Wednesday, 19 March 2025

மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷகாவத் ஶ்ரீரங்கத்தில் கம்பராமாயண பாராயணத்தை தொடங்கிவைத்தார்.

 மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்  அன்று (18/03/2025) திருச்சி ஶ்ரீரங்கத்தில் கம்ப ராமாயண பாராயணம் நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தார்.

இந்திய அரசு கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் தமிழ்நாட்டின் கம்பராமாயண பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் முன் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. 12-13-ம் நூற்றாண்டுகளில் வால்மீகி இராமயணத்தை தழுவி இயற்றப்பட்ட கம்பராமயணம் சிறப்பான கலாச்சாரத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. கம்பர் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் வட்டாரத்தில் உள்ள தேரெழுந்தூரில் உள்ள கம்பர் மேடு என்ற இடத்தில் பிறந்தார்.

உள்ளூர் கம்பராமாயண குழுக்களால் நடத்தப்பெற்றுவந்த தமிழ் கம்ப ராமாயண பாராயணம் காலவெள்ளத்தால் நடைமுறையில் குறையத் தொடங்கியது. தமிழ்நாட்டின் புதிய தலைமுறையினர் கம்பன் காவியத்தில் போதிய ஈடுபாடு காட்டாததால், தமிழ் கம்பராமாயணம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறதைக் காண முடிகிறது. மீண்டும் இத்தகைய கம்ப இராமயணத்தின் கலாச்சாரத்தை மீட்டுருவாக்கும் வகையில் அதற்கான துவக்கவிழா இன்று மாலை 6.00 மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு சிங்கர் கோயில் கலையரங்கில் (திருவரங்கம் கோவில் அருகில்), மாண்புமிகு மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திரசிங் ஷெகாவாத் அவர்கள்  துவக்கி வைத்தார்.  இன்று கம்பராமயண பாராயணம் நிகழ்ச்சி பல்வேறு கம்பராமாயண கழகங்களைக் சேர்ந்தோரின் வாயிலாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியிள் சுமார் 50க்கும் மேற்பட்ட கம்பராமாயண கழகங்களைச் சேர்ந்தோரும், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

வசன கவியுடன் கூடிய சீதா கல்யாண நாட்டிய நாடகமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மார்ச் 20 முதல் 29-ம் நாள் வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கம்பராமாயண பாராயாணம் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 30.3.2025 முதல் 6.4.2025 வரை கம்பர் பிறந்த கம்பர்மேட்டில் கம்பராமாயணம் தொடர்பாகன பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் மற்றும் தலைவர் தென்னகப் பண்பாட்டு மையம் அவர்களும், மாண்புமிகு மத்திய நிதித்துறை அமைச்சர் அவர்களும் கலந்து கொண்டு கம்பராமாயண நிகழ்ச்சியினை சிறப்பிக்க உள்ளார்கள்.

தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தில் கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முன்னேற்றங்கள் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு

 



சென்னையிலுள்ள தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தில் ’கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முன்னேற்றங்கள்’ எனும் தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கை நித்தி ஆயோக் உறுப்பினரும் பாதுகாப்புத் துறையில் தலைசிறந்த விஞ்ஞானியுமான டாக்டர் விஜய் குமார் சரஸ்வத்  (17.03.2025)  ன்று தொடங்கிவைத்தார்.

மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தில் இன்று தொடங்கி நாளை (மார்ச் 18) வரை நடைபெறும் இந்த சர்வதேச கருத்தரங்கில் இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்தும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கைவகுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.,

தொழில்நுட்ப பரிமாற்ற முறையில் தயாரிக்கப்பட்ட கடல் நீரில் எரியும் லாந்தன் விளக்குகள் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் நிர்வாகத்தினருக்கும் கடலில் கப்பல்களுக்கு வழிகாட்டும் மிதக்கும் வழிகாட்டி அமைப்பை (மிதக்கும் கலன்) காமராஜர் துறைமுகத்துக்கும் திரு வி கே சரஸ்வத் வழங்கினார். ரோஷினி என்ற இந்த கடல் நீரில் எரியும் லாந்தன் விளக்கு சென்னை தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தின் விஞ்ஞானி முனைவர் பூர்ணிமா ஜலிகல் அவர்களின் கண்டுபிடிப்பாகும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய நித்தி ஆயோக் உறுப்பினர் திரு வி கே சரஸ்வத், இந்தியா, 7,500 கிலோமீட்டருக்கும் அதிக நீளமுள்ள கடற்கரையை கொண்டுள்ளது என்றும் சிறப்புநிலை பொருளாதார மண்டலம் 2.02 மில்லியன் சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது என்றும் இவை நாட்டின் நீலப்பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுவதாகவும் தெரிவித்தார். இந்தியா, கடலோர காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்து வருவதாகவும், வருங்காலத்தில் மிதக்கும் சோலார் (சூரியஒளி) மின்னாற்றல் தயாரிப்பு, கடலலைகள் மூலம் மின் உற்பத்தி ஆகியவை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தவையாக திகழும் என்றும் கார்பன் உமிழ்வு மிகவும் குறைவாக இருக்குமென்றும் இத்துறையில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றும் அவர் கூறினார். 2023-2032 காலகட்டத்தில் இத்துறை 22.8% வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா 12.4 கிகா வாட் கடலலை மின்னுற்பத்தியுடன் சேர்த்து 54 கிகா வாட் பெருங்கடல் மின் உற்பத்தி செய்யும் திறனுள்ளது என்றும் அவர் கூறினார். நிகழ்ச்சியில் கருத்தரங்க மலரையும் அவர் வெளியிட்டார்.

துவக்க விழா நிகழ்ச்சியில் தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் முனைவர் பாலாஜி ராமகிருஷ்ணன் மற்றும் ஆற்றல் & நன்னீர் துறைத்தலைவர் முனைவர் பூர்ணிமா ஜலிகல், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இன்று காலை, கடல்சார் ஆற்றல் குறித்த பார்வை என்ற தலைப்பில், ஆழ்கடல் மற்றும் நீலப் பொருளாதாரத்தில் தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்ப கழகத்தின் பங்கு, இந்தியா மற்றும் உலகளவில் கடல்சார் ஆற்றலின் முக்கியத்துவம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கைகள், திட்டங்கள், சாதனைகள், சவால்கள், உலகளவில் கடல்சார் ஆற்றல் முறைகள் ஆகிய கருப்பொருள்களில் கருத்தரங்கு அமர்வுகள் நடைபெற்றன.

பிற்பகலில், அலைகள், காற்று ஆகியவற்றின் மூலமான மின் உற்பத்தி என்ற தலைப்பில், இந்தியாவில் அலைகள் மூலம் மின்சக்தி உற்பத்தி வாய்ப்புகளும், சவால்களும், இந்தியாவில் கடல்சார் எரிசக்தியின் முன்னேற்றம், இந்தியாவில் கடலோர  காற்றாலை மின்உற்பத்தி, கடலோரப்பகுதிகளில் நிலைத்தன்மையையும், நீலப்பொருளாதார வளர்ச்சியையும் நோக்கிய கடல்சார் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி கடலோரப்பகுதிகளில் அலைகள் மூலமான மின் உற்பத்தியில் மாறுபாடு ஆகிய கருப்பொருள்களில் கருத்தரங்க அமர்வுகள் நடைபெற்றன.

நாளை (18.03.2025), கடல் வெப்ப ஆற்றல் என்ற தலைப்பில் கடல்சார் அனல்மின் உற்பத்தியின் முக்கியத்துவம், கடல்சார் மின் உற்பத்தியை அடிப்படையாக கொண்ட உப்பு நீர் சுத்திகரிப்பு முயற்சிகள், ஜப்பானில் உப்புநீர் சுத்திகரிப்பில் நவீன மேம்பாடு ஆகிய கருப்பொருள்களில் விவாத அமர்வுகள் நடைபெறவுள்ளன.

அதைத் தொடர்ந்து தரநிலைப்படுத்துதலும், வணிகமயமாக்கலும்  என்ற தலைப்பில் தரப்படுத்துதலில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் பங்கு, ஆய்வகங்கள் முதல், சந்தை வரையிலான தொழில்நுட்ப வணிகமயமாக்கல் உத்திகள், கடல்சார் தொழில்துறையின் சர்வதேச தரநிலைகள் ஆகிய கருப்பொருள்களில் விவாத அமர்வுகள் இடம் பெறுகின்றன.

நிறைவாக நாளை நவீன முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் கடலோர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பில் மிதவை பொறியியல் தொழில்நுட்பம், அலைகள் மூலமான மின் உற்பத்தியில் பாரம்பரிய முறைக்கு மாற்று ஆகிய கருப்பொருள்களில் கருத்தரங்க அமர்வுகளும், பின்னர் குழு விவாதமும் நடைபெறவுள்ளன.




Thursday, 13 March 2025

தமிழகத்தில் கோவை உள்பட 8 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் .- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு




. 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.பட்ஜெட் உரையில்

கோவை உள்பட சிவங்கை, தூத்துக்குடி, தென்காசி, நாகை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் அகழாய்வுக்காக ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்படும். கடந்த ஆண்டு கலைஞர் கனவு இல்லம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக கடந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்படும். இப்பணிகளுக்காக ரூ. 3,500 கோடி ஒதுக்கப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் பழுதான வீடுகளுக்கு பதில் 25 ஆயிரம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும். இந்திய துணைக் கண்ட வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும். ஈரோடு மாவட்டம் நொய்யல், ராமநாதபுரம் நாவாய் பகுதிகளில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்.

நொய்யல் பகுதியில் ரூ.22 கோடியில் அருங்காட்சியகம். 2,329 கிராமங்களில் ரூ.1887 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்'

"மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு ரூ.2,150 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கவில்லை.மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து இதற்காக நிதியை விடுவித்துள்ளது.- பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரை .

 



    2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை தாக்கல் செய்தார்.

    பட்ஜெட் உரையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழகம் எ. பன்முக வளர்ச்சியை நோக்கி தமிழகம் முன்னேறி வருகிறது. மனிதநேயம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தமிழ்நாடு நடைபோடுகிறது. சமநிலை தவறாமல் தமிழகத்தை வழிநடத்துவோம்." எனத் தெரிவித்தார். 

    பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு ரூ.2,150 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கவில்லை. மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து இதற்காக நிதியை விடுவித்துள்ளது. இருமொழிக் கொள்கையை விட்டுத்தரமாட்டோம் என உறுதியாக உள்ள முதல்வரின் பக்கம் நின்று மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க 14 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும். நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உள்ளிட்ட 10 இடங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்." என அறிவித்தார்.

Wednesday, 12 March 2025

தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது என்ன?

 தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது


, “அநாகரிமாக போாட்டம் நடத்துகிறீர்கள் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்காக திமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்துகிறீர்கள். தர்மேந்திர பிரதான் கூறியதை திரும்ப பெற வைத்தார்கள். அவர்களிடம் பணிவுடன் ஒன்று கேட்க விரும்புகிறேன்.


ஒரு பிரபல மூத்த தலைவர் தமிழ் பற்றி கூறியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவருடைய பெயரை குறிப்பிட விரும்ப வில்லை. ஆனால் அவர் கூறியதை வாசிக்கிறேன். அவர் யார் என தமிழ் மொழியை அறிந்தவர்களுக்கு தெரியும். அவர் கூறியது கடந்த 1943-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி வெளியான ‘விடுதலை’ இதழில் வெளியிடப்பட்டது.


‘தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதை தவிர உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை. இதற்காக செலவிட்ட காலத்தை வேறு துறையில் செலவிட்டிருந்தால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும்’ என்பதை 100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் கற்ற ஒரு அனுபவ புலவர் கூறினார். தமிழை பற்றி எவ்வளவு இழிவாக அவர் கூறினார் என்பதற்கு இந்த ஒரு வரி போதும். ஆனால், அவரது போட்டோவை திமுக எம்.பி.க்கள் தங்கள் அறையில் வைத்து வழிபடுகிறீர்கள். ஆனால், அநாகரிகமாக போராட்டம் நடத்துகிறீர்கள் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்காக அவரை மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறீர்கள்.


அதே மூத்த தலைவர், ‘துக்ளக்’ பொன்விழா ஆண்டு இதழில், ‘இந்த தமிழ் மொழியானது, காட்டுமிராண்டி மொழி என நான் ஏன் கூறுகிறேன் என்று இன்று கோபித்துகொள்ளும் யோக்கியர்கள் யாரும் சிந்தித்து பேசுவதில்லை. வாய் இருக்கிறது என்று எதையாவது பேசி வயிறு வளர்ப்போம் என்பதை தவிர அறிவையோ, மானத்தையா, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமல் பேசிவருகிறார்கள். இப்படிபட்ட இவர்கள் போக்கு படியே சிந்தித்தாலும், தமிழ் மொழி 3000-லிருந்து 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி என்பதை, தமிழன் பெருமைக்கு ஒரு சாதனமாய் கொண்டு பேசுகிறார்கள்.


நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதையேதான் முக்கிய காரணமாக சொல்கிறேன். அன்றிருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாக இருக்கட்டும், அகஸ்தியனாகட்டும், மற்றும் எவன்தான் ஆகட்டும். இவர்களை பற்றி தெரிந்துகொள்ள உனக்கு புத்தியில்லாவிட்டால், இத்தமிழை பற்றி பேச நீ தகுதி உடையவனா? இவர்களை பற்றியும், இவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் பற்றியும் நீங்கள் படிக்காமல் தமிழ் பழமையான என மொழி என கூறுகிறார்கள்’ என்றார் அவர்.


தமிழ் காட்டுமிராண்டி மொழி என மீண்டும் மீண்டும் கூறியவரை இவர்கள் வழிபடுகிறார்கள்? அவரைத்தான் திராவிட இயக்கத்தின் அடையாளம் என்கிறார்கள். இவர்களின் கபட நாடகத்தை பாருங்கள். தமிழை நேசிப்பவர்கள் என கூறுபவர்கள், தமிழ் காட்டுமிராண்டி மொழி என கூறியவரை எப்படி வழிபடுகின்றனர்?


அதே நபர் , ‘தமிழ் அறிஞர்களை ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும். சமூக முன்னேற்றத்துக்கு இவர்கள் எதுவும் செய்யாததால் அவர்களை தூக்கிலிட வேண்டும். தமிழை நேசித்தவர்களுக்கு இவர்களின் பங்களிப்பு எதுவும் இல்லை’ என்று கூறினார். இது கடந்த 1967-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி வெளியான ‘விடுதலை’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய தலைவரை வழிபடுவதுதான் திாவிட மாடல்.


மேலும், அவர் கடந்த 1967-ம் ஆண்டு நடைபெற்ற உலக தமிழ் மாநாட்டில் பங்கேற்றவர்களை முட்டாள்கள் என கூறினார். இதெல்லாம் அவரின் பொன்னான வார்த்தைகள். தமிழை கற்பது எதற்கும் உதவாது, பிச்சை எடுக்க கூட உதவாது என கூறினார். இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிக்காமல், தமிழை நேசிப்பாதாக கூறும் இவர்கள், இந்தியை திணிப்பதாக கூறுகிறார்கள்.


தமிழை கற்க வேண்டும் என்றுதான் புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. ஆனால், இவர்கள் இந்தியை திணிப்பதாக கற்பனை செய்து கொண்டு, தமிழ்நாட்டில் தவறாக அரசியல் குழப்பதை ஏற்படுத்தி, தமிழக குழந்தைகள் கல்வி கற்கும் உரிமையை மறுக்கிறார்கள். தமிழ் காட்டுமிராண்டி மொழி என கூறியவரை வழிபடுகிறார்கள். இதையெல்லாம் நான் நாடளுமன்றத்தில் எடுத்து சொல்வேன் என்ற பயம் காரணமாக, தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை விட்டு ஓடிவிட்டனர்.


ஆனால், இவர்கள் இதை டி.வி.யில் பார்ப்பார்கள் என எனக்கு தெரியும். தமிழ்நாட்டு மக்களும் இதை டி.வி.யில் பார்ப்பார்கள். இவர்களின் நடிப்பை எடுத்துரைக்க வேண்டும். பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை ஏழை, எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும் என நான் தமிழக மக்களுக்கு கூற விரும்புகிறேன்” என்று நிர்மலா சீதாராமன் பேசினார்.

“தமிழைக் காட்டுமிராண்டி மொழி என பெரியார் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே மத்திய அரசின் நிதியமைச்சருக்கு வருத்தமா?-தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கேள்வி

 சென்னை: “தமிழைக் காட்டுமிராண்டி மொழி என பெரியார் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே மத்திய அரசின் நிதியமைச்சருக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழகத்தில் திணிக்காமல் இருக்கலாமே?” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழைக் காட்டுமிராண்டி மொழி என பெரியார் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே மத்திய அரசின் நிதி அமைச்சருக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழகத்தில் திணிக்காமல் இருக்கலாமே? முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரை தமிழகம் இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.





பல்வேறு சம்பவங்களை நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் பட்டியலிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுதான் திராவிட மாடலின் நாகரீகமா? என அடுக்கடுக்கான கேள்வி

டெல்லி:  12 /3/ 2025  நாடாளுமன்ற லோக்சபாவில் பேசிய திமுக எம்பி ராணி ஶ்ரீகுமார், 4,000 ஆண்டுகால நாகரீகப் பெருமிதம் கொண்ட தமிழருக்கு நாகரீகம் பற்றி யாரும் பாடம் எடுக்க தேவை இல்லை என  கூறினார்.




                இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் பதிலளித்து பேசியதாவது: நாம் நாகரீகம் தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். 4,000 ஆண்டுகளுகும் மேலாக நாகரீக மக்களாக வாழும் எங்களுக்கு நாகரீகம் பற்றி பாடம் எடுக்க வேண்டாம் என்கிறார்கள். தமிழர்கள் நாகரீகம் குறித்தும் மணிப்பூர் பற்றியும், நிர்பயா நிதி பற்றியும், இங்கே பேசிய உறுப்பினர்(திமுக ராணி ஶ்ரீகுமார்) தெரிவித்தார். 

    மேலும் திராவிட மாடல் அரசு பற்றியும் பெண்களுக்கு இலவச பேருந்து பயண அனுமதி பற்றியும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டார். 

 ஜெயலலிதாவின் புடவை கிழிப்பு

 4,000 ஆண்டுகள் நாகரீகம் இருக்கக் கூடிய தமிழ்நாட்டில் இவங்களைச் சேர்ந்தவங்க (திமுக), மார்ச் 1989-ல் சட்டசபையில் நாகரீகம், பெண் உரிமை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் பற்றி சொன்னவர்கள், ஜெயலலிதா அம்மையார் அவர்களுடைய புடவையை பிடித்து இழுத்தவங்க இவங்கதான்.. (திமுக).. எப்படி சொல்லலாம் என சப்தம் போடலாம் அவங்க.. ஆனால் அதுதான் உண்மை.                                                                            


ஜெயலலிதாவின் புடவை கிழிப்பு 4,000 ஆண்டுகள் நாகரீகம் இருக்கக் கூடிய தமிழ்நாட்டில் இவங்களைச் சேர்ந்தவங்க (திமுக), மார்ச் 1989-ல் சட்டசபையில் நாகரீகம், பெண் உரிமை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் பற்றி சொன்னவர்கள், ஜெயலலிதா அம்மையார் அவர்களுடைய புடவையை பிடித்து இழுத்தவங்க இவங்கதான்.. (திமுக).. எப்படி சொல்லலாம் என சப்தம் போடலாம் அவங்க.. ஆனால் அதுதான் உண்மை.

பெண்ணின் புடவையை பிடித்து இழுத்ததுதான் நாகரீகமா? 4,000 ஆண்டுகால நாகரீகம்தான்.. நாம் அனைவரும் பெருமிதப்படுகிறோம்... எங்களுக்கு நாகரீகம் பற்றி கற்றுத் தர வேண்டாம் என்று சொல்லுகிற உறுப்பினர்களே 1989-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக சட்டசபையில் நடந்ததுதான் நாகரீகமான செயலா?சட்டசபையில் ஒரு பெண்ணின் புடவையை அவங்களில் ஒருவர் (திமுக) பிடித்து இழுத்தது.. நான் யாருடைய பெயரையும் சொல்லவில்லை என்பதுதான் நாகரீகமா என கேட்கிறேன். இதுதான் நாகரீகமா? பண்பாடு? கலாசாரம்?


பெண்களுக்கு இலவச பேருந்து பயண அனுமதி தந்தால் மட்டும் போதாது.. பெண்களை அவமதிக்காமல் இருக்க வேண்டும். அதை நீங்க செய்யலை (திமுக). 

அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்காரம் 

அதே மாதிரி, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 2024 டிசம்பரில் கொடூரமான பலாத்காரம் நடந்திருக்கு.. அவளும் ஒரு பெண்.. அதுவும் நாகரீகத்துக்கு எதிர் மறையாக இருக்கக் கூடிய விஷயம்தான். இதுல நீங்க யாருக்கு உபதேசம் செய்யாதீன்னு சொல்றீங்க? 

திருச்சி பலாத்காரம்

 திருச்சியில் 9 வயது பள்ளி குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரே என்ன நடவடிக்கை எடுத்தீங்க? நீங்க கலாசாரம், பண்பாடு பற்றி பாடம் எடுக்க வேண்டாம் என்கிறீர்கள்? இதுதான் திராவிட மாடலா?


தஞ்சாவூர் கூட்டு பலாத்காரம் 

தஞ்சாவூர் அருகே 22 வயது இளம் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். திராவிட மாடல் திமுக அரசில் இப்படியெல்லாம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் இத்தனைக்கும் மேலாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளத. கள்ளக்குறிச்சியில் 68 பேர் கள்ளச்சாராயம் குடித்து மரணம் அடைந்தனர்; ஆனால் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


சாதி ஆணவக் கொலைகள் 

தமிழ்நாட்டில் 28 சாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளன; சமத்துவம் பேசுகிற திராவிட மாடல் ஆட்சியில் வெவ்வேறு ஜாதிகளில் திருமணம் செய்து கொண்டால் பொதுமக்கள் மத்தியிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்படுகின்றனர். இதுதான் திராவிட மாடல்? போதைப் பொருள் கடத்தலும் முக்கிய குடும்பமும் தமிழ்நாட்டில் போதை சார் வன்முறைகள் அதிகரித்துள்ளன; எங்கள் பிள்ளைகள் போதைக்கு அடிமையாகிவிட்டதாக பெற்றோர்கள் கதறி அழுகின்றனர்; போதைப் பொருள் வாங்க பணம் தர மறுத்த அம்மாக்களை கொலை செய்து இருக்கின்றனர். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்- அவர் மிக முக்கியமான குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தவர். இது பற்றி திமுக தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசியதற்கு தமிழ்நாட்டில் இருந்து திமுக சார்பில்பல விதத்தில் எதிர்ப்புகள் ந்துகொண்டே இருக்கின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் ட்டுமா நடக்கிறது? .அது இந்தியா முழுவதும் நடக்கிறது.இங்கு நடவடிக்கை உடனே எடுக்கப்படுகிறது.ஆனால் காஷ்மீர் ஹிந்து கோவில் கருவறையில் 6 வயது சிறுமி 7 பேரால் பூசாரி தலைமையில் ஒரு வாரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டதற்கு நடவடிக்கை எடுத்தபோது பிஜேபியினர் தடுத்தனர்.ஹத்ராஸ் தலித் பெண் கூட்டு பாலியல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டபோது உடலை கூட குடுக்காம எரித்தனர். குற்றவாளிகளை விடுதலை செய்யவேண்டும் என்று பிஜேபி அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.அதே போல் உன்னாவ் எம் எல் ஏ ..மணிப்பூர் ..இப்படி லிஸ்ட் பெருசு. 6 .போதை பொருள் ..அதன் ஊற்றிடமே உங்களோட முந்திரா துறைமுகம்  என திமுக சார்பாக தங்கள் எதிர்ப்புகள் பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

அநாகரிகத்தின் அடையாளமே மத்திய அரசுதான். தமிழக பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை விடிவிக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது. -தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 


தொகுதி மறுசீரமைப்பு ஹிந்தி திணிப்பு உள்ளிட்ட அவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் திருவள்ளூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.


அப்போது பேசிய அவர்," மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. எல்லா வகைகளிலும் மத்திய அரசு தமிழகத்திற்கு தடைக் கற்களை போட்டு வருகிறது. தமிழ்நாட்டின் உரிமைகளை யாருக்கும் விட்டுத் தர மாட்டோம். தமிழகம் சிறுமைப்படுத்தப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். திமுகவின் உண்மையான குணத்தை காட்ட வேண்டிய நேரம் இது. அநாகரிகத்தின் அடையாளமே மத்திய அரசுதான். தமிழக பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை விடிவிக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது. 2000 கோடி அல்ல 10,000 கோடி கொடுத்தாலும் தமிழக அரசு முன்மொழிக் கொள்கையை ஏற்காது என்பதால் மத்திய அமைச்சருக்கு எரிச்சல். இதன் காரணமாகவே தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் வஞ்சிக்கின்றனர். இது நியாயமா? தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா? உயிரே போனாலும் பாஜகவின் பாசிசத்துக்கு அடி பணிய மாட்டோம். உரிமை குரல் எழுப்பினால் நாகரீகம் அற்றவர்கள் என்கிறார்கள். உலகிற்கே நாகரிகத்தைச் சொல்லிக் கொடுத்தது. தமிழகம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை இந்த உலகிற்கு சொன்னது தமிழ்நாடு. எத்தனை கோடி செலவிட்டாலும் சமஸ்கிருதத்தை வளர்க்க முடியாது. மத்திய அரசு கொண்டுவந்துள்ளது கல்விக் கொள்கை அல்ல.. காவி கொள்கை.. அதுவும் இந்தியாவை வளர்க்கும் கல்விக் கொள்கைக்கு பதிலாக இந்தியை வளர்க்கும் காவி கொள்கைக்கு மத்திய அரசு திட்டமிடுகிறது.

இந்தியை வளர்ப்பதை விட இந்தியாவை வளர்க்க பாருங்கள் பிரதமர் மோடி அவர்களே.. உரிமைகளைக் கேட்டால் தொகுதிகளை குறைப்போம் என்கிறார்கள். தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு 8 தொகுதிகள் பறி போகும். இது உரிமை சார்ந்த பிரச்சனை. கேள்வி எழுப்பினால் தொகுதிகளை குறைப்போம் என்று எதேச்சாதிகாரத்தை பாஜக அரசு கொண்டு வருகிறது. பாஜகவின் பாசிச நடவடிக்கைக்கு எதிராக அணி திரட்டி வெற்றி பெறுவோம். அணி திரண்டால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும். அதற்காக தமிழ்நாடு போராடும். மணிப்பூர் பற்றி எரிகிறது அதனை கட்டுப்படுத்த ஒரு துரும்பை கூட மத்திய அரசு கிள்ளி போடவில்லை. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. அதனை கண்டு கொள்ளவில்லை. ஆனால் சமஸ்கிருதத்தை வளர்ப்போம் என்கிறார்கள். இப்போதும் சொல்கிறேன் தமிழகத்தில் இந்தியை எந்த காலத்திலும் திணிக்க முடியாது. முந்தைய ஆட்சியில் தமிழக உரிமைகள் டெல்லியில் அடகு வைக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தற்போதைய திமுக ஆட்சியில் நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். நமது திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. எனவே எந்த காலத்திலும் பாஜகவின் பாசிச அணுகுமுறைக்கு திமுகவும் தமிழ்நாடு அடிபணியாது" என்றார்.








தெம்பு இருக்கா? துண்டு சீட்டோட கூட வாங்க..நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதே திமுக - காங்கிரஸ் கூட்டணி தானே? - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

 



சென்னை: மத்திய அரசை கண்டித்து திருவள்ளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் உரிமைகளை முந்தைய ஆட்சியாளர்கள் டெல்லியில் அடகு வைத்தார்கள் என விமர்சித்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார் ஸ்டாலின் என கேள்வி எழுப்பியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என சவால் விடுத்திருக்கிறார்.



இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளமாகப் பார்த்து தலை வைத்ததில் தொடங்கிய நாடக வரலாறு , இன்று வரை துரோக சரித்திரமாக நீண்டுகொண்டு இருக்கிறது.

கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே மறந்துவிட்டு இந்தி திணிப்பை முதன்முதலில் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்தது முதல், இன்றைக்கு கொல்லைப் புறமாக PM Shri திட்டத்தை முதலில் வரவேற்று விட்டு, தற்போது எதிர்ப்பு நாடகம் ஆடும் திமுகவுக்கு அதிமுக பற்றி பேச எள் அளவாவது அருகதை இருக்கிறதா? மீத்தேன்- ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு டெல்டா விவசாயிகளின் உரிமையை அடகு வைத்தவர் தானே நீங்கள்? நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதே திமுக - காங்கிரஸ் கூட்டணி தானே? அதே கூட்டணியே சேர்ந்தவர்களை வைத்து உச்ச நீதிமன்றம் வரை சென்று நீட்டை கொண்டு வர வாதாடி மாணவர்களின் மருத்துவ கனவை அடகு வைத்த பாவிகள்தானே நீங்கள்? அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏல முடிவுகள் வரும் வரை கள்ள மவுனம் சாதித்து, பல்வேறு சதிச்செயல்களால் மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியலையே அடகு வைக்க முயற்சித்தவர்கள் தானே நீங்கள்?

3வது மாடியில் CBI ரெய்டு நடக்க, முதல் மாடியில் முன்று மடங்கு சீட்களை கொடுத்து காலில் விழுந்த கொத்தடிமைகள் தானே நீங்கள்? ஆனால் , பாஜக-வுடன் கூட்டணியில் இருந்த போதும், 7.5% இடஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், காவிரி மேலாண்மை ஆணையம், என்ற அறிவிப்பு என தமிழ்நாட்டின் எந்த அடிப்படை உரிமையும் பறிபோகக் கூடாது என்ற அடிப்படையில் மக்களுக்காண ஆட்சி செய்து, தமிழ்நாட்டை காத்திட்ட இயக்கம் தான் அஇஅதிமுக.
மத்திய அரசின் அனைத்து ஆய்வு அறிக்கைகளிலும் அன்று தமிழ்நாடு முன்னிலை வகிக்க ஒரே காரணம், 10 ஆண்டு காலம் அதிமுக நடத்திய மக்களுக்கான ஆட்சி; உலக நாடுகளுக்கும் முன் மாதிரியாகத் திகழ்ந்தது எங்கள் "தமிழ்நாடு மாடல்" ஆட்சி! ஆனால், ஒன்றிற்கும் உதவாத, உருப்படாத ஒரு வெற்று மாடல் அரசை நடத்தி கொண்டு, தனக்குத் தானே கையைத் தட்டிக்கொண்டு, பொம்மை ஆட்சி நடத்தும் நீங்கள், மக்களை பொறுத்த வரை வெறும் விளம்பர மாடல் தான் ! அப்படி என்ன ஆட்சி செய்து கிழித்து விட்டீர்கள் என்று மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே வீர வசனம் பேசுகிறீர்கள்? எதிர்க் கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் கேட்கிறேன்- உங்களால் என்னுடன் நேருக்கு நேர் நின்று தனியாக விவாதிக்க முடியுமா? அந்த தெம்பு, திராணி உங்களுக்கு இருக்கிறதா? எத்தனை துண்டு சீட்டுகள் வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள்! பாத்துக்கலாம்" என கூறியுள்ளார்.


Monday, 10 March 2025

16 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரபாகரன் மரணம் அறிவிப்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.

 
  
          

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கை: உலகெங்கும் பரந்து வாழும் எம் உயிரினும் மேலான தமிழ் மக்களே! எமது விடுதனை இயக்கத்தின் தலைவரும் தமிழினத்தின் ஒப்பற்ற பெருந்தலைவருமான பிரபாகரன், இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதி தளராது 36 ஆண்டுகளாக எதிரிப் படைகளோடு அடிபணியாது போராடி நந்திக் கடலோரம் நடைபெற்ற இறுதிச் சமரில் வீரகாவியமானார்.
இலங்கை அரசுக்கும் அதன் ராணுவ இயந்திரத்துக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய உலகநாடுகளின் கூட்டுப்படை வலிமையையும் ஏகாதிபத்திய அரசுகளின் சூழ்ச்சித் திட்டங்களையும் எதிர்கொண்டு அனைத்து தடைகளையும் தனது பேராற்றலால் உடைத்தெறிந்து தமிழினத்தின் ஆற்றலோனாக பிரபாகரன் திகழ்கின்றார்.

தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலை நிறுத்தி முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரையும் உறுதி குலையாது, படைநடத்தி, தான் வரித்துக் கொண்ட உயரிய லட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமார ஏற்று உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி, எதிரிப்படையோ இறுதிக் கணம் வரை துணிவோடு களமாடி பிரபாகரன், 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாள், வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை தமிழீழ மாவீரர் பணிமனை அறியத் தருகிறது. பிரபாகரன், வீரச்சாவினை உறுதிப்படுத்தி நெஞ்சைப் பிளக்கும் இப்பெரும் துயரமிகு அறிவிப்பை, அவரது வழிநடத்தலை உளமார ஏற்றுப் போராடிய போராளிகளுக்கும் ஒப்பற்ற தேசியத் தலைமையாக தமது நெஞ்சங்களில் சுமந்திருக்கும் எம்முயிரினும் மேலான தமிழ் மக்களுக்கும் பெருந்துயரத்தோடு வெளிப்படுத்திக் கொள்ளும் அதேவேளை எமது வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

காலம் காலமாக அடிமை வாழ்வுக்குள் சிக்குண்டு, சிதைந்து கொண்டிருந்த ஈழத் தமிழினத்துக்கு கிடைத்த ஒரு சூரியத் தேவனாக, இந்த நூற்றாண்டில் உலகமே வியக்கும் பல அற்புதமான வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து தமிழினத்தின் அதி உச்சவீர அடையாளமாக பிரபாகரன் திகழ்கிறார். எமது அன்பிற்குரிய தாய்த் தமிழ் உறவுகளே! தமிழினத்தின் கலங்கரை விளக்காக, தமிழ் மக்களை அடிமைத் தனத்தில் இருந்து கரைசேர்க்கப் புறப்பட்டு, அடிமை விலங்குகள் உடைத்து கொண்ட கொள்கையில் இறுதி வரை உறுதி தளராது போராடிய பிரபாகரன், மாவீரர் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழினத்தின் விடிவுக்காக, தமது உயிரை அர்ப்பணித்த எமது தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி பேரெழுச்சியோடு நெஞ்சங்களில் இருத்தி, தமிழீழப் போராட்ட வரலாற்றின் மிகப் பெரும் அடையாளமாக எமது இதயக் கோவில்களில் வைத்து பூசிக்கப்படக் கூடியவராக்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களது மிகப் பெரும் கடமையும் பொறுப்புமாகும்.

ஆகவே, வரலாற்றில் எமக்குக் கிடைத்த பொக்கிசமான, பிரபாகரனுக்கு அவரது வழியில் களமாடிய போராளிகள், சமூக கட்டமைப்பினர், புலம் பெயர் தாயக மற்றும் தமிழக உறவுகள் என அனைவரும் ஒன்றிணைந்து அவரது வீரவணக்க நிகழ்வை தாயகம், தமிழகம் உட்பட தமிழ் மக்கள் பரந்துவாழும் உலகப்பரப்பு எங்கும், நடத்துகிற அதேவேளையில் அனைவரும் ஒன்றிணையக் கூடிய ஐரோப்பிய நாடு ஒன்றில் 2025-ம் ஆண்டு நடுப்பகுதியில், உலகம் போற்றும் பேரெழுச்சியாக முன்னெடுக்க இருக்கிறோம். எங்கள் பெருந்தலைவர் பிரபாகரனால் கட்டமைத்து வளர்க்கப்பட்டு நமது கைகளில் தரப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டத்தை, அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக் கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் மாறிவரும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப தடம் மாறாது முன்னெடுத்துச் சென்று எமது இறுதி இலட்சியத்தை அடைவோம் என பிரபாகரன் மீது மாவீரர்கள் மீதும் உறுதி எடுத்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, 8 March 2025

மக்கள் மருந்தக தினம்: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மக்கள் மருந்தகத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பார்வையிட்டார்

 

    7-வது மக்கள் மருந்தக தினம்  நாடு முழுவதும் உள்ள  30 மாநிலங்களின் 30 நகரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்களால் கொண்டாடப்பட்டது. மக்கள் மருந்தக மையங்களில் இந்தக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள பிரதமரின் மக்கள் மருந்தக மையத்திற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இன்று (07.03.2025) வருகை தந்தார். மக்கள் மருந்தகத்தின் பொறுப்பு அதிகாரி திரு நாராயணா மற்றும் ஊழியர்கள் அமைச்சரை வரவேற்றனர். மருந்தக ஊழியர்களுடன் உரையாடிய அமைச்சர், அங்குள்ள மருந்துகள் மற்றும் விற்பனை செய்யப்படும் பொருட்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.


    பயனாளிகளுக்கு மருந்துகளை வழங்கிய அமைச்சர், அவர்களுடன் உரையாடினார். குறைந்த விலையில் வழங்கப்படும் இந்த மருந்துகள் மூலம் தங்களுக்கு மருத்துவ செலவுக்கான பணம் மிச்சமாவதாகவும், பிரதமரின் மக்கள் மருந்தகம் தங்களுக்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது என்றும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். மக்கள் மருந்தகத்தின் முக்கியத்துவம் குறித்து குறிப்பிட்ட அமைச்சர், மலிவான விலையில் தரமான மருந்துகள் கிடைப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  மேலும் மருந்தகத்தை மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் 56 ஆவது நிறுவன தினம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.




ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் நடைபெற்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 56-வது நிறுவன தின அணிவகுப்பில் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் திரு ராஜ்விந்தர் சிங் பட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.



    மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையில், கடந்த 56 ஆண்டுகளில், மத்திய தொழில் பாதுகாப்புப் படை நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பயணம் ஆகியவற்றை உறுதி செய்தது மட்டுமல்லாமல், அவை சுமூகமாக செயல்படுவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளது என்றார். துறைமுகங்கள், விமான நிலையங்கள், முக்கிய வர்த்தகம், சுற்றுலா மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்ட நாட்டின் தொழில்துறை வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கிய நிறுவனங்களின் பாதுகாப்பை சிஐஎஸ்எஃப் இல்லாமல் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று அவர் கூறினார். மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் அசைக்க முடியாத விசுவாசம், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் காரணமாகவே தொழில்துறை வளர்ச்சியில் நாடு பாதுகாப்பாக முன்னேறி வருகிறது என்று திரு ஷா கூறினார். மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பல்வேறு சமூக நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி அதை முன்னெடுத்துச் சென்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.


    2027-ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றவும், நாட்டின் 140 கோடி மக்களுக்கு முன்னால் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒவ்வொரு துறையிலும் தலைமை இடத்திற்கு மாற்றவும் பிரதமர் திரு நரேந்திர மோடி தீர்மானித்துள்ளார் என்று திரு அமித் ஷா கூறினார். இந்த இலக்குகளை நிறைவேற்றுவதில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். தில்லியில் சிஐஎஸ்எஃப் நிறுவன தினத்தை கொண்டாடுவதற்கு பதிலாக, அது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் என்று 2019-ல் முடிவு செய்யப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். அதன்படி இன்று மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் நிறுவன நாள் நிகழ்ச்சி தக்கோலத்தில் உள்ள மண்டல பயிற்சி மையத்தில் நடைபெற்றது என அவர் தெரிவித்தார்.

    இந்தியாவின் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதில் தமிழ்நாட்டின் கலாச்சாரம் பல வழிகளில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். நிர்வாகச் சீர்திருத்தங்களாகட்டும், ஆன்மீக சிகரங்களை எட்டுவதாகட்டும், கல்வித் தரத்தை நிர்ணயிப்பதாகட்டும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் செய்தியை மேம்படுத்துவதாகட்டும், ஒவ்வொரு துறையிலும் இந்தியப் பண்பாட்டை தமிழ்நாடு பெரிதும் வலுப்படுத்தியுள்ளது. தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவை இந்திய கலாச்சாரத்தின் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் என்றும், ஒட்டுமொத்த நாடும் இதை ஒப்புக் கொள்கிறது என்றும் அவர் கூறினார். இதையொட்டி, தக்கோலத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் பிராந்திய பயிற்சி மையத்திற்கு சோழ வம்சத்தின் சிறந்த வீரரான ராஜாதித்ய சோழனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது பெருமைக்குரிய விஷயம் என்று திரு ஷா குறிப்பிட்டார். இந்த மண்ணில் நடைபெற்ற போரில் ராஜாதித்ய சோழன், அசாத்தியமான வீரத்தை வெளிக்காட்டி உன்னத தியாகம் செய்து, சோழ சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற மரபுகளை முன்னேற்றினார் என்று அவர் மேலும் கூறினார்.

    கடந்த ஆண்டு சிஐஎஸ்எஃப் இல் 14,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். அனைத்து மத்திய ஆயுத போலீஸ் படைகளையும் (சிஏபிஎஃப்) கருத்தில் கொண்டால், இந்தப்படையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50,000 இளைஞர்களைப் பணியமர்த்துவதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுவரை, சிஏபிஎஃப் பணிக்கான ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்கு பிராந்திய மொழிகளில் எந்த ஏற்பாடும் இல்லை என்று திரு அமித் ஷா கூறினார். இருப்பினும், மோடி அரசின் முடிவின்படி, இந்தி மற்றும் ஆங்கிலத்தைத் தவிர, இப்போது இளைஞர்கள் சிஏபிஎஃப் ஆட்சேர்ப்பு தேர்வுகளை தமிழ் மற்றும் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள பிற மொழிகளில் எழுதலாம். மற்ற மாநிலங்களின் முதலமைச்சர்களைப் போலவே, தமிழக முதலமைச்சரும் விரைவில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் தொடங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இது தமிழைத் தாய்மொழியாக்குவதை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கும் பயனளிக்கும். இது தாய்மொழிக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல், தமிழ் வழியில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு சம வாய்ப்புகளை வழங்கும்.

    மத்திய தொழில் பாதுகாப்புப் படை எப்போதும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வந்துள்ளது என்று அவர் கூறினார். கடந்த 56 ஆண்டுகளில், சிஎஸ்ஐஎஃப் நாட்டின் ஒவ்வொரு துறையிலும் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்துள்ளது. நாள்தோறும் துறைமுகங்கள், விமான நிலையங்கள், மெட்ரோக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் ஒரு கோடி மக்களின் நடமாட்டத்தைப் பாதுகாக்கவும், அனைத்து அச்சுறுத்தல்களிலிருந்தும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் தொழில் மற்றும் கல்வி வளர்ச்சிக்கும், நாட்டின் சீரான செயல்பாட்டிற்கும் சிஐஎஸ்எஃப் பணியாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். அவர்களின் கண்காணிப்பின் கீழ், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் மெட்ரோக்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் பாதுகாப்பாக உள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பாதுகாப்பும் சிஐஎஸ்எஃப் வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது பெருமைக்குரிய விஷயம். தில்லி மெட்ரோ ரயிலில் தினமும் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதுகாப்பாக செல்வதை மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் உறுதி செய்கிறார்கள் என்று திரு ஷா குறிப்பிட்டார். கூடுதலாக, 250 துறைமுகங்களின் பாதுகாப்பிற்கு அவர்கள் பொறுப்பு வகிக்கிறார்கள். துறைமுக பாதுகாப்புக்கான சிஐஎஸ்எஃப்-ன் பொறுப்புகள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

    மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு அதிநவீன தொழில்நுட்பத்தை அரசு வழங்கியுள்ளதாகவும், வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை இந்தப் படையினருக்கு தொடர்ந்து வழங்கி வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். பல விமான நிலையங்களில் 'டிஜி யாத்ரா' அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பாதுகாப்பு சோதனைகளுக்குத் தேவைப்படும் நேரம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சி.ஐ.எஸ்.எஃப் விமான நிலைய பாதுகாப்பில் சர்வதேச தரங்களை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், இந்த விஷயத்தில் சாதனைகளை அமைப்பதற்கும் மிக நெருக்கமாக உள்ளது. உள்ளக தரக் கட்டுப்பாட்டு அலகு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அதனூடாக உயர் பாதுகாப்பு தரங்களை பராமரிப்பதை தொடர் பயிற்சி உறுதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆளில்லா விமான எதிர்ப்பு திறன்களுக்கான சிறப்பு பயிற்சி மையத்தையும் சிஐஎஸ்எஃப் நிறுவியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜெவர் விமான நிலையம், மகாராஷ்டிராவில் உள்ள நவி மும்பை விமான நிலையம் ஆகியவை மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பின் கீழ் விரைவில் சேர்க்கப்படும் என்று திரு ஷா குறிப்பிட்டார். இதற்காக, உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு மூன்று புதிய படைப்பிரிவுகளை நிறுவ ஒப்புதல் அளித்தது. அவற்றில் ஒன்று முற்றிலும் பெண்களைக் கொண்ட படைப்பிரிவாக இருக்கும்.

    நாட்டைப் பாதுகாப்பதில் மிக உயர்ந்த தியாகம் செய்த 127 CISF வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய உள்துறை அமைச்சர், இந்த 127 வீரர்கள் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பொறுப்பை நிறைவேற்றும் போது தங்கள் உயர்ந்த தியாகத்தை செய்தனர் என்று கூறினார். இந்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்களிடம், தங்களது குடும்ப உறுப்பினர்களின் தியாகம் காரணமாகவே நாடு இன்று உலகத்தின் முன் தலை நிமிர்ந்து நிற்கிறது என்று அவர் கூறினார்.

    மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா சிஐஎஸ்எஃப்-ன் வருடாந்திர இதழான சென்டினலை வெளியிட்டார். 10 பேருக்கு குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கமும், 2 பேருக்கு ஜீவன் ரக்ஷா பதக்கமும், 10 பேருக்கு வீரதீர செயல்களுக்கான பதக்கமும் வழங்கி அவர் கௌரவித்தார். இந்த வீரர்கள் அனைவரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் சிறந்த பாரம்பரியத்தை மேம்படுத்தியவர்கள் என்று திரு ஷா கூறினார். சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கான சுகாதாரம், சுமூகமான கடமை செயல்திறன் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ .88 கோடி மதிப்புள்ள ஆறு வெவ்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார். எஸ்.எஸ்.ஜி நொய்டாவில் புதிதாக கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம் மற்றும் மோப்பநாய் பயிற்சி அரங்கையும் அவர் திறந்து வைத்தார்.

    மத்திய உள்துறை அமைச்சர் CISF சைக்கிள் பேரணி-2025-ஐ தக்கோலத்திலிருந்து காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சைக்கிள் பேரணி நாட்டின் ஒவ்வொரு கடலோர கிராமத்தையும் கடந்து கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தை சென்றடையும் என்று அவர் கூறினார். இந்த பயணத்தின் போது, சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் கடலோர கிராமங்களில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், வளர்ச்சி குறித்து கிராமவாசிகளுக்கு தெரிவிப்பார்கள். கூடுதலாக, சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் பாதுகாப்பு மற்றும் கிராம வளர்ச்சி தொடர்பான ஆலோசனைகளை சேகரிப்பார்கள். பணியாளர்கள் வழங்கிய 'கிரவுண்ட் ஜீரோ உள்ளீடுகள்' இந்தக் கடலோர கிராமங்களில் சிறந்த வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் என்று மத்திய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

        கடந்த ஐந்து ஆண்டுகளில் சிஐஎஸ்எஃப் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மரங்களை நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் திரு அமித் ஷா கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட 'தாயின் பெயரால் ஒரு மரக்கன்று' பிரச்சாரத்தின் கீழ், ஒவ்வொரு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரரும் தங்களது தாய்மார்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு மரத்தை நடுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார். அனைத்து சிஐஎஸ்எஃப் வீரர்களும் யோகா பயிற்சியை தங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு திரு ஷா வேண்டுகோள் விடுத்தார். ஆயுஷ்மான் சிஏபிஎஃப் திட்டத்தின் கீழ் 31 லட்சத்துக்கும் மேற்பட்ட அட்டைகளை வழங்குவது உட்பட மத்திய ஆயுத போலீஸ் படை (சிஏபிஎஃப்) பணியாளர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். கூடுதலாக, 13,000 வீடுகள் மற்றும் 113 பாசறைகள் கட்டப்பட்டுள்ளன, மேலும் இ-ஹவுசிங் போர்ட்டலின் கீழ், எந்த வீடுகளும் காலியாக இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண் பணியாளர்களுக்காக சிறப்பு முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கருணைத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் திரு ஷா கூறினார். மத்திய காவல்படை கேண்டீன்களில் உள்நாட்டு தயாரிப்புகளின் விற்பனை ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும், 2024 ஏப்ரல் 1 முதல், ஜிஎஸ்டியில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்

Tuesday, 4 March 2025

தமிழக முதலமைச்சர். மு க ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்.

 சென்னை: மக்களவை தொகுதி மறுவரையறையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில், அதிமுக, பாமக, தவெக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்பு. பாஜக, தமாகா, நாம் தமிழர் கட்சி ஆகியவை புறக்கணிப்பதாக அறிவிப்பு.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள் தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சர கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மக்களவைத் தொகுதி வரையறியால் தமிழகத்தில் உள்ள 39 எம்பிக்கள் எண்ணிக்கை 31 குறைந்துவிடும் தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கு அனைத்து கட்சி கூட்டத்தை மாச்சன் ஐந்தாம் தேதி நடத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது பதிவு செய்யப்பட்ட 40-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு அனுப்பி விடுக்கப்படுகிறது அரசியலை மறந்து அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார் இடைத்தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதில் அதிமுக திமுக பாஜக காங்கிரஸ் பாமக விசிக ,தமிழக வெற்றி கழகம் நாம் தமிழர் கட்சி ஆமா ஆத்மி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆதித்தமிழர் பேரவை முக்குலத்தோர் புலிப்படை மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள் தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சர கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மக்களவைத் தொகுதி வரையறியால் தமிழகத்தில் உள்ள 39 எம்பிக்கள் எண்ணிக்கை 31 குறைந்துவிடும் தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கு அனைத்து கட்சி கூட்டத்தை மார்ச் ஐந்தாம் தேதி நடத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது பதிவு செய்யப்பட்ட 40-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு அனுப்பி விடுக்கப்படுகிறது அரசியலை மறந்து அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார் இடைத்தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக திமுக பாஜக காங்கிரஸ் பாமக விசிக ,தமிழக வெற்றி கழகம் நாம் தமிழர் கட்சி ஆமா ஆத்மி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆதித்தமிழர் பேரவை முக்குலத்தோர் புலிப்படை மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது.

பாஜக, தமாகா, நாம் தமிழர் கட்சி ஆகியவை புறக்கணிப்பதாக அறிவிப்பு.

7 ஆம் ஆண்டில் கால்பதிக்கும் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்

 





தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் 6 ஆண்டுகள் நிறைவு செய்து 7-ஆம் ஆண்டில் கால்பதிக்க உள்ளது. பத்திரிகைத்துறை சார்ந்த உங்களின் அனைவரது ஆதரவு மற்றும் ஒத்துழைப்பும் இந்த வெற்றிகரமான பயணத்திற்கு முக்கிய காரணமாகும். தொடர்ந்து ஆதரவளித்து வரும் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று இதன் மாநில தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார் . மேலும் அவர்.


பத்திரிகையாளர் நலன், பத்திரிகையாளர் பாதுகாப்பு, உரிமைகள், கடமைகள் உள்ளிட்ட பத்திரிகையாளர் நலன் சார்ந்த பல்வேறு சேவைகளை தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் முழு நேர பணியாக செய்து வருகிறது.

சங்க பணிகள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு..

சங்க பாகுபாடு இன்றி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடு வழங்கி வருவது..


உடல்நலம் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கி வருவது..

காலமான பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு சங்கம் சார்பில் நிதியுதவி வழங்கியது..

பத்திரிகையாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கியது..

பத்திரிகையாளர் மகளின் திருமணத்திற்கு நிதியுதவி வழங்கியது..

பத்திரிகையாளர் குடும்ப துக்க நிகழ்விற்கு நிதியுதவி வழங்கியது..

கண், பல் மற்றும் உடல்நல மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தியது..

பத்திரிகையாளர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பு வழங்கி வருவது..

இயற்கை பேரிடர் மற்றும் கொரோனா நோய் தொற்றுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கியது..

கொரானா காலக்கட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு  நிவாரண பொருட்கள் வழங்கியது. அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கியது..


பத்திரிகையாளர்களுக்கு இலவசமாக சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கியது..

கொரோனா தொற்று நோய்க்கு கபசுர குடிநீர், முக கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தொடர்ந்து வழங்கியது..

பத்திரிகையாளர்களின் சுக துக்கங்களில் சங்கம் சார்பில் பங்கேற்று வருதல்..

கோடை வெயில் காலங்களில் பொதுமக்கள் தாகம் தீர்க்க தினமும் மோர் வழங்கியது..

பத்திரிகை RNI சம்மந்தப்பட்ட ஆண்டறிக்கை (E-Filing) தாக்கல் ஆண்டுதோறும் நுற்றுக்கணக்கான பத்திரிகைகளுக்கு முற்றிலும் இலவசமாக செய்து தருகிறோம்..

RNI தொடர்பான அனைத்து பணிகளும் முற்றிலும் சேவை நோக்கில் இலவசமாக செய்து தந்து வருகிறோம்..

பத்திரிகையாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் உடனிருந்து முழுமையாக உதவி செய்து வருகிறோம்..


தேசிய பத்திரிகையாளர் தின விழா

பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு

பத்திரிகை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம்

பத்திரிகையாளர்கள் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம்..

ஒற்றுமை பொங்கல் விழா..


இலவச இதழ் வடிவமைப்பு DTP பயிற்சி வகுப்புகள்..

தகவல் அறிவும் உரிமை சட்ட பயிற்சி வகுப்பு..

பத்திரிகையாளர்களை கவுரவித்தல்..

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் மரக் கன்றுகள் நடு விழா..

பத்திரிகையாளர் ஓய்வூதியம், குடும்ப நல நிதி உள்ளிட்ட அரசு சலுகைகள் பெற ஆவணங்கள் தொடர்பான வழிகாட்டுதல்..

அரசு அடையாள அட்டை விதிகளை தளர்த்த வேண்டி தொடர் முன்னெடுப்புகள்..

பத்திரிகையாளர் தாக்கப்பட்டால் உடனடி கண்டன அறிக்கை மற்றும் உரிய காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உடனிருத்தல்..

தமிழக முதலமைச்சர், செய்தித்துறை அமைச்சர், செய்தித்துறை இயக்குநர் உள்ளிட்ட துறைச் சார்ந்த அதிகாரிகளிடம் பத்திரிகையாளர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து மனுக்கள் அளித்தல்..

கோரிக்கைகள், கண்டன அறிக்கை, இரங்கல் அறிக்கை, வாழ்த்து உள்ளிட்ட அனைத்துக்கும் சங்கம் சார்பில் பங்காற்றி வருகிறோம். சங்க பாகுபாடு இன்றி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சங்கம் செயலாற்றி வருகிறது. இது போன்ற எத்தனையோ நலன் சார்ந்த பணிகளை தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் செய்துள்ளது. நினைவில் உள்ளதை மட்டுமே இங்கு சிலவற்றை மட்டுமே பகிர்ந்து உள்ளோம்.

கடந்த 6 ஆண்டுகளில் பல்வேறு சோதனைகளை தாண்டி பத்திரிகையாளர் நலன் சார்ந்த பல்வேறு சேவைகள் செய்துள்ளது மனநிறைவு தருகிறது. சங்கம் சார்பாக செய்யப்படும் நற்பணிகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களின் பங்களிப்பில் மட்டுமே செய்து வருகிறோம். வேறு எங்கேயும் எப்போதும் நன்கொடை எதுவும் இதுவரை பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனையோ சோதனைகள், அவதூறு பேச்சுகள், விமர்சனங்கள், காழ்ப்புணர்ச்சி கொண்டோரின் சதிகளை தாண்டி நேர்மையுடன் சங்க பணிகள் தொடர்ந்து செய்து வருகிறோம்.

தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வரும் மாநில மாவட்ட நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், சங்க தலைவர்கள், பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அனைவரது ஆதரவும் ஒத்துழைப்பும் தொடர்ந்து வழங்கிட வேண்டுகிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றும் விவகாரம்.. மதுரை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு.

      கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் அருள்ஞானபுரத்தைச் சேர்ந்த தினகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தினகரன் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்கு உட்பட்டது புத்தேரி ஊராட்சி. இந்த கிராமத்திற்கு உள்பட்ட நஞ்சை விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற சட்டவிரோதமாக அதிகாரிகள் அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள். அதன் காரணமாக அங்குள்ள விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.


    இதனால் அப்பகுதியில் சுற்றுச்சுவர் எழுப்பப்படுவதால், விவசாய பணிகள் தடைப்பட்டிருக்கின்றன. எனவே விவசாய நிலத்தையும், பாசன நீர் நிலைகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். சட்டவிரோதமாக வீட்டுமனை அங்கீகாரம் அளித்ததை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு தினகரன் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் நிஷாபானு, விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனு குறித்து நகர் ஊரமைப்பு ஆணைய இயக்குனர், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை கோதையாறு நீர்ப்பாசன உதவி செயற்பொறியாளர் ஆகியோர் 12 வாரத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்கள்..