Tuesday, 24 June 2025

மத்திய அரசு பணிக்கு திடீர் மாற்றம்- யார் இந்த ஐஜி பாலகிருஷ்ணன்?

                                                                                                                                                            



பாலகிருஷ்ணன் 2003 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் தேனி  , திருவண்ணாமலை  மற்றும் மதுரை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளார். கிராமத்திற்கு காவல்துறையைக் கொண்டு செல்வோம் என்ற திட்டத்தை முன்னெடுத்து கிராமங்களை தத்தெடுத்து, கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்.


   இதனை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மதுரையில் அப்போது திமுக கட்சி சார்ப்பில் மு.க அழகிரி நிறுத்தப்பட்டார். அப்போது பாலகிருஷ்ணன் காவல் துறை இன்ஸ்பெக்டர் இருந்த அவரை ஜெனரலாக பதவி உயர்வு பெற்று, ஐபிஎஸ் அதிகாரிகளின் பெரிய மாற்றத்தில் மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து தமிழகத்தில் சட்டஒழுங்கை சிறப்பாக செயல்படுத்தியதால் அனைவரது பாராட்டுக்களை பெற்றார்.       

          2011    ஆம் ஆண்டு திருப்பூர் காவல் கண்காணிப்பாளராகப் பதவில் இருந்த போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சுமார் 400 பேர் வரை சிக்கி கொண்டனர். அப்போது வி. பாலகிருஷ்ணன் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குழு ஆற்றில் சிக்கி கொண்டவர்களை அணைவரயும் உயிருடன் மீட்டது,  

           2012 முதல் 2014 வரை    காலக்கட்டத்தில் வி. பாலகிருஷ்ணன்  மீண்டும் மதுரை மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.  2013 ஆம் ஆண்டு ஊர் காவல்ப்படையில் முதல் முறையாக திருநங்கைகளை பணியமர்த்தி அனைவரது கவனத்தையும் வி. பாலகிருஷ்ணன் பெற்றார்.  தொடர்ந்து  அப்போது பெரிதும் பேசப்பட்ட கிராணைட்  ஊழல் தொடர்பாக சுமார் 80 வழக்குகளை பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தார்.                                                                                                                                                           2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு எதிராக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அன்றைய காலக்கட்டத்தில் மயிலாப்பூர் காவல் துணை கண்காணிப்பாளராகப் வி. பாலகிருஷ்ணன் இருந்தார்.இந்த போராட்டத்தை வன்முறையாகமல் மாறமல் பாதுக்காப்பாக கையாண்டார்.                                  

       2019 ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் வந்தபோது, கோட்டூர்புரத்தில் மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தார்கள். அப்போது பாலகிருஷ்ணன் படகில் சென்று அவர்களை காப்பாற்றினார். இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. 2020 ஆம் ஆண்டு அவர் ரயில்வே டி.ஐ.ஜி.யாக வேலை செய்தார். அப்போது ரயில் நிலையங்களில் ஆதரவில்லாமல் இருந்த 500க்கும் மேற்பட்டவர்களை மீட்டார். 

    மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மறுவாழ்வு அளித்தார்.  2021 ஆம் ஆண்டு திருச்சி சரக ஐ.ஜி.யாக இருந்தபோது, போலீஸ் கிளப்புகளை ஆரம்பித்தார். இதன் மூலம் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க பயிற்சி அளித்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.2022 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணன் கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். கோவையில் பல அசம்பாவித சம்பவங்கள் நடந்தன. ஆனால்பாலகிருஷ்ணன் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட சிறப்பாக பணியாற்றினார்.இதையடுத்து அவர் சென்னை டி.ஜி.பி. அலுவலக நிர்வாக ஐ.ஜி-ஆக மாற்றப்பட்டார். இப்போது மத்திய உள்துறை அமைச்சகம் அவரை எல்லை பாதுகாப்புப் படை ஐ.ஜி.யாக நியமித்துள்ளது.

No comments:

Post a Comment