சென்னை,
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அபோது அவர் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி நாளை தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடத்தப்படு கிறது. அனைத்து வாக்கு சாவடி களிலும் ஊழியர்கள் அமர்ந்து பெயர் சேர்த்தல், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
அங்கேயே விண்ணப்பப் படிவம் கிடைக்கும். புதிதாக பெயர் சேர்க்க விரும்புகிறவர்கள் முகவரி சான்று, பே£ட்டோ, வயது சான்றிதழ் ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும். காலை 10 மணி முதல் 5 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 60,418 ஓட்டு சாவடிகளில் இதற்கான பணிகள் நடக்கிறது.
அங்கேயே விண்ணப்பப் படிவம் கிடைக்கும். புதிதாக பெயர் சேர்க்க விரும்புகிறவர்கள் முகவரி சான்று, பே£ட்டோ, வயது சான்றிதழ் ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும். காலை 10 மணி முதல் 5 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 60,418 ஓட்டு சாவடிகளில் இதற்கான பணிகள் நடக்கிறது.
வாக்காளர் புகைப்பட அட்டை இருந்து அவர்களுக்கான பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையென்றால் ஓட்டு போட இயலாது. எனவே அவர்களும் நாளைய முகாமில் பெயர்களை சேர்க்கலாம்.
நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை ஒவ்வொரு கட்சியினரும் கடை பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறினோம். தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தி கூறினேன்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு குழுவிலும் மாஜிஸ்திரேட்டு அந்தஸ்தில் உள்ள அதிகாரி, ஒரு போலீஸ் அதிகாரி, 4 பே£லீசார், வீடியோ கிராபர் ஆகியோர் இருப்பார்கள். இது தவிர திடீரென சோதனை செய்யவும் தனிக்குழு அமைக்கப்பட் டுள்ளது.
தமிழ்நாட்டில் ‘அம்மா’ என்கிற பெயர், எம்.ஜி.ஆர். சமாதியில் உள்ள முகப்பு தோரணம், அம்மா குடிநீர் பாட்டில், சிறிய பஸ்களில் உள்ள இலைகள், டி.ஜி.பி.யை மாற்றுவது தொடர்பான புகார்கள் ஆகியவை பற்றி தேர்தல் கமிஷனில் இருந்து இன்னும் தகுந்த உத்தரவு வரவில்லை.
கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தங்களது பிரசார சுற்றுப்பயணத்தை ஏப்ரல் 5-ந்தேதிக்குள் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து அனுமதி பெற வேண்டும். எந்த ஒரு நிகழ்ச்சியிலும் யாரும் பரிசு பொருட்கள் கொடுக்க கூடாது.
ஓட்டுக்காக யாரேனும் பணம் கொடுத்தால் இது பற்றி புகார் தெரிவிக்க 1950 என்ற தொலைபேசி எண் செயல்பாட்டில் உள்ளது. இதை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்தலில் செலவழிக்கும் செலவு தொகைகளை வேட்பாளர்கள் முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.