Tuesday, 24 June 2025

மத்திய அரசு பணிக்கு திடீர் மாற்றம்- யார் இந்த ஐஜி பாலகிருஷ்ணன்?

                                                                                                                                                            



பாலகிருஷ்ணன் 2003 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் தேனி  , திருவண்ணாமலை  மற்றும் மதுரை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளார். கிராமத்திற்கு காவல்துறையைக் கொண்டு செல்வோம் என்ற திட்டத்தை முன்னெடுத்து கிராமங்களை தத்தெடுத்து, கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்.


   இதனை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மதுரையில் அப்போது திமுக கட்சி சார்ப்பில் மு.க அழகிரி நிறுத்தப்பட்டார். அப்போது பாலகிருஷ்ணன் காவல் துறை இன்ஸ்பெக்டர் இருந்த அவரை ஜெனரலாக பதவி உயர்வு பெற்று, ஐபிஎஸ் அதிகாரிகளின் பெரிய மாற்றத்தில் மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து தமிழகத்தில் சட்டஒழுங்கை சிறப்பாக செயல்படுத்தியதால் அனைவரது பாராட்டுக்களை பெற்றார்.       

          2011    ஆம் ஆண்டு திருப்பூர் காவல் கண்காணிப்பாளராகப் பதவில் இருந்த போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சுமார் 400 பேர் வரை சிக்கி கொண்டனர். அப்போது வி. பாலகிருஷ்ணன் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குழு ஆற்றில் சிக்கி கொண்டவர்களை அணைவரயும் உயிருடன் மீட்டது,  

           2012 முதல் 2014 வரை    காலக்கட்டத்தில் வி. பாலகிருஷ்ணன்  மீண்டும் மதுரை மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.  2013 ஆம் ஆண்டு ஊர் காவல்ப்படையில் முதல் முறையாக திருநங்கைகளை பணியமர்த்தி அனைவரது கவனத்தையும் வி. பாலகிருஷ்ணன் பெற்றார்.  தொடர்ந்து  அப்போது பெரிதும் பேசப்பட்ட கிராணைட்  ஊழல் தொடர்பாக சுமார் 80 வழக்குகளை பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தார்.                                                                                                                                                           2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு எதிராக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அன்றைய காலக்கட்டத்தில் மயிலாப்பூர் காவல் துணை கண்காணிப்பாளராகப் வி. பாலகிருஷ்ணன் இருந்தார்.இந்த போராட்டத்தை வன்முறையாகமல் மாறமல் பாதுக்காப்பாக கையாண்டார்.                                  

       2019 ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் வந்தபோது, கோட்டூர்புரத்தில் மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தார்கள். அப்போது பாலகிருஷ்ணன் படகில் சென்று அவர்களை காப்பாற்றினார். இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. 2020 ஆம் ஆண்டு அவர் ரயில்வே டி.ஐ.ஜி.யாக வேலை செய்தார். அப்போது ரயில் நிலையங்களில் ஆதரவில்லாமல் இருந்த 500க்கும் மேற்பட்டவர்களை மீட்டார். 

    மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மறுவாழ்வு அளித்தார்.  2021 ஆம் ஆண்டு திருச்சி சரக ஐ.ஜி.யாக இருந்தபோது, போலீஸ் கிளப்புகளை ஆரம்பித்தார். இதன் மூலம் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க பயிற்சி அளித்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.2022 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணன் கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். கோவையில் பல அசம்பாவித சம்பவங்கள் நடந்தன. ஆனால்பாலகிருஷ்ணன் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட சிறப்பாக பணியாற்றினார்.இதையடுத்து அவர் சென்னை டி.ஜி.பி. அலுவலக நிர்வாக ஐ.ஜி-ஆக மாற்றப்பட்டார். இப்போது மத்திய உள்துறை அமைச்சகம் அவரை எல்லை பாதுகாப்புப் படை ஐ.ஜி.யாக நியமித்துள்ளது.

‘போதைப்பொருள் பயன்படுத்தி தவறு செய்துவிட்டேன். வெளிநாடு எதற்கும் செல்ல மாட்டேன், வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன்’ நடிகர் ஸ்ரீகாந்த்.

       




   2002-ம் ஆண்டு வெளியான ‘ரோஜாக்கூட்டம்' திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஸ்ரீகாந்த், அடுத்தடுத்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, பம்பர கண்ணாலே, நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.                                                                                                                                                                               கடந்த 17-ம் தேதி இரவு சந்தேகத்தின்பேரில் இளைஞர் ஒருவரை பிடித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 11 கிராம் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், இதை வைத்திருந்த சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற பிரடோவை (38) கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், அவருக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான் (38) என்பவரை ஓசூரில் கடந்த 18-ம் தேதி கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் யாருக்கெல்லாம் போதைப்பொருளை விநியோகம் செய்தார் என்ற பட்டியலை கொடுத்தார். அந்த பட்டியலில் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்தும் இடம்பெற்றிருந்தார்.

    இதைனையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸார் ஸ்ரீகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, தான் போதைப்பொருளை பயன்படுத்தியது கிடையாது என்று ஸ்ரீகாந்த் வாதம் செய்துள்ளார். இருப்பினும் அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். ஆனால், எதுவும் சிக்கவில்லை.

    தொடர்ந்து  ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. இதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தால் 45 நாட்கள் வரை இந்த பரிசோதனையில் கண்டறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனை தொடர்ந்து  ஸ்ரீகாந்தை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீகாந்த் மட்டுமல்லாமல் திரை பிரபலங்கள் பலரும் போதைப் பொருளை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுகுறித்தும் போலீஸார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.                                                                                                                                                       போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்தை 23.6.2025 அன்று இரவு எழும்பூர் பெருநகர குற்றவியல் 14-வது நீதிமன்ற நடுவர் முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, போதைப் பொருளை யாருக்கும் விற்பனை செய்யவில்லை எனவும், தான் மட்டுமே பயன்படுத்தியதாகவும் நீதிபதியிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.மேலும், போதைப்பொருளை பயன்படுத்தி தவறு செய்துவிட்டதாகவும், தனது மகனை கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும், குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகமாக இருக்கிறது எனவும் கூறி நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமீன் கேட்டுள்ளார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்.     ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவர் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.






தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா?:*நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கேள்வி

 


    தமிழகம் முழுவதும் 35,039 ரேஷன் கடைகள் உள்ளன. பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, மானிய விலையில் சர்க்கரை, கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.


கேடிவி ஹெல்த் ஃபுட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் எண்ணெய் சப்ளை செய்தது. அந்த வகையில் தமிழக அரசு தங்கள் நிறுவனத்திற்கு 141 கோடியே 22 லட்சம் ரூபாய் அரசு எங்கள் நிறுவனத்துக்கு வழங்க வேண்டியுள்ளது. டெண்டர் நிபந்தனைப்படி 30 நாட்களில் இந்த தொகை வழங்கப்பட வேண்டும் என்பதால் நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த நிறுவனம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்பு 24.6.2025  அன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது நிறுவனத்தின் தரப்பில், "நிலுவைத் தொகை இருந்த போது கூட நாங்கள் தொடர்ந்து சமையல் எண்ணெய் சப்ளை செய்து வருகிறோம். தற்போது வரை அரசு எங்களுக்கு ரூ 200 கோடிக்கும் மேல் நிலுவை வைத்துள்ளது. இந்த தொகையை வழங்காமல் அடுத்தடுத்து டெண்டர் கேட்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது   என்று தெரிவிக்கப்பட்டது.. இதை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த 2 வாரங்களாக ஓய்வுகால பலன்கள் வழங்கப்படவில்லை, அரசு வழங்க வேண்டிய தொகைகள் வழங்கப்படவில்லை என வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 


    மாநிலத்தில் என்ன நடக்கிறது? மாநில அரசு ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும். இது போன்ற வழங்க வேண்டிய தொகைகளை வழங்காமல் வைத்திருப்பது எதைக் காட்டுகிறது? நிலுவை தொகைகளை வழங்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அரசு உள்ளதா என கேள்வி எழுப்பினார். மாநிலத்தில் ஏதேனும் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா என்றும் அவர் கேட்டார். மனுதாரர் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய தொகையை தருவது குறித்து அரசிடம் கருத்தை அறிந்து தெரிவிக்கும் படி அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வரும் ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் தெரிவித்தார்.      

நடிகர் ஸ்ரீகாந்த் கைது . இதுவரை நடந்தது என்ன . காவல்துறை விளக்கம்

 




நடிகர் ஸ்ரீகாந்த் கைது தொடர்பாக சென்னை பெருநகரக் காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.        அதில்                                                                                  சென்னை பெருநகரக் காவல் கிழக்கு மண்டலம் - திருவல்லிக்கேணி மாவட்டம் - நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரவு விடுதியில் கடந்த 22.05.2025ம் தேதி அன்று மது அருந்தச் சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்களின் காரணமாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 1 வழக்கில் 1 எதிரியும், 2-வது வழக்கில் 7 எதிரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட எதிரி பிரசாத் என்பவரை முழுமையாகவும், அறிவியல் பூர்வமாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும், சம்மந்தப்பட்ட எதிரியின் வீட்டினை சோதனை செய்து, வங்கி பணப்பரிவர்த்தனை மற்றும் சில ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், இந்த கொலை முயற்சி வழக்கு மட்டுமல்லாமல் பல இடங்களில், பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி சுமார் ரூபாய் 2-கோடி அளவில் மோசடி செய்துள்ளார் என்பது தெரியவருகிறது.

எதிரி TNPSC, Chennai Corporation, Water Board, Income Tax, Railways போன்ற துறைகளில் வேலை வாங்கி தருவதாக ஒவ்வொரு நபரிடமிருந்தும் ரூபாய் 2 லட்சம் முதல் 20 லட்சம் வரை சுமார் 200 நபர்களிடம் பணம் பெற்றிருப்பது புலன விசாரணையில் தெரியவருகிறது. இது சம்மந்தமாக எதிரியுடன் தொடர்பில் இருந்த மதுரை மாநகர ஆயுதப்படை தலைமைக் காவலர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கண்ட வேலை வாய்ப்பு மோசடி சம்மந்தமாக எதிரி பிரசாத் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

பிரசாத் என்பவர் இதுமட்டுமல்லாமல் அவருக்கு தெரிந்த சந்தோஷ் என்பவர் மூலம் காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் உதவியுடன் தனிப்பட்ட நபர்களின் Call Details மற்றும் Location பெற்று, அவர்களை மிரட்டி பணம் பெற்றிருப்பது தெரியவருகிறது. இது சம்மந்தமாக 1 வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2 உதவி ஆய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும், மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர் விசாரணையில் பிரசாத் என்பவருக்கு பெங்களுருவைச் சேர்ந்த பிரதீப் மற்றும் பிரதீப்பின் வெளிநாட்டு நண்பன் கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவர் உட்பட சில நபர்களிடமிருந்து கடந்த 3 வருடங்களாக கொக்கைன் என்ற போதைப்பொருளை பெற்று, தனக்கு தெரிந்த நண்பர்களிடம் விற்பனை செய்துள்ளதாக தெரியவருகிறது. இதற்காக சில இடங்களில் அவரது நண்பர்களுக்கு போதை விருந்தும் தந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது கொக்கைன் போதை மருந்து 11-கிராம் அளவிலும், இது சம்மந்தப்பட்ட பணப்பரிவர்த்தனை மற்றும் மின்னணு தொழில்நுட்ப சம்மந்தப்பட்ட ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டது.

இந்த வழக்கில் கொக்கைன் பொருளை பெற்று பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் என்பவரை உரிய மருத்துவ பரிசோதனை செய்து, அவருடைய பணப்பரிவர்த்தனை, அவருடைய வீடுகள் முழுமையாகவும் சோதனை செய்யப்பட்டு உரிய ஆதாரங்களுடன் அவரை கைது செய்துள்ளோம். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள எதிரிகளையும், புலன்விசாரணை செய்து விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பிரசாத்தின் நண்பர் அஜய் வாண்டையார் என்பவர் சென்னையிலும் மற்றும் சில இடங்களிலும் நில உரிமையாளர்களை மிரட்டியும், வெளிநாடுகளில் வசிப்பவர்களின் நிலத்தையும் அபகரிக்கும் நோக்கத்தோடு, போலி ஆவணங்கள் தயார் செய்து, அந்நிலங்களை அபகரிக்கும் குற்றங்களை செய்துள்ளார். அந்த குற்றங்களை செய்ய உதவியாக இருந்த நாகேந்திர சேதுபதி மற்றும் சந்திரசேகர் (எ) செந்தில், சிவசங்கரன் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறாக வன்முறையின் மூலம் மற்றவர்களிடமிருந்து மோசடியாக நிலங்களை கைப்பற்றியது குறித்து IG Rigistration, Sub - Registrar Office, Bank Details ஆகியவை மூலம் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

அஜய் வாண்டையார் என்பவர் AJ Trust & Enterprises என்ற அமைப்பின் மூலம் இந்த பணப்பரிவர்த்தனை பற்றி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேற்கண்ட குற்ற செயலுக்காக அஜய் வாண்டையார் மற்றும் அவரது கூட்டாளிகளின் மீது இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பதியப்பட்ட வழக்குகளில் 22 நபர்கள் கைது செய்யப்பட்டும், 5 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்திலும், கைது செய்யபட்டுள்ளனர்.

இந்த தொடர்விசாரணையில் பிரசாந்த், அஜய் வாண்டையார் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து அரசு சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு மோசடி, நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவை சட்டவிரோதமாக பயன்படுத்துதல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தில் விடுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கொக்கைன், ஓஜி கஞ்சா மற்றும் பிற போதைப்பொருளை கடத்துவது, தன் வசம் வைத்திருப்பதும், உட்கொள்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும். போதைப்பொருளை வைத்திருப்பவர்களை பற்றியும், விருந்து நிகழ்ச்சிகளில் பயன்படுத்துபவர்கள் பற்றியும் தகவல் தெரிந்தும், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பது குற்றமாக கருதப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Friday, 13 June 2025

கடன் வசூலிப்பதில் கடுமை காட்டினால் ஐந்து ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் - மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்.





கடனை  வசூலிப்பதில் கடுமைகாட்டினால் ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்ற மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் பணக் கடன் வழங்கும் நிறுவனங்களால் ஏற்கனவே நிதிச் சுமையில் இருக்கும் கடனாளியிடம் கடனை வசூலிப்பதற்காக முறையற்ற வழியை  நாடுகின்றனர்.  

அது ஏற்கனவே துயரத்தில் இருக்கும் கடனாளிகளை சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டுதலாய் அமைந்து அதன் மூலம் பலரது குடும்பங்கள் அழிந்து சமூக ஒழுங்கை பாதிப்படைய செய்து விடுகிறது. இதனால் பல மன உளைச்சல் அடைந்து நிம்மதியையும் இழந்து விடுகின்றனர். 

இதன் காரணமாக கடனை வசூலிப்பதில் கடமை காட்டினாலோ சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலோ ஐந்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார் இதனை தொடர்ந்து தமிழக ஆளுநர் ரவிக்கும் இந்த மசோதா அனுப்பப்பட்டது.  இந்த நிலையில் கடன் வசதி தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 

இந்த மசோதா தெரிவிப்பது என்னவென்றால் தனி நபர் அல்லது தனி நபர்கள். உதவி குழுக்கள் அல்லது கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பல கடன் வழங்கும் நிறுவனங்களில் வலுக்கட் டாய வசூலிப்பு முறையால் ஏற்படும் இன்னல்களில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கி நலிவடைந்த பிரிவினரை அது பாதுகாக்க ஒரு சட்டத்தை இயற்றுவது அவசியமாக கருதப்பட்டது.அதற்கான சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளதற்கு ஏற்ப இந்த மசோதா வழிவகை செய்கிறது. 

இந்த மசோதா வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிறுவனங்கள் , கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களைத் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து பணக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆனால் கடன் வாங்கியவரிடம் கட்டாய வசூல் நடவடிக்கை மேற்கொண்டால் வலுக்கட்டாயமாக வசூல் நடவடிக்கை மேற்கொண்டால் இந்த வங்கிகளுக்கும் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிறுவனங்களுக்கும் கூட்டுறவு சங்கங்களுக்கும் கூட இந்த சட்டம் பொருந்தும். 


இந்த சட்டம் கடன் வாங்கியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை அதாவது அவரின் பெற்றோர், கணவர் அல்லது மனைவி, குழந்தைகள் ஆகியோரை கடன் வழங்கிய நிறுவனமோ அல்லது அதன் முகவரோ வலுக்கட்டாய் நடவடிக்கைக் உட்படுத்தக் கூடாது.  அந்த வகையில் அவர்களுக்கு இடையூறு விளைவித்தல், வன்முறையை பயன்படுத்துதல், அவமதித்தல், மிரட்டுதல், அவர்கள் போகும் இடங்களில் பின்தொடர்தல், அவர்களுக்கு சொந்தமான அல்லது பயன்படுத்தும் சொத்துக்களில்  தலையிடுதல் அதை பயன்படுத்த விட முடியாமல் இடையூறு செய்தல், அந்த சொத்துகளை பறித்துக் கொள்ளுதல், அவரது வீடு வசிக்கும் இடம் வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகிய இடங்களுக்கு செல்வது, பேச்சுவார்த்தை நடத்த அல்லது கடனை  வசூலிக்க தேவையற்ற செல்வாக்கை  பயன்படுத்தி வலுக்கட்டாயப்படுத்த தனியார் அல்லது வெளி தரப்பு முகமைகளின் சேவைகளை பயன்படுத்துதல், அரசு திட்டத்தின் கீழ் உரிமை அளிக்கும் ஆவணங்கள், பிற முக்கிய ஆவணங்கள், பொருள்கள் ,வீட்டு உடமைகளை  வலுக்கட்டாயமாக எடுக்க கோருதல் போன்றவை வலுக்கட்டாய நடவடிக்கைகளாக 20 - பிரிவின் படி கருதப்படும்.

20 - பிரிவில் கூறப்பட்டுள்ள மிரட்டுதல், பின்தொடர்தல் போன்ற குற்றங்களை செய்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூபாய் 5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து  விதிக்கப்படும் வெளி முகமைகளை பயன்படுத்துதல் ஆவணங்களை எடுத்தல் போன்ற குற்றங்களுக்காக ஐந்தாண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூபாய் 5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து அது கடன் வழங்க நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய் நடவடிக்கையான இருட்டாக நிரூபிக்கப்பட்டால் அது பாரதிய நியாய சன்ஹிதாவின் 108 -ஆம் பிரிவின் கீழ் குற்றமாக கருதப்படும். 

கடன் வழங்கும் நிறுவனம் தொழில் நடத்த விரும்பும் மாவட்டம் அல்லது வட்டாரத்தில் பதிவு செய்யும் அமைப்பிடம் மின்னணு படிவத்தை அளித்து பதிவு செய்ய வேண்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவு புதுப்பிக்கப்பட வேண்டும் கடன் வழங்கும் நிறுவனம் ஒவ்வொன்றும் பதிவு செய்துள்ள நிறுவனத்தை தமிழகத்தில் நடத்த வேண்டும் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால் மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் அந்த நிறுவனம் கடனுக்கான வட்டி வீதம் அலுவலக விபரங்கள் வலைதளம் தகவல் தொகுப்பு ஆகியவற்றை சிறிய புத்தகமாக அல்லது விளம்பர அறிவிப்புகளில் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் அச்சக பணியாளர்களுக்கு புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை நேரில் ஆய்வு!

                                                                                                                                                                                                தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இன்று (13.06.2025) சென்னை, தண்டையார்பேட்டை, காமராஜர் நகரில் எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையின் சார்பில் அரசு அச்சக பணியாளர்களுக்காக புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:

‘தமிழ்நாடு அரசின் எழுது பொருள் அச்சுத் துறையின் அரசு அச்சகத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கான புதிய குடியிருப்பு கட்டுவதற்கு முதலமைச்சரும் , துணை முதலமைச்சரும் உத்தரவிட்டு, 40 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கினார்கள். இதன்படி சென்னை, தண்டையார்பேட்டை, காமராஜர் நகரில் ஆறு மாடி குடியிருப்பு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இக்குடியிருப்பில் ஏறத்தாழ 96 பணியாளர்கள் குடும்பத்துடன் குடியிருக்கக்கூடிய வகையில் 430 சதுர அடியில் ஒவ்வொரு வீடும் அமையப் பெற்றிருக்கின்றது.

ஒவ்வொரு தளத்திற்கும் 16 குடியிருப்புக்கள் உள்ளடங்கியிருக்கிறது. இப்பணிகள் விரைவில் முடிவடைய இருக்கின்றது. இக்குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்வதற்காக வந்தோம். இப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது. அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் பணியாளர்கள் குடியேறுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவோம். முதலமைச்சருக்கு எங்களுடைய துறையின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முதலமைச்சர் விரைவில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பை திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.’இந்த ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீரசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் வெ.ஷோபனா, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., மற்றும் பொது பணித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.




பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் நடைபாதை விளிம்புகளுடன் கட்டடங்களைஇணைத்திடும் சரிவான இணைப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியினை தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றுதல், சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது குடிமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களதுகட்டடத்திற்கு சாலை மற்றும் நடைபாதை விளிம்புகளுடன் சரிவான

இணைப்புகளுக்காக உடைந்த செங்கற்கள், சுண்ணாம்பு, கட்டடக் கழிவுகள், மண் கலவைகள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இதனால், தூசி பரவல் மற்றும் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. கட்டுமானக் கழிவுகள் மற்றும் மண் தூசுகள் மழைநீர் வடிகால்களில் சேர்வதால், மழைநீர் தேங்கி நீரின் ஓட்டத்தை தடைசெய்கின்றன. மழைக்காலங்களில் மழைநீர் வடிகால்கள்

அடைபட்டு சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்களுக்கு பெரும்பாதிப்பும் ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, மக்கள் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையிலும், மழைநீர் வடிகால் அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் நோக்கிலும், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள சாலையோரங்கள் மற்றும் நடைபாதை விளிம்புகளுடன் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், அலுவலகக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு  பயன்பாட்டுக் கட்டடங்களை இணைத்திடும் சரிவான இணைப்புகள் தொடர்பாக  பின்வரும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகின்றன.

வழிகாட்டு நெறிமுறைகள் :

 கட்டடக் கழிவுகள் மற்றும் உடைந்த செங்கற்களை சரிவான இணைப்புகளுக்காக பயன்படுத்துதல் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.  

 அதற்குப் பதிலாக, மரம் அல்லது இரும்பு போன்ற சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத பொருட்களைப் பயன்படுத்தலாம்.


 இந்த இணைப்புகள் பாதுகாப்பாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பொதுநலப் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும். மேலும், மழைநீர் வடிகால் பராமரிப்புக்கு எவ்வித தடையில்லாதவையாகவும் இருக்க வேண்டும்.


 இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வருகின்ற ஜூன் மாதம் 30ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன் பின்னர் இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவு மேலாண்மைக்கான வழிகாட்டுதல்கள் 2025ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் நடைபாதை விளிம்புகளுடன் கட்டடங்களை இணைத்திடும் சரிவான இணைப்புகள் குறித்த வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம், ஆனால் தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. -பாமக நிறுவனர் ராமதாஸ்


கடந்த சில நாள்களாக  பாமக வில்  ராமதாஸ்-அன்புமணி இடையே நடக்கும் பிரச்சினைகள் அனைவர் மத்தியிலும்  குறிப்பாக கட்சிக்குள்ளேயும்  சலசலப்பும்  ஏற்பட்டுள்ளது .  இதன் தொடர்ச்சியாக  சமீபத்தில் 

 விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எனக்கும் செயல்தலைவருக்கும் இடையே நடக்கும் பிரச்சினைகள் முழுமையாக உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் டிராவில் தான் உள்ளது. இன்னும் முடிவுக்கு வரவில்லை. 34 அமைப்புகளைச் சேர்ந்த 14 பஞ்சாயத்துக் காரர்கள் ஒ
ரு தீர்ப்பு வழங்கினார்கள். அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர நான் தயாராக இருந்தேன். இரு பெரிய ஆளுமைகள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.       

 நான் தயாராக இருந்தும் அன்புமணி சமாதான பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதன்பின் எனக்குள் உள்ள இயற்கையாக கோபம் வெளியில் வந்து, நீயா நானா பார்த்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்து இப்போது செய்தியாளர்களை சந்திக்கிறேன்.                                                                                                                                     கட்சியில் எல்லாம் எனக்கே வேண்டும் என்று அன்புமணி நினைக்கிறார். எனது பேரன் தானே முகுந்தன். அவருக்கு பதவியை ஏன் கொடுக்க கூடாது என்று நான் கேட்டபோது, ‘அவர் கேட்டை சாத்திவிட்டு கொள்ளுப்பேரக் குழந்தைகளுடன் விளையாடட்டும்’ என்று சொல்கிறார். நான் இப்போதும் தினமும் ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்கிறேன்.

பாட்டாளி சொந்தங்கள் என்னை குலதெய்வமாக நினைக்கிறார்கள். நான் அவர்களை எனது வழிகாட்டிகளாக மதிக்கிறேன். நான் 46 ஆண்டுகள் உருவாக்கி கட்டிக்காத்து காப்பாற்றிய கட்சி இது. இன்னும் ஓரிரு ஆண்டுகள் இக்கட்சிக்கு தலைவராக இருக்க எனக்கு உரிமை இல்லையா?. எனக்கு உரிமை இல்லையா என கேட்பதே எனக்கு அவமானமாக உள்ளது. ஒவ்வொரு செங்கல்லாக நான் கட்டிய பாமக எனும் மாளிகை இது. இந்த மாளிகையில் அவரை குடியேற்றிய என்னையே, கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் வகையில் செயல்படுகிறார்.

என்னை சந்திக்க வரும் மாவட்ட செயலாளர்களை சந்திக்கவிடாமல் தடுத்து, என்னை மானபங்கம் செய்துவிட்டார். அன்று அமைதி காத்திருந்தால் அதிகாரம் அன்புமணிக்கு கிடைத்திருக்கும். அப்போதைய கூட்டத்துக்கு சிலர் மட்டுமே வந்தனர். அன்புமணியை நான் கட்சியை விட்டு நீக்கப்போவதாக சொல்லியுள்ளனர். அன்புமணியை கட்சியை விட்டு வெளியேற்ற நான் என்ன முட்டாளா?

இன்னும் ஓரிரு ஆண்டுகள் பொறுமை காத்திருந்தால் நானே அவருக்கு முடிசூட்டுவிழா நடத்தியிருப்பேன். இப்பிரச்சினைக்கு தீர்வு காண தாரக மந்திரங்கள். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தந்தைக்கு பிறகே தனயன். அய்யாவுக்கு பின்னே அன்புமணி. குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம், ஆனால் தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே நீதி நேர்மை தர்மம் ஆகும். என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள். எங்களுக்கு எல்லாமே அய்யாதான் என சொல்லிக்கொண்டே என்னை அதள பாதாளத்தில் தள்ளுகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள், சிறுமைப்படுத்துகிறார்கள்.

இதை எல்லாம் நான் உருவாக்கிய சமூக ஊடகப்பிரிவு, சமூக வலைதளங்கள் மூலம் எனக்கு எதிராக செய்கிறார்கள். என் கைவிரல் கொண்டே என் கண்ணை குத்திக்கொண்டேன். உயிருள்ள என்னை உதாசீனம் செய்துவிட்டு உற்சவராக்கி கொண்டுசெல்கிறார்கள். இது எல்லாமே நாடகம், அதில் ஒவ்வொருவரும் நடிகர்கள்.

7 ஆண்டுகள் முன்பு பிரதமர் மோடி பதவியேற்புக்கு டெல்லி சென்றிருந்தேன். அப்போது அன்புமணி, ‘ அப்பா நான் இனி இந்த கட்சியை பாத்துக்கிறேன்’ என்றார், நான் ஒன்றுமே சொல்லவில்லை. பின் விமானத்தில் அருகில் அமர்ந்து ‘ தவறாக சொன்னால் மன்னித்துவிடுங்கள்’ என்றார். நான் இரு சொட்டு கண்ணீர் விட்டேன். அப்போதே அவருக்கு அதுபோன்ற எண்ணம் இருந்துள்ளது.

இதனால் மன உளைச்சலால் நான் மகாபலிபுரத்தில் தங்கியிருந்தேன். இதனை அறிந்த மருமகள் சவுமியா, அங்கு வந்து அன்புமணியை தலைவராக்க வேண்டும் என சொன்னார். தேதி, இடம் பார்த்துவிட்டதாகவும் சொன்னார். நான் ஜிகே மணியை அழைத்து கேட்டேன். அவரும் ஜோதிடத்தின் அடிப்படையில் ஒன்றரை மாதம் பொறுத்து செய்யலாம் என்றார். அதுபோலவே அவருக்கு பதவி கொடுத்தேன். ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டேன். அப்போது சொன்னேன், என் குடும்ப பெண்கள் யாரும் கட்சி நிகழ்ச்சிக்கு போகக்கூடாது என்று கூறினேன். ஆனால் சவுமியா கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார், 1000 கோயிலுக்கு போயிருப்பார், அந்த கோயில்களில் என்ன வேண்டினார் எனத் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

Thursday, 12 June 2025

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்து வந்த பாதை, குற்றவாளி, மற்றும் தீர்ப்பு விவரங்கள் : ஓர் அலசல்

                                                                                                                                                                    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில்,  இந்த வழக்கு கடந்து வந்த பாதை, குற்றவாளி, மற்றும் தீர்ப்பு விவரங்கள் இங்கே பார்க்கலாம்:

வழக்கு கடந்து வந்த பாதை

 * 2024 டிசம்பர் 23: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், 19 வயது மாணவி தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஞானசேகரன் என்ற நபர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்தது.

 * 2024 டிசம்பர் 24: பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 * 2024 டிசம்பர் 26: சிசிடிவி காட்சிகள் மற்றும் மாணவி வீடியோ கால் மூலம் அடையாளம் காட்டியதன் அடிப்படையில், போலீசார் ஞானசேகரனை கைது செய்தனர்.

 * டிசம்பர் 28: மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் (பூக்யா சினேகா பிரியா, ஆயிஷா ஜமால், எஸ். பிருந்தா) அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது.

 * 2025 ஜனவரி 5: கைதான ஞானசேகரனுக்கு எதிராக திருட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததால், அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

 * 2025 பிப்ரவரி 24: சிறப்புப் புலனாய்வுக் குழு 100 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

 * 2025 மார்ச் 7 முதல் மே 22: இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் 31 முறை விசாரிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் எம்.பி. மேரி ஜெயந்தி ஆஜராகி, ஞானசேகரனுக்கு எதிரான 11 குற்றச்சாட்டுகளையும் தடயவியல் மற்றும் பிற ஆதாரங்களுடன் நிரூபித்தார்.

 * 2025 மே 23: இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

 * 2025 மே 28: ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை விவரங்கள் ஜூன் 2-ஆம் தேதி அறிவிக்கப்படும் என உத்தரவிடப்பட்டது.

குற்றவாளி மற்றும் தீர்ப்பு

 * குற்றவாளி: ஏ. ஞானசேகரன் (37), ஒரு பிரியாணி கடைக்காரர். இவர் மீது பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல், சட்டவிரோத சிறைவைப்பு, அச்சுறுத்தல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. ஞானசேகரன் ஏற்கனவே திருட்டு, ஆள் கடத்தல் போன்ற பல வழக்குகளில் தொடர்புடையவர்.

 * தீர்ப்பு: 2025 ஜூன் 2 அன்று, ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர் குறைந்தது 30 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்றும், ₹90,000 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. பொதுவாக, இதுபோன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனையில் சலுகைகள் (remission) வழங்கப்படும். ஆனால், ஞானசேகரனுக்கு சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இது அரிதான வழக்குகளில் மட்டுமே எடுக்கப்படும் ஒரு கடுமையான முடிவு எனப் பார்க்கப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்

 * துரித நீதி: இந்த வழக்கில், மாணவி புகார் அளித்த 157 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு போன்ற பல ஆண்டுகள் நடந்த வழக்குகளுடன் ஒப்பிடுகையில், மிக விரைவான நடவடிக்கை எனப் பாராட்டப்படுகிறது.

 * பாதிக்கப்பட்டவரின் தைரியம்: பாதிக்கப்பட்ட மாணவி, ஞானசேகரன் வீடியோ கசிவு மிரட்டல் விடுத்தபோதும், பயப்படாமல் துணிச்சலாக புகார் அளித்து, நீதி கிடைக்க உறுதுணையாக இருந்தார்.

 * அரசு மற்றும் காவல்துறையின் நடவடிக்கை: தமிழக அரசு மற்றும் காவல்துறையின் விரைவான நடவடிக்கை, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்தது, மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது போன்றவை இந்த வழக்கில் விரைவான தீர்ப்பு கிடைக்க முக்கிய காரணங்களாக அமைந்தன.

இந்தத் தீர்ப்பு, கல்வி வளாகங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான கடுமையான செய்தியை அனுப்புவதாகக் கருதப்படுகிறது.  இருப்பினும்  முக்கிய குற்றவாளிகள்  விசாரணை வலயத்திற்குள் வரவே இல்லை என்று பா ஜ க  தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெறிவித்துள்ளார் . மேலும் இனியும் யார் அந்த சார் கேள்வி தொடரும் எனவும் அறிவித்திருந்தார்       அண்ணாமலை ,

 காவல்துறை மீதான குற்றச்சாட்டுகள்:

 * FIR வேண்டாம் என அறிவுறுத்தியது: அண்ணாமலை தனது பேட்டியில், டிசம்பர் 24 (சம்பவம் நடந்த அடுத்த நாள்) அன்று இரண்டு காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவியைச் சந்தித்து, FIR பதிவு செய்ய வேண்டாம் என்றும், FIR பதிவு செய்தால் அவரது வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது மாணவியின் நலனை விட, வழக்கின் தீவிரத்தைக் குறைப்பதற்கான ஒரு முயற்சியாகவே அவர் சித்தரித்தார்.

 * ஆதாரம் அழிப்பு: சம்பவத்திற்குப் பிறகு, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது குறித்து அண்ணாமலை சந்தேகம் எழுப்பினார். இது ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக இருக்கலாம் என்றும், ஞானசேகரன் கைது செய்யப்பட்ட பின்னர் ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், கோட்டூர் சண்முகம் (திமுக நிர்வாகி), அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி நடராஜன் ஆகியோருடன் தொடர்பில் இருந்து, சிசிடிவி காட்சிகளை அழித்ததாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

 * திசை திருப்பும் முயற்சி: ஞானசேகரனின் பின்னணி, திமுக நிர்வாகிகளுடனான தொடர்பு, மற்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீதான குற்றச்சாட்டுகள் ஆகியவை வழக்கை திசை திருப்பும் முயற்சிகள் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். காவல் துறையின் விசாரணை சரியான திசையில் செல்லவில்லை என்றும், யாரையோ காப்பாற்றும் நோக்கில் இந்த வழக்கு கையாளப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

 * CDR தகவல்கள்: அண்ணாமலை தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, சம்பந்தப்பட்ட நபர்களின் தொலைபேசி அழைப்பு விவரங்கள் (CDR) குறித்து குறிப்பிட்டிருக்கிறார். கோட்டூர் சண்முகம், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன், மற்றும் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்த CDR தகவல்கள் அனைத்தும் காவல்துறையிடம் உள்ளன என்றும், இதை ஏன் முதலமைச்சர் மறைக்கிறார் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. இருப்பினும், அண்ணாமலை தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக வழங்கிய சில தகவல்கள் தொடர்பாக, கோட்டூர் சண்முகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் ஆகியோர் அண்ணாமலை மீது மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.                                                                                                                                                                          வழக்கில் குற்றவாளி தரப்பு  மேல்முறையீடு செய்ய  வாய்ப்புள்ளதா  :

இந்திய குற்றவியல் நீதி அமைப்பில், கீழமை நீதிமன்றங்களின் தீர்ப்புகள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றன.

 .அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை                                         வழக்கில் மேல்முறையீடு செய்ய நிச்சயம் வாய்ப்புள்ளது. இந்திய குற்றவியல் நீதி அமைப்பில், கீழமை நீதிமன்றங்களின் தீர்ப்புகள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றன.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள்:

 * குற்றவாளி ஞானசேகரன் தரப்பில்:

   * குற்றவாளி ஞானசேகரன், சென்னை மகளிர் நீதிமன்றத்தின் ஆயுள் தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முழு உரிமை உண்டு.

   * அவர் தனது தண்டனை மிகக் கடுமையானது என்றோ, அல்லது கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆதாரமற்றது என்றோ, அல்லது விசாரணை நடைமுறையில் ஏதேனும் பிழை ஏற்பட்டது என்றோ வாதிடலாம்.

   * பொதுவாக, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர் மேல்முறையீடு செய்வது வழக்கம்.


   * உயர் நீதிமன்றத்திலும் தீர்ப்பு அவருக்கு எதிராக வந்தால், அடுத்தகட்டமாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உண்டு.

 * குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது என்று அரசுத் தரப்பு (தமிழக அரசு) கருதினால், அவர்களும் மேல்முறையீடு செய்யலாம். ஆனால், இந்த வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, குறைந்தது 30 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்றும், சலுகைகள் மறுக்கப்பட்டு கடுமையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு மிகக் குறைவு. பொதுவாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டாலோ அல்லது குறைந்த தண்டனை வழங்கப்பட்டாலோ மட்டுமே அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்யும்.

மேல்முறையீட்டு செயல்முறை எப்படி இருக்கும்?

 * மேல்முறையீட்டு மனுவில், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ள பிழைகள் அல்லது குறைகளை சுட்டிக்காட்டி வாதிடுவார்கள்.

 * உயர் நீதிமன்றம் (அல்லது உச்ச நீதிமன்றம்) கீழ் நீதிமன்றத்தின் அனைத்து ஆவணங்கள், சாட்சியங்கள், ஆதாரங்கள் அனைத்தையும் மீண்டும் ஆய்வு செய்யும்.

 * இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்டு, புதிய தீர்ப்பை வழங்கும்.

 * மேல்முறையீட்டு நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்யலாம், மாற்றலாம், அல்லது ரத்து செய்து புதிய விசாரணையை நடத்த உத்தரவிடலாம்.


இந்த வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளதால், அவர் நிச்சயமாக மேல்முறையீடு செய்ய முயற்சிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மேல்முறையீடு எந்த அளவுக்கு விரைவாக நடைபெறும் அல்லது அதில் என்ன மாதிரியான முடிவுகள் வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

11 ஆண்டுக்கால டிஜிட்டல் இந்தியா திட்டம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைத்துள்ளது : பிரதமர்

                                                


 தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் தற்சார்பு நிலையை அடைவதற்கு நாட்டில் உள்ள  இளம் கண்டுபிடிப்பாளர்கள் ஆற்றிய முக்கியப் பங்களிப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில், டிஜிட்டல் இந்தியா திட்டமானது இளைஞர்கள் புதுமைகளைப் படைப்பதற்கு அதிகாரம் அளித்துள்ள தாகவும் அவர் கூறினார். இது உலக அளவில் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதாக உள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில், தொழில்நுட்பப் பயன்பாடு நாட்டு மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்கியுள்ளதாக திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். சேவைகளில் வெளிப்படைத்தன்மை  அதிகரிக்க இந்தத் திட்டம் வகை செய்துள்ளதாகவம் அவர் கூறினார்.

மைகவ் இந்தியா தளத்தில் உள்ள பதிவுகளுக்கு சமூக ஊடக எக்ஸ் தளம் மூலம் பதிலளித்துள்ள திரு நரேந்திர மோடி பதிவிட்டிருப்பதாவது:

"நாட்டில் உள்ள இளைஞர்கள், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர். இது தற்சார்பு இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்கும் தொழில்நுட்பத்தில் உலகின் வலிமையான நாடாக இந்தியா உருவெடுப்பதற்கும் வழி வகுத்துள்ளது. இது சுயசார்புடையதாகவும் உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாகவும் மாறுவதற்கான நமது முயற்சிகளை வலுப்படுத்துகிறது.

"தொழில்நுட்பத்தின் வலிமையை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்கப்படுகின்றன. சேவை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இதன் மூலம் அதிகரித்துள்ளது. மேலும் தொழில்நுட்பப் பயன்பாடு ஏழைமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த  வழி வகுத்துள்ளது".இவ்வாறு  பிரதமர் கூறியதாக , மத்திய செய்தி தொகுப்பு கூறுகிறது .






Wednesday, 11 June 2025

கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைஃப்' (Thug Life) திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவது தொடர்பாக எழுந்த கன்னட மொழி சர்ச்சை விவகாரம் நிலுவை,

  


கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து அளித்த கருத்து, அது ஏற்படுத்திய சர்ச்சை, மற்றும் தற்போதைய நிலவரம் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

கமல்ஹாசன் அளித்த கருத்து:

'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசியபோது, "உயிரே, உறவே, தமிழே எனப் பேச்சை ஆரம்பித்தேன். தமிழில் இருந்து பிறந்து தான் உங்கள் பாஷையும்.. எனவே நீங்களும் அதில் உட்படுவீர்கள்" என்று கன்னட நடிகர் சிவராஜ்குமார் முன்னிலையில் கூறினார். இந்தக் கருத்துதான் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.கமல்ஹாசனின் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக, வி.சி.க தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தமது கருத்துகளை வெளிப்படுத்தினர்.

சர்ச்சையும் அதன் விளைவுகளும்:

 * கடும் எதிர்ப்பு: கமல்ஹாசனின் இந்தக் கருத்து கன்னட அமைப்புகளாலும், அரசியல் தலைவர்களாலும் (கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக தலைவர் பி. வை. விஜயேந்திரா உட்பட) கடுமையாக எதிர்க்கப்பட்டது. கன்னட மொழியை அவமதிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

 * மன்னிப்பு கேட்க கோரிக்கை: கர்நாடக திரைப்பட வர்த்தக சபை மற்றும் கன்னட அமைப்புகள் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. மன்னிப்பு கேட்காவிட்டால் 'தக் லைஃப்' திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் எச்சரித்தன.

 * கமலின் நிலைப்பாடு: கமல்ஹாசன் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். "நான் தவறு செய்திருந்தால், மன்னிப்பு கேட்பேன். இல்லையென்றால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். இது என்னுடைய வாழ்க்கை முறை, தயவுசெய்து இதில் தலையிடாதீர்கள்" என்று தெரிவித்தார். மேலும், "அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது" என்றும் குறிப்பிட்டார்.

 * நீதிமன்ற வழக்கு: 'தக் லைஃப்' படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு பாதுகாப்பு கோரி ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

 * நீதிமன்றத்தின் கருத்துக்கள்: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். நாகபிரசன்னா, "இந்த நாடு மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொது வெளியில் இருக்கும் ஒரு நபர் இவ்வாறு பேசக் கூடாது" என்று கூறினார். மேலும், "கர்நாடகா மக்கள் மன்னிப்பை மட்டுமே கேட்கிறார்கள். தற்போது நீங்கள் பாதுகாப்புத் தேடி இங்கே வந்திருக்கிறீர்கள். தற்போதைய சூழ்நிலை கமல்ஹாசனால் உருவாக்கப்பட்டது. நீங்கள் கர்நாடக மக்களின் உணர்வுகளைக் குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள். எந்த அடிப்படையில் இதைச் செய்தீர்கள்? நீங்கள் வரலாற்றாய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா?" என்றும் கேள்வி எழுப்பினார். மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

நடைமுறை நிலவரம் (தற்போதைய சூழல்):

 * படம் வெளியாகவில்லை: கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்து, 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் ஜூன் 5ஆம் தேதி வெளியான படம், கர்நாடகாவில் வெளியாகவில்லை.

 * நீதிமன்ற ஒத்திவைப்பு: கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 13, 2025 அன்று ஒத்திவைத்துள்ளது. எனவே, அடுத்த விசாரணை வரை கர்நாடகாவில் 'தக் லைஃப்' பட வெளியீடு குறித்த தெளிவு இல்லை.

 * வருவாய் இழப்பு: கர்நாடகாவில் படம் வெளியாகாததால், படக்குழுவுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 * பேச்சுவார்த்தைக்குத் தயார்: கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் நரசிம்மலு, கமலுடன் பேச்சுவார்த்தை நடத்தி 'தக் லைஃப்' படத்தை வெளியிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சுருக்கமாகச் சொல்லப்போனால், கமல்ஹாசனின் கன்னட மொழி குறித்த கருத்து கர்நாடகாவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அவர் மன்னிப்பு கேட்க மறுத்ததால், அவரது 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் அடுத்த விசாரணைக்கு ஒத்திவைத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தின் இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை.

ஆர்.சி.பி-யின் (RCB) முதல் கோப்பை வெற்றி: சின்னசாமி மைதானத்தில் நடந்த சோகமான நிகழ்வுகள்

 ஆர்.சி.பி அணி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)முதல் ஐபிஎல் கோப்பை  18 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, ஆர்.சி.பி அணி இறுதியாக 2025 ஐபிஎல் கோப்பையை வென்றது. (கடந்த ஐபிஎல் சீசன் 2025-இல் நடந்தது).ஆர்.சி.பி அணி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) ஐபிஎல் கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட "வெற்றிக்கூட்டம்" நிகழ்ச்சியில் நடந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய தகவல்கள் இங்கே:

சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணி ஐபிஎல் கோப்பையை வென்றதை கொண்டாடியபோது ஏற்பட்ட துயரச் சம்பவமும் அதன் தொடர் நிகழ்வுகளும் குறித்த விரிவான தகவல்கள் இதோ:

சம்பவம்:

 * தேதி: ஜூன் 4, 2025 அன்று, ஆர்.சி.பி அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றதை கொண்டாட பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஒரு பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

 * கூட்ட நெரிசல்: ஆயிரக்கணக்கான ரசிகர்கள், குறிப்பாக இலவச டிக்கெட் வதந்தி பரவியதால், ஸ்டேடியத்தின் நுழைவாயில்களில் ஒரே நேரத்தில் நுழைய முயன்றனர். இதன் விளைவாக கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

 * உயிரிழப்புகள்: இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைக்கு விரைவாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

 * கொண்டாட்டம் ரத்து: இந்த சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்ட ஆர்.சி.பி வெற்றி கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டு, ஒருசில நிமிடங்களில் எளிமையாக முடித்துக்கொள்ளப்பட்டது. விராட் கோலி மற்றும் கேப்டன் ரஜத் படிதார் ஆகியோர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு வெளியேறினர்.

அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் விசாரணையின் போக்கு:

 * முதல்வர் சித்தராமையா வருத்தம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.

 * நிதியுதவி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆரம்பத்தில் தலா ₹10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், இந்த தொகை தலா ₹25 லட்சமாக உயர்த்தப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு அரசு இலவச சிகிச்சை அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 * தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்: உயிரிழந்தவர்களில் ஒரு பெண் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காமாட்சி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 


மற்றவர்கள் பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.


 * இழப்பீடு:

 * உயர் நீதிமன்றம் தலையீடு: கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, மாநில அரசுக்கும், கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கும் (KSCA) நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

 * அதிகாரிகள் நீக்கம்/பணியிடை நீக்கம்: இந்த சம்பவத்தில் காவல்துறையின் கவனக்குறைவு மற்றும் பொறுப்பின்மை காரணமாகவே விபத்து ஏற்பட்டதாகக் கூறி, பெங்களூரு காவல் ஆணையர் பி. தயானந்த் உட்பட 5 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

 * விசாரணைக் குழு: இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி குன்ஹா தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீஸ் விசாரணையும் நீதிபதி விசாரணையும் ஒரே நேரத்தில் நடக்கும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.

 * FIR பதிவு: ஆர்.சி.பி அணி நிர்வாகம், டி.என்.ஏ நிகழ்வு மேலாளர்கள் (DNA Event Manager), கே.எஸ்.சி.ஏ நிர்வாகக் குழு (KSCA Administrative Committee) மற்றும் பிறர் மீது க்யூபன் பார்க் காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

 * கைதுகள்: ஆர்.சி.பி அணியின் சந்தைப்படுத்தல் மற்றும் வருவாய் பிரிவின் தலைவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 * சின்னசாமி ஸ்டேடியம் இடமாற்றம்? கூட்ட நெரிசலின் தீவிரத்தையடுத்து, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தை வேறு இடத்திற்கு மாற்ற கர்நாடக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பொதுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தொடர் நிகழ்வுகள்:

 * விராட் கோலி மீது புகார்: சமூக ஆர்வலர் எச்.எம். வெங்கடேஷ், விராட் கோலி ஐபிஎல் சூதாட்டத்தை ஊக்குவித்ததாகக் கூறி அவர் மீது புகார் அளித்துள்ளார்.

 * அரசியல் மோதல்: இந்த துயர சம்பவம் அரசியல் மோதலாக மாறியுள்ளது. முதல்வர் சித்தராமையா தனிப்பட்ட முறையில் பொதுமக்களை வெற்றி கொண்டாட்டங்களுக்கு அழைப்பு விடுத்ததாக ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் குடிமக்களைப் பாதுகாக்கும் கடமையில் தவறிவிட்டதாகவும், தவறான நிர்வாகத்திற்குப் பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் புகார் கூறப்பட்டுள்ளது.

 * முதல்வர் விளக்கம்: ஆர்.சி.பி கொண்டாட்ட நெரிசல் குறித்து தனக்கு 2 மணிநேரம் கழித்துதான் தகவல் கிடைத்ததாக முதல்வர் சித்தராமையா விளக்கமளித்துள்ளார்.

இந்த சம்பவம் கர்நாடகாவிலும், தேசிய அளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட மேலாண்மையில் உள்ள குறைபாடுகள் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. விசாரணை முடிவுகளின் அடிப்படையில் மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு சேவை இல்லத்தில் கால்களை முறித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை.-காவலாளிமீது போக்சோ வழக்குப் பதிவு.

 





சிட்லபாக்கம் அரசு சேவை இல்லத்தில் தங்கியிருந்த 13 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விவரங்கள் இங்கே:

நடந்த சம்பவம்

 * பாதிக்கப்பட்ட மாணவி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, தனது தந்தையை இழந்த நிலையில், சமீபத்தில் தாம்பரம், சானடோரியத்தில் உள்ள இந்த அரசு சேவை இல்லத்தில் தங்கி குரோம்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.

 * கொடுமை நடந்த நாள்: 

கடந்த ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை என்பதால் மற்ற மாணவிகள் ஊருக்குச் சென்றுவிட, இந்தச் சிறுமி மட்டும் விடுதியில் தனியாகத் தங்கியிருந்தார்.

 * குற்றச் செயல்: 

அதிகாலை நேரத்தில், முகமூடி அணிந்த ஒரு நபர் சிறுமி படுத்திருந்த அறைக்குள் நுழைந்து, அவரது முகத்தை மூடி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். சிறுமி சத்தம் போட்டு தப்பித்து ஓட முயன்றபோது, அந்த நபர் சிறுமியைத் தாக்கி, அவரது இரு கால்களையும் முறித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 * மருத்துவமனையில் அனுமதி: 

வலி தாங்க முடியாமல் மாணவி கூச்சலிட்டதால், அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 * மருத்துவரின் தகவல்: 

மருத்துவரிடம் சிறுமி தவறி விழுந்து காயம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், மருத்துவர் சிறுமியின் கால்கள் முறியும் அளவுக்கு என்ன நடந்தது என்று விசாரிக்க, சிறுமி நடந்த கொடூரத்தை கண்ணீர்மல்கத் தெரிவித்துள்ளார்.

காவல் துறை நடவடிக்கை

 * காவல்துறை விசாரணை:

 மருத்துவர் அளித்த தகவலின் அடிப்படையில், சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 * குற்றவாளி கைது: 

விசாரணையில், சிட்லபாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த 50 வயதான மேத்யூ என்ற விடுதி காவலாளிதான் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்த விடுதியில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். மேத்யூ மது போதையில் இருந்தபோது இந்தச் செயலில் ஈடுபட்டதும், மாணவி புதிதாகச் சேர்ந்தவர் என்பதால் வெளியில் யாரிடமும் சொல்லமாட்டார் என்று எண்ணி இவ்வாறு செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 * போக்சோ சட்டம்: 

மேத்யூ மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைகளும் விமர்சனங்களும்

 * மறைக்க முயற்சி:

 இந்தச் சம்பவம் நடந்த பிறகு, விடுதி கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் இந்த பாலியல் வன்கொடுமையை மறைக்க முயன்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. "தவறி விழுந்து காயம்" என்று கூறுமாறு மாணவியை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

 * அரசு விடுதிகளில் பாதுகாப்பு: அ

ரசு சேவை இல்லங்கள் மற்றும் விடுதிகளில் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு விடுதிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யவும், பெண் காவலர்களை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.







Wednesday, 4 June 2025

35 வருடமாக பேசி வந்ததை ஒரே பாடலில் பாடி விடுகிறீர்கள், நீங்கள் பேசும் அரசியல் நன்றாக இருக்கிறது - திருமாவளவன் பாராட்டு .




 தற்போது சமூக வலைதளங்களிலும், செய்தி ஊடகங்களிலலும் அதிகமாக அடிபட்ட பெயர் 'வேடன்'. 

யார் இந்த வேடன் கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகர் வேடன்,

கடந்த ஏப்ரல் மாதம், கஞ்சா வைத்திருந்ததாக கூறி வேடனை கொச்சியில் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் சில மணி நேரத்திலேயே சிறுத்தை புலியின் பல் பொருத்தப்பட்ட செயின் அணிந்திருந்ததாக கேரள வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். எர்ணாகுளம் பெரும்பாவூர் மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் வேடனுக்கு ஜாமீன் வழங்கியது.

 வேடன்

வேடன்  அம்மா  இலங்கையைச் சேர்ந்தவர்  அப்பா  கேரளாவைச் சேர்ந்த மலையாளி தலித் சமூகம். கேரளாவின் திருச்சூரில் பிறந்தவர்  ஹிரந்தாஸ் முரளி, என்பது இவரது இயற்பெயர்  30 வயதாகும் இந்த ராப் பாடகர் வேடன் தான் சார்ந்த ஒடுக்கப்பட்ட சமூகம் குறித்து பேச வேண்டும். அது பலரது கவனத்திற்குச் செல்ல வேண்டும், என்ற எண்ணத்தில்  தான்  தனது கருத்தை வெளிபடுத்திவருகிறார் . பாடலாக பாடியவர்  தனது பாடல்களை ராப் வடிவில் அவர் மாற்றிய போது பலரது கவனமும் அவர்மீது திரும்பியது.                                    

     2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காலகட்டத்தில் 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' என்ற தனது முதல் இசை ஆல்பத்தை யூடியூபில் வெளியிட்டு புகழ் பெற்றார். இந்தப் பாடல் தீயாகப் பரவி அவரை பிரபலமாக்கியது. சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இந்தப் பாடலில் இடம்பெற்ற வரிகள் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அடுத்து 2021 ஆம் ஆண்டு, ஜோஜு ஜார்ஜ், குஞ்சாகோ போபன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'நாயாட்டு' என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்ற 'நரபலி' என்ற பாடலை பாடியிருந்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான 'நோ வே அவுட்' படத்தின் 'மரணத்தின் நிறம்' என்ற பாடலையும் பாடியிருந்தார்.

தமிழில் பெரும் வரவேற்பை பெற்ற 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தில் இடம்பெற்ற 'குத்தந்திரம்' என்ற பாடலை பாடி இருந்தார். கேன்ஸ் விழாவில் விருது பெற்று உலக அளவில் கவனம் ஈர்த்த 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தில் 'கிஸ்ஸஸ் இன் தி கிளவுட்ஸ்' பாடலையும் எழுதிப் பாடியிருந்தார்.

 2021-ஆம் ஆண்டு வேடனுக்கு எதிராக 'மீ டூ' பாலியல் புகார் முன்வைக்கப்பட்டது. தன் தவறை ஒப்புக்கொண்ட வேடன் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார். அதேபோல கடந்த ஏப்ரல் மாதம், கஞ்சா வைத்திருந்ததாக கூறி வேடனை கொச்சியில் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் சில மணி நேரத்திலேயே சிறுத்தை புலியின் பல் பொருத்தப்பட்ட செயின் அணிந்திருந்ததாக கேரள வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். எர்ணாகுளம் பெரும்பாவூர் மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் வேடனுக்கு ஜாமீன் வழங்கியது.

நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த அவர், "நான் ஒரு சிறந்த மனிதனாக மாற முயற்சிப்பேன். நான் என்னைத் திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன். என்னைக் ரசிப்பவர்கள் அனைவரும் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் நல்ல பழக்கங்கள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார். இன்னொரு பக்கம் தனது பாடல்களின் இந்து மதத்தையும், பிரதமர் மோடியையும் அடிக்கடி வேடன் அவமதிக்கிறார் என பாஜக நிர்வாகிகள் சிலர் வேடன் மீது அண்மையில் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். 

                                                         இந்த நிலையிலில்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், வேடனிடம் வீடியோ கால் வாயிலாகப் பேசி நலம் விசாரித்தார். குடும்பம் பற்றியும் விசாரித்தார். வேடன் திருச்சூரில் தனது வீடு இருப்பதாக கூறியதை அடுத்து, அடிக்கடி நான் கேரளா வருவேன் எனக் கூறினார். அப்போது திருமாவளவனை கேரளாவுக்கு வரும்போது தனது வீட்டுக்கு வருமாறு வேடன் அன்புடன் அழைத்துள்ளார்.

14 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் பேரணிக்கு வர முடியுமா என வேடனிடம் கேட்டார் திருமாவளவன். அதற்கு வேடன், தான் வர முயற்சிப்பதாக தெரிவித்தார். 35 வருடமாக பேசி வந்ததை ஒரே பாடலில் பாடி விடுகிறீர்கள், நீங்கள் பேசும் அரசியல் நன்றாக இருக்கிறது என திருமாவளவன் பாராட்டினார். அதற்கு வேடன், நான் பாடுவதற்கு தைரியம் கொடுத்ததே உங்கள் பேச்சுதான். கூடிய சீக்கிரம் நேரில் சந்திப்போம் என திருமாவளவன் வேடன் கூறியுள்ளார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதேசமயம் வேடனுக்கு இவரது பாடல்கள்  சமூக வலைதளங்களிலும் இளைஞர்கள் மத்தியிலும்  ஆதரவு குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.   


  

வேலூரில் அதிர்ச்சி! பிறந்த 6 நாளான குழந்தையின் கட்டைவிரலை வெட்டிய செவிலியர்! நடந்தது என்ன?

         வேலூர்: அரசு மருத்துமவனையில்பிறந்த 6 நாளான  குழந்தையின் கட்டை விரலை,  தனது கவனக் குறைவால் குழந்தையின் கட்டை விரலை  தவறுதலாக வெட்டிய செவிலியர் அருணா தேவி .  இந்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ,பயத்தையும்   ஏற்படுத்தியுள்ளது.
       வேலூர் அரசு மருத்துவமனையில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம், தமிழக அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளில் ஒரு பகுதி மட்டுமே.  பொதுவாக  அரசு மருத்துவமனையில் , வரும் ஏழை மக்கள் அவமதிக்கப்படுவதும் ,  மாற்றி அறுவை சிகிச்சை  செய்வதும்  ,  எய்ட்ஸ் இரத்தம் கார்பினிகளுக்கு மாற்றி  ஏற்றியதும் ,பல இடங்களில் மறுத்துவமனைகளில்  மருத்துவர்கள்  இல்லை என்கிற அவலம்  ,  பணியாளர்கள்   ஊசி  போட்டு  குழந்தைகளுக்கு ஏற்பட்ட உயிர்  இழப்பு , மருத்துவமனையில்  சுத்தமான,சூழலோ, கழிவரையோ இல்லை  என்பன   போன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து  நாம்  பார்த்து கொண்டிருக்கிறோம் . ஆனால்  இது  மிகமிக கவனமாக இருக்கவேண்டிய இடம் . பச்சிளம் பிஞ்சுகள்  ஐயோ நினைக்கவே பதறுகிறது! . இனி அந்த குழந்தையின் கட்டைவிரல்? அப்படியென்ன கவனக்குறைவு .

நடந்தது என்ன?

    வேலூர் மாவட்டம் முள்ளிபாளையத்தை சேர்ந்தவர்கள் விமல்ராஜ் (30), நிவேதா (24) தம்பதி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிவேதாவிற்கு கடந்த 24-ஆம் தேதி அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து நிவேதா, குழந்தையுடன் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், குழந்தையின் கையில் குளுக்கோஸ் மற்றும் மருந்து செலுத்துவதற்காக போடப்பட்டிருந்த ஊசியை செவிலியர்கள் மாற்ற முயன்றுள்ளனர். ஊசி ஒட்டப்பட்டிருந்த டேப்பை கையால் அகற்றாமல், கத்தரிக்கோல் கொண்டு நீக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை செலியர் ஒருவர் வெட்டியுள்ளார் . விரல் வெட்டுப்பட்டதால் குழந்தை வலியால் கதறியது.  

                      இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் செவிலியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மருத்துவமனைக்கு வந்த குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். செவிலியர்களின் அலட்சியத்தால் மட்டுமே இந்த சம்பவம் நடைபெற்றதாக குழந்தையின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும், சம்பந்தப்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில    குழந்தையின் விரலை துண்டித்த செவிலியர் நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இல்லாத பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து  குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சமாதானம் செய்த பின் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

    இதனை அடுத்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், குழந்தையின் கையில் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்வதற்காக உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கவனக்குறைவால், பிறந்த குழந்தையின் கட்டை விரலை செவிலியர் வெட்டிய சம்பவம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.                                                                                                                                                                                      குழந்தையின் கட்டை விரலை வெட்டிய செவிலியர் மீது எடுக்கப்பட்டுள்ள மேல் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள்:
 * வழக்கு பதிவு: குழந்தையின் கட்டை விரலை வெட்டிய செவிலியர் அருணாதேவி மீது கவனக்குறைவாக செயல்பட்டதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 * துறை ரீதியான நடவடிக்கை: மருத்துவமனை நிர்வாகமும் செவிலியர் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுத்துள்ளது.
 * விசாரணை: இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 * மாவட்ட ஆட்சியர் உத்தரவு: வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். குழந்தை சிகிச்சை முடிந்து வேலூர் திரும்பியதும், மருத்துவக் குழு குழந்தைப் பெற்றோருடன் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 * செல்போன் பயன்பாடு குறித்த குற்றச்சாட்டு: சிகிச்சையின் போது செவிலியர் செல்போன் பயன்படுத்தியதாக குழந்தையின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இது நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக, துண்டிக்கப்பட்ட குழந்தையின் கட்டை விரலை மீண்டும் சேர்க்க முடியாது என்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக செயல்பட்ட செவிலியர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட குழந்தையின் உறவினர்களுடைய கோரிக்கையாக உள்ளது.                                                                                                                                                                                              பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் சந்திக்கும் முக்கியப் பிரச்சனைகள் சிலவற்றை இங்கே காணலாம்:
1. மருத்துவ மற்றும் செவிலியர் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு:
 * சிகிச்சை குறைபாடுகள்: சில சமயங்களில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாதது அல்லது தவறான சிகிச்சை அளிக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. வேலூர் சம்பவம் மற்றும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்ட சம்பவம் இதற்கு உதாரணங்கள்.
 * அலட்சியம்: நோயாளிகளின் மீது போதிய அக்கறை காட்டாதது, ஊழியர்களின் அலட்சியம், செல்போன் பயன்பாடு போன்றவை சிகிச்சையின் தரத்தைப் பாதிக்கின்றன.
 * தகவல் பரிமாற்ற குறைபாடு: நோயாளிகள் அல்லது அவர்களது உறவினர்களுக்கு சிகிச்சை குறித்து உரிய தகவல்கள் அளிக்கப்படாமல் இருப்பது.
2. மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை:
 * மருத்துவர் பற்றாக்குறை: பல அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதால், இருக்கும் மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து, சிகிச்சையின் தரம் குறைகிறது.
 * செவிலியர்கள் பற்றாக்குறை: போதிய செவிலியர்கள் இல்லாததும், இருக்கும் செவிலியர்களுக்கு அதிக பணிச்சுமை இருப்பதும் நோயாளிகளை முறையாக கவனிக்க இயலாமல் செய்கிறது.
 * பணியாளர் பற்றாக்குறை: துப்புரவு மற்றும் பிற அத்தியாவசியப் பணிகளுக்கு போதிய பணியாளர்கள் இல்லாததால் மருத்துவமனையின் சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது.
3. மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை:
 * மருந்து பற்றாக்குறை: அத்தியாவசிய மருந்துகள் பல சமயங்களில் அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை. இதனால் நோயாளிகள் வெளியிலிருந்து மருந்துகளை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.
 * மருத்துவ உபகரணங்கள் குறைபாடு: நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லாதது அல்லது இருக்கும் உபகரணங்கள் முறையாகப் பராமரிக்கப்படாதது சிகிச்சையின் தரத்தை பாதிக்கிறது.
 * சோதனை வசதிகள்: சில சமயங்களில், நோய்களைக் கண்டறியத் தேவையான அடிப்படை சோதனை வசதிகள் (ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் போன்றவை) மருத்துவமனைகளில் இருப்பதில்லை அல்லது நீண்ட காத்திருப்பு ஏற்படுகிறது.
4. சுகாதார குறைபாடுகள்:
 * சுகாதாரமற்ற சூழல்: சில அரசு மருத்துவமனைகளில் போதிய துப்புரவு இல்லாததால், கழிவறைகள், படுக்கைகள், சுற்றுப்புறம் போன்றவை சுகாதாரமற்ற நிலையில் இருக்கின்றன. இது நோய்த்தொற்றுகள் பரவ வழிவகுக்கிறது.
 * குப்பை மேலாண்மை: மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றுவதில் உள்ள சிக்கல்கள் சுகாதாரச் சீர்கேட்டிற்கு காரணமாக அமைகின்றன.
5. கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை சேவைகள்:
 * காத்திருப்பு நேரம்: வெளிநோயாளிகள் பிரிவு, பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகள் போன்றவற்றிற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
 * கூட்ட நெரிசல்: நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், மருத்துவமனைகளில் எப்போதும் ஒருவித கூட்ட நெரிசல் நிலவுகிறது.
 * பாதுகாப்பு குறைபாடு: மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உடைமைகளின் பாதுகாப்பு சில சமயங்களில் கேள்விக்குறியாகிறது.
6. நிர்வாக சீர்கேடுகள்:
 * முறையான கண்காணிப்பு இல்லாமை: ஊழியர்களின் செயல்பாடுகளை முறையாகக் கண்காணிக்காதது, தவறுகள் நடக்க வழிவகுக்கிறது.
 * பொறுப்புக்கூறல் இல்லாமை: தவறுகள் நடந்தால், அதற்குப் பொறுப்பேற்று உரிய நடவடிக்கை எடுப்பதில் ஏற்படும் தாமதம் அல்லது அலட்சியம்.
அரசு மருத்துவமனைகள் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தாலும், மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் அவற்றின் தரத்தை பாதிக்கின்றன. இந்த பிரச்சனைகளை சரிசெய்வது, பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவையை உறுதி செய்ய மிகவும் அவசியம்

கன்னட மொழி குறித்த கமல்ஹாசனின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை - - அந்தர் பல்டி அடித்த சிவராஜ்குமார்





சென்னையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' திரைப்பட புரொமோஷன் விழாவில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்துகொண்டார். இதில் பேசிய கமல், "உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான்.எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும்  நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்" என்று தெரிவித்தார். கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கூறியதால் கமல் மீது கன்னட அமைப்புகள் கடுங்கோபத்தில்உள்ளன. இந்த விஷயத்தில் அம்மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக கைகோர்த்து கமலை விமர்சித்து வருகின்றன.

கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், "கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. பாவம் கமல்ஹாசன், அவருக்கு அது தெரியாது" என்று தெரிவித்தார். இந்நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிவராஜ்குமார் பேசியுள்ளார் அதில் " கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கமல்ஹாசன் பேசிய நிலையில் ஆதரவு. நீங்கள் கன்னட மொழிக்கு என்ன செய்துள்ளீர்கள்?" கண்டனம் தெரிவித்தவர்களுக்கு சிவராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்

"சர்ச்சை எழும்போது குரல் எழுப்பாமல் எப்போதும் கன்னட மொழியை ஊக்குவிக்க வேண்டும்" என கூறினார்.இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் நேற்று நடிகர் சிவராஜ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது

கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியதை நான் சரி என சொல்லவில்லை. கன்னடம், தமிழ் குறித்து பேசும் போது இசை வெளியிட்டு விழாவில் பங்கேற்ற நான் உண்மை தான். அந்த சந்தர்ப்பத்தில் கன்னட மொழி குறித்து அவர் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியவில்லை கன்னட மொழி மீது எனக்கு மிகுந்த கவுரவம், மரியாதை உள்ளது. எனது தந்தை கன்னட மொழி மீது வைத்திருந்த பற்று குறித்து உங்களுக்கு நன்கு தெரியும்.

நடிகர் கமல்ஹாசன் பேசிய போது, மேடையில் அமர்ந்திருந்த நான், அங்கேயே இதுபற்றி பேசாதது குறித்து கேட்கிறீர்கள். அவர் பேசியது சரியாக கேட்கவில்லை.கன்னட மொழி குறித்து பேசியது குறித்து கமல்ஹாசனிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அவர் என்ன பேசினார் என்பதை 2-வது முறையாக கேட்ட போது தான் எனக்கே புரிந்தது அவரது கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை." என கூறியுள்ளார்.இப்படி  (30.5.2025) அன்று  ஒரு கருத்தும் தெரிவித்துள்ளார்

Tuesday, 3 June 2025

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு -பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்கு செயலால் பதில் அளித்துள்ளது தமிழக காவல் துறை- முதல்வர் ஸ்டாலின்

 



பொள்ளாச்சி  வழக்கு தீர்ப்பு பற்றி முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு: தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்கு செயலால் பதில் அளித்துள்ளது தமிழக காவல் துறை. விசாரணையின்போது, உயர் நீதிமன்றமே பாராட்டும் வகையில், நியாயமாகவும், விரைவாகவும் ஐந்தே மாதத்தில் வழக்கை நடத்திமுடித்து, கடும் தண்டனை பெற்று தந்துள்ளோம். இதில் காவல் துறை சிறப்பாக செயல்பட்டதாக மகளிர் நீதிமன்றமும் பாராட்டியுள்ளது.

இளம் பெண்ணுக்கு நிகழ்ந்த அநீதியில்கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்திகொண்ட சிலரது எண்ணம் தவிடுபொடி ஆகியுள்ளது. பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என சமீபத்தில் நாம் கொண்டுவந்த சட்ட திருத்தத்துக்கு ஏற்ப, இந்த வழக்கில் எந்தசலுகையுமின்றி கடுங்காவல் தண்டனை விதித்த நீதிமன்ற தீர்ப்புக்கு நன்றி கூறி வரவேற்கிறேன்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.




தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது - மன்னிப்பு கேட்க முடியாது--கமல்

 


சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ‘‘உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது.

அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்” என்று தெரிவித்தார்.மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியிருக்கும் தக் லைஃப் திரைப்படத்துக்கு படக்குழுவே நினைத்து பார்த்திடாத ப்ரோமோஷன் கிடைத்திருக்கிறது. தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது என்று சகோதரத்துவத்துடன் கமல்ஹாசன் கூறிய கருத்து தற்போது சர்ச்சையாக மாறி நிற்கிறது. 

முதலில் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா இந்த விவகாரத்தில் கமலுக்கு கண்டனம் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து சில கன்னட அமைப்புகளும் கண்டனத்தை பதிவு செய்தன.                                                        இந்நிலையில், கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

 இந்நிலையில் கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்வில் பேசிய கமல்ஹாசன்; தமிழிலிருந்துதான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். அவர்கள் இந்த விஷயத்தில் குழப்பத்தில் உள்ளனர்.

நான் பேசியவை அனைத்தும் அன்பு மிகுதியால் வந்தவை. மொழி குறித்த வரலாறுகளை வரலாற்று அறிஞர்கள் எனக்கு கற்பித்துள்ளனர். நான் சொன்ன கருத்தை எனது பக்கம் இருந்து பார்த்தால் சரியாக தோன்றும்; நான் சொன்னதை உங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தால் அது தவறாகத்தான் தோன்றும். மொழி குறித்து அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்லியல் துறையினர்தான் விவாதிக்க முடியும். அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது. மொழி குறித்த பேச்சை அரசியலாக்க வேண்டாம். கர்நாடகத்தில் இருந்து விமர்சிப்பவர்களையும் எனது குடும்பத்தினர்களாகவே கருதுகிறேன் என்று கூறினார்.