தமிழக பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித்
தரவேண்டும் என கேரள முதல்வரிடம் தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார்
வலியுறுத்தினார். சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக தேனியில் அறநிலையத்
துறை சார்பில் தகவல் மையம் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, வரும் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. இதையொட்டி சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கான வசதிகள் செய்து தருவது தொடர்பாக தென் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மாநாடு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டில் முதல்வர் சார்பாக அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது: சபரிமலைக்கு வரும் பக்தர்களில் 40 சதவீதம் பேர் தமிழகத்தில் இருந்து வருகின்றனர்.

தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை
செய்துதர கேரள அரசை கேட்டுக் கொள்கிறேன். ஏற்கெனவே, கடந்த 2012-ம் ஆண்டு
தமிழக பக்தர்கள் வசதிக்காக 5 ஏக்கர் நிலத்தை சபரிமலையில் ஒதுக்கித் தருவதாக
கேரள அரசு உறுதியளித்து நிலுவையில் உள்ளது. இந்த விஷயத்தில் கேரள முதல்வர்
விரைவாக முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
No comments:
Post a Comment