Tuesday, 24 June 2025

தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா?:*நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கேள்வி

 


    தமிழகம் முழுவதும் 35,039 ரேஷன் கடைகள் உள்ளன. பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, மானிய விலையில் சர்க்கரை, கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.


கேடிவி ஹெல்த் ஃபுட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் எண்ணெய் சப்ளை செய்தது. அந்த வகையில் தமிழக அரசு தங்கள் நிறுவனத்திற்கு 141 கோடியே 22 லட்சம் ரூபாய் அரசு எங்கள் நிறுவனத்துக்கு வழங்க வேண்டியுள்ளது. டெண்டர் நிபந்தனைப்படி 30 நாட்களில் இந்த தொகை வழங்கப்பட வேண்டும் என்பதால் நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த நிறுவனம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்பு 24.6.2025  அன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது நிறுவனத்தின் தரப்பில், "நிலுவைத் தொகை இருந்த போது கூட நாங்கள் தொடர்ந்து சமையல் எண்ணெய் சப்ளை செய்து வருகிறோம். தற்போது வரை அரசு எங்களுக்கு ரூ 200 கோடிக்கும் மேல் நிலுவை வைத்துள்ளது. இந்த தொகையை வழங்காமல் அடுத்தடுத்து டெண்டர் கேட்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது   என்று தெரிவிக்கப்பட்டது.. இதை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த 2 வாரங்களாக ஓய்வுகால பலன்கள் வழங்கப்படவில்லை, அரசு வழங்க வேண்டிய தொகைகள் வழங்கப்படவில்லை என வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 


    மாநிலத்தில் என்ன நடக்கிறது? மாநில அரசு ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும். இது போன்ற வழங்க வேண்டிய தொகைகளை வழங்காமல் வைத்திருப்பது எதைக் காட்டுகிறது? நிலுவை தொகைகளை வழங்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அரசு உள்ளதா என கேள்வி எழுப்பினார். மாநிலத்தில் ஏதேனும் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா என்றும் அவர் கேட்டார். மனுதாரர் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய தொகையை தருவது குறித்து அரசிடம் கருத்தை அறிந்து தெரிவிக்கும் படி அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வரும் ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் தெரிவித்தார்.      

No comments:

Post a Comment