Wednesday, 20 February 2019

மனிதநேய ஜனநாயக கட்சி இடம்பெறாது-தமிழன் அன்சாரி.

பா.ஜ.க இடம்பெறக் கூடிய கூட்டணியில்மனிதநேய ஜனநாயக கட்சி இடம்பெறாது.

சென்னையில் நடக்கும் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் முடிவு எடுக்கப்படும்.
ம.ஜ.க.வின் அரசியல் நிலை குறித்து பிப்.28-ல் முடிவு - தமிழன் அன்சாரி.

அதிமுக-பாமக கூட்டணி 40 மக்களவைத் தொகுதிகளிலும் தோல்வியடையும்: காங்கிரஸ் கருத்து

அதிமுக-பாமக கூட்டணி 40 மக்களவைத் தொகுதிகளிலும் தோல்வியடையும்: காங்கிரஸ் கருத்து

சென்னை: அதிமுக-பாமக கூட்டணி 40 மக்களவைத் தொகுதிகளிலும் தோல்வியடையும் என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. அதிமுக-பாமக கூட்டணியை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும், அதிமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தவர் ராமதாஸ் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா கூறியுள்ளார். 

ஒப்பந்தம் கையெழுத்தானது அதிமுக பாமக இடையில்

முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது அதிமுக பாமக இடையில்
ஜெயலலிதா நினைவிடம் கட்ட கூடாது என்று எதிர்த்தவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
அதிமுக ஆட்சிக்கு எதிராக ஆளுநரிடம் ஊழல் பட்டியல் கொடுத்தவர் அன்புமணி.
இன்று மாசி மகம். ஜெ பிறந்த நட்சத்திரம்.
மிகவும் பொருத்தம்.

எச்.ராஜா தென்சென்னையில் தான் போட்டியிட விரும்புகிறார்

பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தென்சென்னையில் தான் போட்டியிட விரும்புவதாகவும், தனக்கு அங்கு சீட் வழங்க வேண்டும் என்று பாஜக தலைமையை வற்புறுத்தி வருகிறார்
அதே வேளையில். எச்.ராஜாவுக்கு சீட் வழங்கினால்..அது கூட்டணிக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்று அதிமுக தரப்பில் பாஜக தலைமையிடம் தெரிவிக்கப் பட்டுள்ளது
அதனை,ஏற்றுக்கொண்ட பாஜக தலைமை,வேறு மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்வதாக எச்.ராஜாவிடம் உறுதியளித்துள்ளது

அதிமுகவிடம், பாமக சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:

அதிமுகவிடம், பாமக சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:

1. காவிரி பகுதியை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.

2. தமிழ்நாட்டின் 20 பாசனத் திட்டங்கள்.
& கோதாவரி, காவிரி இணைப்புத் திட்டம்

3. இடஒதுக்கீட்டை காக்க சாதிவாரிக் கணக்கெடுப்பு.

4. ஏழு தமிழர்கள் விடுதலை.

5. படிப்படியாக மதுவிலக்கு.

6. நீர்வளம் காக்க மணல் குவாரிகள் படிப்படியாக மூடல்.

7. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.

8. காவிரியில் மேகதாது அணைக்கு தடை.

9. வேளாண் கடன்கள் தள்ளுபடி
& உழவர் ஊதியக்குழு அமைத்தல்

10. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு.

நாடாளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தீர்மானம்

நாடாளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தீர்மானம்

 7 மக்களவை தொகுதியுடன் 1 மாநிலங்களவையும் ஒதுக்கீடு

 21 தொகுதி இடை தேர்தலில் அதிமுகவிற்கு பாமக முழு ஆதரவு

துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி
                                                    அறிவிப்பு



டி.ஜே.யூ                                                                                   TVR /510                   


தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ்  யூனியன்  அவசரசெயற்குழு  கூட்டம் இன்று 18.2.2019 கூட்டப்பட்டது. 

 இதில் மாநில தலைவர் கி.காளிதாஸ் அவர்கள் தலைமையில் மாநிலபொதுசெயலாளர் மு.ச.கிருஷ்ணவேணி
வடக்கு மண்டல மாநில செயலாளர் சூரியநாராயணன், மண்டலசெயலாளர் சரவணன்  கலந்துக்கொன்டு

 நமது யூனியனிலிருந்து நீக்கப்பட்ட மாநில செயலாளர் பொறுப்பிலிருந்த ஜுபிடர் ரவி மற்றும் கோபிநாத் இவர்களின் ராஜினாமா கடிதம்  தலைவர் அவர்களால் ஏற்கப்பட்டது. 

மேலும் தென்சென்னை மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து சிவகுமார் நீக்கப்பட்டார். மண்டலதலைவர் பொறுப்பிலிருந்து ரவிந்திரகுமார் விலகுவதாக அறிவித்ததும் ஏற்கபட்டது.  


உடனடியாக இக்கூட்டத்தில் தென் சென்னை மாவட்ட தலைவராக முன்னால் செயலாளராக இருந்த பாக்கியராஜ்  நியமிக்கப்பட்டார். இதற்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன்,மாவட்டபொருளாளர்  ஞான மாணிக்கம் வழிமொழிந்தனர்.  இக்கூட்டத்திற்கு  வடசென்னை மாவட்ட தலைவர் தட்சனா மூர்த்தி கலந்துக்கொண்டு ஆதரவளித்தார், 

 மற்றும் நமது தெற்கு மண்டல மாநில செயலாளர் பரணிகுமார்,மத்திய சென்னை மாவட்ட தலைவர் சிரஞ்சீவி அணிஸ்  ,  காஞ்சிபுரம் , திருவள்ளூர், கோவை,  மாவட்ட  நிர்வாகிகளும்  தலைமை எடுத்த முடிவிற்கு ஆதரவளித்தனர்.

பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ்

ஆதிதிராவிட உண்டு உறைவிட பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகோரும் வழக்கில் பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ்

மதுரை: ஆதிதிராவிட உண்டு உறைவிட பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகோரும் வழக்கில் பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நெல்லையை நேர்ந்த பாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பொதுப்பணித்துறை செயலர், நகர நிர்வாகத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.