தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அனுமதிக்க கோரிய ஸ்டெர்லைட்டின் மனு ஏற்பு.
கொரோனா தொற்றுகாரணமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது .ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்திலிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது .
தமிழகம் தற்போது கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் ,நாட்டில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. எனவும் ,அதனால் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்க ஆதரவு அளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார் .
தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை சில மாற்றங்களுடன் ஏற்றுக் கொள்கிறோம்.ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும்; தாமிர ஆலைக்குள் செல்லக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
அப்போது 10 நாட்களுக்குள் உற்பத்தி தொடங்கமுடியுமா என வேதாந்தா நிறுவனத்திடம் கேள்வி கேட்ட நீதிபதிக்கு அந்நிறுவனம் சார்பாக பதில் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஆலையை திறக்கலாம் வேறுயெந்த பணிகளும் அங்கு மேற்கொள்ளக்கூடாது என்ற உத்தரவோடு அனுமதிவழங்கிய நீதிபதி சந்திர சூட் , உற்பத்தி செய்த ஆக்சிஜனை மத்திய தொகுப்பில் ஒப்படைக்கவும் ஆணையிட்டார் .
உற்பத்தியை கண்காணிக்க தமிழகத்தை சேர்ந்த 3 நிபுணர்களை நியமிக்க தேசிய சுற்றுசூழல் பொரியல் ஆய்வு நிறுவனத்தை கேட்டுக்கொண்டார் .மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பாக 2 பேரை நிபுணர்களாக நியமித்துக்கொள்ளலாம் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்களிடம் நீதிபதி தெரிவித்தார் .அவர்களும் கண்காணிப்பு குழுவில் இடம்பெறுவர்.
மேலும் உள்ளூர் மக்களின் நம்பிக்கையை பெறுவதே முக்கியம் என்று கூறிய நீதிபதி அவர்கள் உள்ளூர் சார்பாக மேற்பார்வை குழுவை நியமித்துக்கொள்ள நிபுணர் குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார் .
மேலும் ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தை இயக்க எவ்வளவு நபர்கள் தேவை என்பதை கண்காணிப்பு குழு முடிவு செய்யட்டும் , எனக்கூறியுள்ளார் .