ஆய்வு செய்த அதிகாரிகள் திருப்தி

சென்னை, ஏப். 9–ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவ கல்லூரியை ஆய்வு செய்த அதிகாரிகள் திருப்தி
சென்னையில் ஓமந்தூரார் தோட்டத்தில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ரூ.200 கோடியில் 7 தளங்களுடன் 7 கட்டிடங்கள் தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன.
இந்த கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதற்கு கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள், படுக்கை வசதிகள், ஆய்வகங்கள், மருத்துவ உபகரணங்கள், விடுதி வசதி, டாக்டர்கள் மற்றும் நர்சு குடியிருப்பு போன்ற அடிப்படையான வசதிகள் செய்யப்பட வேண்டும்.
மாணவர்களுக்கு வகுப்பறை, ஆடிட்டோரியம், கூட்ட அரங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து இருந்தால்தான் அனுமதி கிடைக்கும்.
டெல்லியில் இருந்து இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் ஏற்கனவே ஒரு முறை இந்த மருத்துவ கல்லூரியை ஆய்வு செய்து விட்டு மீதமுள்ள பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி சென்றனர்.
இந்த நிலையில் புதிய மருத்துவ கல்லூரியில் எம்.சி.ஐ. அதிகாரிகள் 3 பேர் நேற்று இறுதி கட்ட ஆய்வு பணியை மேற்கொண்டனர்.
அவர்கள் புதிய ஆஸ்பத்திரியின் இறுதி கட்ட பணியை பார்த்து வியப்படைந்தனர். தனியார் மருத்துவ கல்லூரியை விட இந்த புதிய மருத்துவ கல்லூரியில் வசதிகள் அமைந்துள்ளன.
அனைத்து கட்டமைப்பு வசதிகளும் முழு நிறைவாக திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
டெல்லி அதிகாரிகள், அனைத்தும் நிறைவாக இருப்பதாக கூறியதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதனால் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.மாணவர் சேர்க்கையில் இந்த புதிய மருத்துவ கல்லூரி இடம் பெறுவது உறுதியாகி விட்டது.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் 100 இடங்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. மே 15–ந் தேதிக்கு பிறகு இதற்கான அனுமதியை எம்.சி.ஐ.வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்த ஆண்டு மருத்துவ கலந்தாய்வில் கூடுதலாக 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் மாணவர்களுக்கு கிடைக்கும்.
மேலும் திருவாரூர், விழுப்புரம் மருத்துவக் கல்லூரிகளுக்கு முழு அங்கீகார அனுமதி இந்த ஆண்டு கிடைத்து விட்டது. திருச்சி, செங்கல்பட்டு, சேலம், தூத்துக்குடி, ஸ்டான்லி ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கூடுதலாக இடங்கள் சேர்க்கப்பட்டன. அதற்கான இந்த வருட அனுமதி எம்.சி.ஐ. விரைவில் வழங்க உள்ளது.
எனவே எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் இந்த ஆண்டு சேர விரும்பும் மாணவ–மாணவிகளுக்கு ஓமந்தூரார் புதிய மருத்துவக் கல்லூரி ஒரு ‘ஜாக்பாட்’ ஆகும்.

20 தமிழர்கள் சுட்டுக்கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்- நடிகை குஷ்பு பேட்டி

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள நடிகை குஷ்பு நேற்று முதன் முதலாக டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– 
20 தமிழர்கள் சுட்டுக்கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்- நடிகை குஷ்பு பேட்டி
பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நடுத்தர மக்கள் பயன் அடையும் வகையில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.5 லட்சம் ஆக உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார். இரண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்ட பிறகும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. நிலமற்ற தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்கள் உள்ளிட்ட யாருக்கும் மோடி அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை. எனவே நிலம் கையகப்படுத்துதல் சட்டம், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை நாம் கடுமையாக எதிர்த்து போராட வேண்டும். வி.கே.சிங் வெளியிட்ட கருத்துக்காக அவரை மத்திய மந்திரி பதவியில் இருந்து மோடி நீக்க வேண்டும். 

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் வருகை பற்றி அடிக்கடி கேட்கிறார்கள். அவர் வரும்போது உங்கள் அனைவருக்கும் தெரியும். திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்களை ஆந்திர மாநில போலீசார் சுட்டுக்கொன்றிருப்பது மிகுந்த வேதனை தருகிறது. அது என்கவுண்டரா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலையா என்று சந்தேகம் எழுந்துள்ளது. 

20 தமிழர்களின் உடல்களில் காணப்படும் குண்டு காயங்கள் பல்வேறு சந்தேகத்தை கொடுக்கிறது. மேலும் உடல்கள் கிடந்த இடத்தில் பழைய செம்மரக்கட்டைகள் போடப்பட்டிருந்தது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. எனவே இந்த சம்பவத்தில் உண்மையை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும் வரை காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும். 

காஷ்மீரில் பண்டிட்களை மறுகுடியமர்த்துவதை காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால் அவர்கள் கவுரவமாகவும், பாதுகாப்புடனும் வாழ காஷ்மீர் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் பெய்த பலத்த மழையால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா கடிதம் எழுதினார். 

அதன் பிறகே மோடி அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது கர்நாடகா, அரியானா விவசாயிகளுக்கு போதுமான அளவுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மோடி அரசு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் கண் துடைப்பு செயல்களில்தான் ஈடுபடுகிறது. இந்த விஷயத்தில் மோடி மீண்டும், மீண்டும் வார்த்தை ஜாலத்தால் மண் வீடு கட்டுகிறார். 

மோடி ஏழை விவசாயிகளை தன் வார்த்தை வலையில் சிக்க வைக்க முயல்கிறார். அவர் என்ன சொன்னாலும் கேட்பதற்கு நாட்டு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காவிரி நதிநீர் பிரச்சனை தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநிலங்களுக்கு உரிய பிரச்சனை. இரு மாநிலங்களிலும் தங்கள் மக்களின் நலனையே முக்கியமாக கருதுகின்றன. 

எனவே இந்த பிரச்சனையை இரு மாநில அரசுகளும் உட்கார்ந்து பேசி, சுமூக தீர்வு காண விட்டு விட வேண்டும் என்று நினைக்கிறேன். இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த நாம் அனுமதிக்க வேண்டும். 

இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.

கலைஞர் டி.வி. வழக்கு: தயாளுஅம்மாள் மருத்துவ அறிக்கை சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது

புதுடெல்லி, ஏப். 9–
2 ஜி முறைகேடு வழக்கில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கை மாறியது தொடர்பான வழக்கு தனியாக டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. 
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தயாளு அம்மாள் உடல் நிலை குறித்து டாக்டர் பி.கோபால் இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்தார். அதில் தயாளு அம்மாளுக்கு ‘அல்சைமர்’ என்ற மறதி நோய் இருப்பது 2012–ல் கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது அவர் அதே நிலையில் தான் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அப்போது டாக்டர் கோபாலிடம் அமலாக்கத் துறை வக்கீல், 2014–ம் ஆண்டு தேர்தலில் வாக்களித்தது பற்றி தெரியுமா? என்று கேட்டார். அதற்கு தனக்கு வாக்களித்தது பற்றி தெரியாது என்று டாக்டர் பதில் அளித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை வருகிகலைஞர் டி.வி. வழக்கு: தயாளுஅம்மாள் மருத்துவ அறிக்கை சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டதுற 13–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது

சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் வழக்கு: ராமலிங்க ராஜு உள்பட 10 பேரும் குற்றவாளிகள் - சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

ஐதராபாத், ஏப்.9-                   
சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் வழக்கு: ராமலிங்க ராஜு உள்பட 10 பேரும் குற்றவாளிகள் - சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வரவு செலவு கணக்கில், பல ஆண்டுகளாக மோசடி செய்து, லாபத்தை அதிகமாக காட்டி ஊழலில் ஈடுபட்டதாக அதன் தலைவர் பி. ராமலிங்க ராஜூ மீது கடந்த 2009-ம் ஆண்டு புகார் எழுந்தது.

நாட்டின் மிகப்பெரிய கணக்கு மோசடி என கூறப்பட்ட இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. ராமலிங்க ராஜூ, அவரது சகோதரர்கள் ராம ராஜூ, சூரிய நாராயண ராஜூ, சத்யம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வண்ட்லமணி சீனிவாஸ் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.                   

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஐதராபாத் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விசாரணை நடத்தியது. சத்யம், தனது பங்குதாரர்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. 226 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 3 ஆயிரம் ஆவணங்கள் சான்றாவணங்களாக குறிக்கப்பட்டன.                   

இந்த வழக்கு கடைசியாக கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பி.வி.எல்.என். சக்ரவர்த்தி, “இந்த வழக்கில் ஏப்ரல் 9-ந் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும். இதை நான் தெளிவாக சொல்கிறேன். தீர்ப்புக்கான இறுதி நாள் ஏப்ரல் 9-தான். இனியும் ஒத்திவைக்கப்படும் கேள்விக்கே இடமில்லை” என கூறினார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரும் கிரிமினல் சூழ்ச்சி மற்றும் மோசடியில் ஈடுபட்டது நிரூபணமானதால் அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று பிற்பகல் அல்லது நாளை அறிவிக்கப்படும் என தெரிகிறது.

செம்மர கடத்தல் துப்பாக்கி சூடு: சேலம் தொழிலாளர்கள் 40 பேர் கதி என்ன?-உறவினர்கள் கண்ணீருடன் தவிப்பு

சேலம், ஏப். 9–செம்மர கடத்தல் துப்பாக்கி சூடு: சேலம் தொழிலாளர்கள் 40 பேர் கதி என்ன?-உறவினர்கள் கண்ணீருடன் தவிப்பு
திருப்பதி காட்டுக்குள் கொல்லப்பட்ட 20 தமிழர்களும் போலீசாருடன் நடந்த மோதலில் செத்தார்களா அல்லது திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்களா என்ற சந்தேகம் நீடித்தபடி உள்ளது.
20 பேரின் உடலும் நேற்று பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டது. இதையடுத்து உடல்கள் திருப்பதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த நிலையில் தமிழ் நாட்டில் இருந்து திருப்பதி காட்டுப் பகுதிக்கு செம்மரம் வெட்ட சென்ற மேலும் பல தமிழர்கள் என்ன ஆனார்கள் என்ற பீதியும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அதிகாலை போலீசார் துப்பாக்கியால் சுடத் தொடங்கிய போது சுமார் 80 தொழிலாளர்கள் அடர்ந்த காட்டுக்குள் தப்பி ஓடி விட்டதாகவும் அவர்களை சிறு விமானம் மூலம் தேடுவதாகவும் ஆந்திர போலீசார் கூறி இருந்தனர்.
அப்படி தப்பிச் சென்ற 80 தமிழர்களும் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? அவர்கள் கதி என்ன ஆனது? என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அவர்களில் 46 பேர் சேலம் – நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
அந்த 46 பேரையும் செம்மர கடத்தல் ஏஜெண்டு ஒருவர் கடந்த வாரம் திருப்பதி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. திருப்பதி காட்டுக்குள் செம்மரம் வெட்ட 46 பேரும் நுழைந்துள்ளனர்.
அந்த சமயத்தில் அவர்கள் ஆந்திர மாநில போலீசாரின் வளையத்துக்குள் சிக்கிக் கொண்டனர். 46 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து சுட்டதாக தெரிகிறது. இதில் 46 பேரும் நாலா புறமும் சிதறி ஓடியுள்ளனர். அப்படி ஓடியவர்களில் 5 பேரை போலீசார் பிடித்தனர்.
அந்த சமயத்தில் சதீஷ் (வயது 30) என்பவர் மட்டும் எப்படியோ போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடி வந்துவிட்டார். சேலம் மாவட்டம் பேளூரை அடுத்த தாண்டனூர் பகுதியைச் சேர்ந்த இவர் ஆந்திர போலீசாரிடம் இருந்து தப்பியது எப்படி என்பது பற்றி இன்று ‘‘மாலைமலர்’’ நிருபரிடம் கூறியதாவது:–
கடந்த மாதம் 31–ந் தேதி ஆந்திராவுக்கு 46 பேர் சென்றோம். இதில் 5 பேரை ஆந்திர போலீசார் கைது செய்து கடப்பா சிறையில் அடைத்து உள்ளனர். நான் தப்பி வந்து விட்டேன். மற்ற 40 பேர் கதி என்ன என்று தெரியவில்லை. அவர்களை ஆந்திர போலீசார் பிடித்து வைத்து உள்ளார்களா? அல்லது தப்பி விட்டார்களா என்று தெரியவில்லை.
ஆந்திர போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய போது நான் முள் காட்டில் பதுங்கி கொண்டேன். போலீசார் அங்கு இருந்து சென்ற பிறகு நான் தப்பித்து வந்து விட்டேன். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் பேளுரைச் சேர்ந்த ஒருவரது வயிற்றில் குண்டு பாய்ந்தது. அவரது கதி என்ன என்றும் தெரியவில்லை.
மாயமாகி உள்ள 40 பேரில் பலர் சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பேளுர், நீர்முள்ளிக்குட்டை, அறுநூத்துமலை, வெள்ளாளப்பட்டி, கருமந்துறை, தாண்டானூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் அருகே உள்ள ஒண்டிக்கடை, காட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
40 பேர் கதிஎன்ன? என்பது தெரியாததால் அவர்களது உறவினர்கள் கண்ணீருடன் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். இதற்டையில் கடப்பா சிறையில் உள்ள 5 தமிழர்களை அவர்களது உறவினர்கள் போய் பார்த்து வந்து உள்ளனர்.
அவர்களை ஜாமீனில் எடுக்கவும், அபராத பணம் கட்டவும் ரூ. 1 லட்சம் வரை செலவாகும் என்பதால் உறவினர்கள் சொந்த ஊருக்கு வந்து விட்டனர். பணத்தை புரட்டி கொண்டு மீண்டும் அவர்கள் கடப்பா செல்ல உள்ளனர்.
இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறியதாவது:–
கூலி வேலைக்கு அழைத்து சென்ற தாண்டானூரை சேர்ந்த 3 பேர் கடப்பா சிறையில் உள்ளனர். இவர்கள் எங்கே என்று நாங்கள் தேடி வந்தோம். இப்போது இவர்கள் கடப்பா சிறையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவர்களை ஜாமீனில் எடுக்க அதிகம் செலவு ஆகும் என தெரிகிறது.
இந்த தொகையை மலைக்கிராம மக்கள் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு ஜாமீன் எடுக்க இருக்கிறோம். கடப்பா சிறையில் உள்ள தமிழர்களை ஜாமீனில் எடுக்க தமிழக அரசும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
"