காவல்துறையில் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை சுய ஒழுக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும். காவலர்கள் சகிப்புத் தன்மையுடன் பணியாற்ற வேண்டும். விசாரணைக் கைதிகளை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது. தேவையில்லாத துன்புறுத்தல்கள், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
முழுமையான Recovery என்ற பெயரில் விசாரணை கைதிகளை துன்புறுத்தக் கூடாது. விசாரணையின்போது பொறுப்பு அதிகாரி இல்லாமல் தனிப்பட்ட முறையில் எந்த காவலரும் விசாரிக்க கூடாது. ஒரே நபரை 3, 4 நபர்கள் ஒன்றாக சேர்ந்து விசாரிக்கக் கூடாது. வாகன தணிக்கையின்போது தேவையில்லாத செயல்களில் ஈடுபடக் கூடாது. குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் தொல்லை தரக் கூடாது என்று கூறினார். அதாவது
*புகார் அளிக்க வருபவர்களிடம் பேப்பர் இல்லை, அதிகாரி இல்லை என்று சொல்லி அ அலைக்கழிக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது.
*புகார்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு, எஃப்.ஐ.ஆர். (FIR) மற்றும் சி.எஸ்.ஆர். (CSR) பதிவு செய்யப்பட வேண்டும்.
*முக்கிய பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை நியமித்தலை தவிர்க்க வேண்டும்.
*குடும்பமாக செல்பவர்களிடம் வாகனத் தணிக்கை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது.
*சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது லத்தியை பயன்படுத்தக் கூடாது
*கோயில் திருவிழாவில் சாதிய பாகுபாடு, மோதல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
*காவல் நிலையங்களில் பாலியல் தொடர்பான துன்புறுத்தல்கள் எதுவும் இருக்கக் கூடாது.
*விசாரணைக் கைதிகளை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது.
*ஒரே நபரை மூன்று அல்லது நான்கு காவலர்கள் ஒன்றாக சேர்ந்து விசாரிக்க கூடாது.
*பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment