Tuesday, 2 December 2025

செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்.! தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கடும் கண்டனம் .

பத்திரிகையாளர்  மீது தொடர் தாக்குதல் நடத்துவது வன்மையாக கண்டிக்கதக்கது  என்றும் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது  குறித்தும்   தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது .

 அவர்கள் அறிக்கையில் 

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  அதனை செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது பழனி திருக்கோயில் ஊழியர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பலத்த காயமடைந்த பத்திரிகையாளர்கள் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதலை தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதல் நடத்திய பழனி திருக்கோயில் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கையை விரைந்து எடுத்திட வேண்டுமென தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.
 இவ்வாறு அதன் செய்திவெளியீடு  தெரிவிக்கிறது .



No comments:

Post a Comment