Tuesday, 27 April 2021

மே 2ந் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் உண்மை இல்லை - சத்யபிரதா சாகு

  கொரோனாத்தொற்று  காரணமாக வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்கப்பட உள்ளதாக  தகவல்கள் வெளியாகின  அதன் தொடர்பாக   சந்தேகம் எழுந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, அதற்கு விளக்கம் அளித்துள்ளார் .


மே 2ந் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் உண்மை இல்லை. வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைப்பதை குறித்து எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. ஏற்கனவே திட்டமிட்டப்படி மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். என சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 



No comments:

Post a Comment