Sunday, 7 December 2025

ONGC எண்ணெய் கிணறு சேதம்: பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை! ஊராட்சி மன்ற தலைவருக்கும் தண்டனை 18 பேர் விடுவிப்பு; திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு




திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், காரியமங்கலம் கிராமத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய் கிணறு சேதப்படுத்தப்பட்ட வழக்கில், தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் (டிசம்பர் 7, 2025  தீர்ப்பளித்துள்ளது.

📝 வழக்கும் விசாரணையும்

சம்பவம்: 2015 ஆம் ஆண்டு, காரியமங்கலம் கிராமத்தில் உள்ள ONGC எண்ணெய் கிணறுக்கு எதிராக பி.ஆர்.பாண்டியன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு, சேதப்படுத்தப்பட்டது.


இது தொடர்பாக ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலை சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவர் விக்கிரபாண்டியம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் உள்ளிட்ட 22 பேர் மீது கொலை மிரட்டல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ்வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ், பி.ஆர்.பாண்யன் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவருக்கும் தலா 13 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.13 ஆயிரம் அபராதமும் விதித்து 7.12.2025  அன்று தீர்ப்பு கூறினார். மேலும் வழக்கில் தொடர்புடைய 20 பேர்களில் 2 பேர் இறந்து விட்டதால், மீதமுள்ள 18 பேர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். சிறைண்டனை விதிக்கப்பட்ட பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் இருவரையும் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

⚖️ தீர்ப்பு விவரங்கள்


மொத்தம் 22 பேர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், இரண்டு பேர் விசாரணையின்போதே உயிரிழந்தனர். மீதமுள்ள 20 பேரில்:

விடுவிக்கப்பட்டோர்: 18 பேருக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.

தண்டனை பெற்றோர்:

பி.ஆர். பாண்டியன்: 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 13,000 அபராதம்.

ஊராட்சி மன்ற தலைவர் (செல்வராஜ்): 13.i/2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 13,500 அபராதம்.

தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பி.ஆர். பாண்டியன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் மத்திய சிறைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment