Thursday, 3 February 2022

நாமக்கல் மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரண வழக்கு: விரைந்து முடிக்க பட வேண்டும் -உண்மைகண்டறியும் குழு ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம்

 
 வழக்கு விபரம்

சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பிரபாகரன். இவரது மனைவி ஹம்சலா. இவர்கள் இருவரையும் கடந்த 8ஆம் தேதி ,நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் வீட்டில் நடந்த நகை திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக விசாரணைக்காக நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.
 சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் வீட்டில் நடந்த நகை திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கடந்த நவம்பர் மாதம் 18-ஆம் தேதியன்று தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
 
அதனைத் தொடர்ந்து இந்த விசாரணையில் ஜனவரி 11-2022 ஆம் தேதி அன்று மாற்றுத்திறனாளி பிரபாகரன்,இவரது மனைவி ஹம்சலா. கைது செய்யப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 11ஆம் தேதி பிரபாகரனை நாமக்கல் கிளை சிறையிலும், ஹம்சலாவை சேலம் மத்திய பெண்கள் சிறைச்சாலையிலும் அடைத்தனர்.
பின்னர் ஜனவரி 12-2022 ஆம் தேதி சிறையில் இருக்கும்போதே, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பிரபாகரன் கூறியதன்  பிறகு நாமக்கல் அரசு மருத்துவமனையில்காவல்துறை அனுமதித்து பின்னர் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அன்று இரவு 11:40 மணியளவில் பிரபாகரன் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது சடலம் வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு அமைப்பினர், மனித உரிமை ஆர்வலர்கள் என மறுநாள் 13ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னரே  போலீசார் பிரபாகரனின் மரணத்தை 'சந்தேக மரணம்' என வழக்கு பதிவு செய்தனர். மேலும்  சேந்தமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூன்று பேர் சேலம் டிஐஜி-யால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இதனை "காவல்துறையின் கட்டுப்பாட்டில் நடந்த சந்தேக மரணம்" என்றும் வழக்கு பதிவு செய்தனர்.

சிபிசிஐடி-க்கு மாற்றம்!’ - முதல்வர் ஸ்டாலின்.
 
இந்நிலையில் தமிழக அரசு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது , காவல்துறையின் கட்டுப்பாட்டில் நிகழ்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து, இந்த வழக்கினை குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றிட உத்தரவிட்டுள்ளார். மேலும் பிரபாகரனின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக 10 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளி இறப்பு வழக்கு: விரைந்து முடிக்க வலியுறுத்தல்

. பிரபாகரன் இறந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. அத்துடன், அவரது குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்தியதாக கூறி, உண்மை கண்டறியும் குழு ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் சேலத்தில் 22 . 2022 அன்று  அளித்த பேட்டி: போலீசார் திட்டமிட்டு செயல்பட்டதால் பிரபாகரன் மரணம் நிகழ்ந்துள்ளது. கிளை சிறையில் அடைக்கப்பட்டு தாக்குதல் நடத்திய சிறை கண்காணிப்பாளர் தினேஷ் மீது நடவடிக்கை தேவை. நீதிமன்றத்தில் நிலைகுலைந்து விழுந்த பிறகும் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளி இறந்த தகவலை, உடனே அவரது குடும்பத்துக்கு போலீசார் தெரிவிக்காமல் கிளம்பி சென்றுவிட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை, வீடியோ பதிவு, இன்னும் அவரது குடும்பத்துக்கு வழங்கவில்லை. இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment