Monday, 14 May 2018

T.J.U. LEADER BIRTHDAY

 சென்னை, மே  10 தமிழ்நாடு பத்திரிகையாளர்  யூனியன்  மாநில தலைவர் ஐயா காளிதாஸ்  அவர்களின் பிறந்தநாள் ,ஆதம்பாக்கம் வள்ளலார் காப்பகத்தில் கொண்டாடப்பட்டது . இந்நிகழ்ச்சியில் டி ,ஜே .யூ  மாநில  பொதுச்செயலாளரும் , நீதியின் தீர்ப்பு ஆசிரியர்மற்றும் வெளியிட்டாளருமான  திருமதி .கிருஷ்ணவேணி  கலந்துகொண்டார்.
 மேலும் டி .ஜே.யூ  தென் சென்னை மாவட்ட தலைவர்  ரவீந்திரகுமார் , செயலாளர் சிவா ,பொருளாளர் ஞானமணிக்கம்  மற்றும் காப்பக  நிர்வாகிகளும்  கலந்து கொண்
டனர் . 

புழுதி புயலுக்கு 60 பேர் பலி

புதுடில்லி : பல்வேறு மாநிலங்களில் நேற்று கனமழையுடன் மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் வீசிய புழுதி புயலுக்கு 60 பேர் பலியாகி உள்ளனர். உ.பி.,யில் மட்டும் 18 பேர் பலியாகி உள்ளனர். 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதே போன்று ஆந்திரா, மேற்குவங்கம், டில்லி பகுதிகளிலும் புழுதி புயலுக்கு ஏராளமானோர் பலியாகி உள்ளனர். மரங்கள் முறிந்து விழுந்ததால் ஏராளமான கார்கள் சேதமடைந்துள்ளன. மேற்கு வங்கத்தில் இடி, மின்னலுடன் பெய்த கனமழைக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் மட்டும் 7 பேர் மின்னல் தாக்கி பலியாகி உள்ளனர். விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. கனமழை மற்றும் புழுதி புயலால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வரைவு திட்ட அறிக்கை தாக்கல்

புதுடில்லி : காவிரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீலிட்ட கவரில் வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மே 3ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில், இனி கூடுதல் அவகாசம் ஏதும் வழங்கப்படாது என்ற நிபந்தனையுடன் மே 14ம் தேதி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அமைச்சரவை ஒப்புதல் தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியிருந்ததால், காவிரி நதிநீர் பங்கீடு செயல் திட்டத்திற்கான வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

இதற்காக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி இருந்தார். அவர் வரைவு திட்ட அறிக்கையை நேரடியாக தாக்கல் செய்துள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு காவிரி திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


என்ன திட்டம்:
மத்திய அரசின் வரைவு திட்டத்தில், காவி மேலாண்மையை வாரியமாகவோ, கமிஷனாகவோ அமைக்கலாம் என்றும் அக்குழுவில் 10 பேர் வரை உறுப்பினர்கள் இருக்கலாம் என்றும் யோசனை கூறப்பட்டுள்ளது.
வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, விசாரணையை மே 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்.

முருகன், கருப்பசாமி காவல் நீட்டிப்பு

விருதுநகர் : மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். 
இவர்கள் இருவரும் இன்று விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இவர்கள் இருவரின் நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து நீதிபதி மும்தாஜ் உத்தரவிட்டுள்ளார். வழக்கின் அடுத்த விசாரணை மே 28 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.