Friday, 27 November 2020

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் பத்திரிகையாளர் உரிமை மீட்பு போராட்டம்

 தொடர்ந்து பத்திரிகையாளர்கள்   தாக்கப்படுவதும் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகிவருவது வேதனையான   ஒன்றாகும், பத்திரிகையாளரின்  தேவையான    நலவாரியத்தினை முறையாக அமுல்படுத்தி  செயல்படுத்தவும். பத்திரிகையாளரின்  பாதுகாப்பை   வலியுறுத்தியும்  சில பல பத்திரிகையாளர் தாக்குதலை மேற்கோள்  காட்டியும்,   அரசிடம்  வலியுறுத்தி   பல சங்கங்கள் கோரிக்கை   வைத்த போதிலும் ,  அரசும்  காலம் தாழ்த்திவருவது  கண்டனத்திற்குரியதே .அதை போலவே 

 தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் பத்திரிகையாளர் உரிமை மீட்பு போராட்டம் 20.11.2020 அன்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது. பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம், பத்திரிகையாளர் நலவாரியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 300-க்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்துக்கொண்டு முழக்கமிட்டனர்.

10 அம்ச கோரிக்கைகளாக :-


1. பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் இயற்றிட, 2. பத்திரிகையாளர் நலவாரியம் அமைத்திட, 3.பத்திரிகையாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கிட, 4. பத்திரிகையாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை, 5. 2020 ஆண்டு புதிதாக விண்ணப்பித்துள்ள பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்காததை கண்டித்து, 6. டோல்கேட் கட்டண தளர்வு அளித்திட, 7. மெட்ரோ ரயில் பயண கட்டண சலுகை வழங்கிட, 8. Accreditation Card - Press Pass என்ற இரட்டை கார்டு முறை ஒழித்து ஒரே கார்டு ஒரே மாதிரியான அங்கீகாரம் வழங்கிட, 9. அச்சு ஊடகம், காட்சி ஊடகம், நாளிதழ்கள், பருவ இதழ்கள், மாவட்ட நிருபர்கள், தாலுக்கா நிருபர்கள் என அனைவருக்கும் பாகுபாடு இன்றி ஒரே மாதிரியான சலுகைகள் வழங்கிட,10 அரசு விளம்பரங்கள் மற்றும் நூலக ஆர்டர் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் எளிமைப்படுத்திட,

மேற்கண்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பத்திரிகையாளர் சங்க தலைவர்கள், ஆசிரியர்கள், நிருபர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது சிறப்பானது .

கலந்துகொண்டவர்களில்:-
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் நமது நகரம் ஆசிரியர் S.சரவணன், பீப்பிள் டுடே ஆசிரியர் G.சத்யநாராயணன், வெற்றி யுகம் ஆசிரியர் காமேஷ் கண்ணன், பேனா முள் ஆசிரியர் பாடி.பா.கார்த்திக், சட்ட கேடயம் ஆசிரியர் ராஜன், மக்கள் விருப்பம் ஆசிரியர் தருமராஜா, நீதியின் நுண்ணறிவு ஆசிரியர் சிவக்குமார், தர்ம ராஜ்ஜியம் ஆசிரியர் வினோத், விழுதுகள் ஆசிரியர் விஜயகுமார், கடல் சிற்பி ஆசிரியர் முத்து, வாசன் பார்வை பொறுப்பாசிரியர் தேனை சரண், மக்கள் ராஜாபார்வை ஆசிரியர் ஹரி கிருஷ்ணன், பல்லவன் முரசு ஆசிரியர் மஞ்சுநாதன், மண்ணின் குரல் ஆசிரியர் சரவணன், சட்ட கவசம் ஆசிரியர் கார்த்திகேயன், பல்லவன் முரசு பொறுப்பாசிரியர் மகேஷ் நாகராஜன், உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்கள்.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிட்ஸ் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், தலைமை செயலக அனைத்து பத்திரிகையாளர் சங்க தலைவர் க.குமார், ஆல் இந்தியா பிரஸ் மீடியா தலைவர் A.வேல்முருகன், ஆல் இந்தியா பிரஸ் கிளப் தேசிய தலைவர் B.ரஞ்சித் பிரபாகர், தமிழ்நாடு ஜர்னலிட்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் M .கிருஷ்ணவேணி, தமிழ்நாடு பிரஸ் மீடியா ரிப்போட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் திவான் மைதீன், ஊடக உரிமைக்குரல் மாநிலத் தலைவர் ஜுபிடர் ரவி, செந்தமிழ்நாடு ஊடகவியலாளர் சங்க தலைவர் தளபதி, மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் செயலாளர் பாலமுருகன், தமிழ்நாடு தலைமை செயலக பிரஸ் மீடியா அசோசியேஷன் துணைத்தலைவர் ஜெயபால், ஒருங்கிணைப்பாளர் வேல்ராஜ், சிறு குறு பத்திரிகையளர் சங்க தலைவர் குரு, செய்தி தொடர்பாளர் பிரஸ் குமார், தமிழ்நாடு பத்திரிகையாளர் பேரவை தலைவர் வாஞ்சிநாதன், விவசாயிகள் சட்ட இயக்கம் துணைத்தலைவர் அசோக் ஜி லோதா (செய்தி களம்) உள்ளிட்டவர்கள கலந்துக்கொண்டு போராட்டத்திற்கு வலு சேர்த்தனர்.
கழுகு வீரராகவன், அனிச்சமலர் ஆசிரியர் கலைஞானி, உள்ளாட்சி முரசு விவசாயி ஜெயராமன், சிங்கரா சென்னை ஆசிரியர் ரங்கநாதன், முற்றம் ஆசிரியர் தளபதி, மெட்ரோ மேன் ஆசிரியர் அன்பு, அதிரடி குரல் ஆசிரியர் ஜெயகாந்த், தகவல் மேடை ஆசிரியர் சாந்தகுமார், திரை திபம் ஆசிரியர் மதி ஒளி ராஜா, ரிபோர்ட்டர் விஷன் அம்பலவாணன், தொட்டில் செய்தி ஆசிரியர் முருகேசன், கடல் துளிகள் யுவராஜ், அமுதம் ரிப்போட்டர் ஆசிரியர் வாஞ்சிநாதன், அரசியல் முத்திரை ஆசிரியர் செல்வம், ரிப்போட்டர் டுடே ஆசிரியர் சிவக்குமார், சீனியர் ரிப்போட்டர் ரவீந்திரகுமார், மின்னொளி ஆசிரியர் வீரா, பைட்டிங் பிரதர்ஸ் ஆசிரியர் அயன்புரம் பாபு, பாக்கியம் சினிமா ஆசிரியர் விஜய், துணிச்சல் ஆசிரியர் கணேஷ் பாபு, உள்ளாட்சி சுடர் ஆசிரியர் அர்ஜித், மக்கள் உறவு பூவனேஷ், வடபழனி எக்ஸ்பிரஸ் மணி எழிலன்,துணிச்சல் சிவசுப்பிரமணியன், மக்கள் வெளிச்சம் வெங்கடேஷ், மாலை தமிழகம் சேகர், மின்னொளி ஜீவானந்தம், மகேஷ் நாகராஜன், மாலை தமிழகம் செந்தில், தினப்பார்வை ராதா, சேலம் ராஜா, நமது மீனவன் பிரபு, நமது மீனவன் சக்ரவர்த்தி, முள்ளும் மலரும் ஆனந்தராஜ், கிரைம் ஸ்பாட் சக்திவேல், உள்ளாட்சி செய்தி கோட்டிஸ்வரன், சட்ட கேடயம் காசிமாயன், நீதியின் தீர்ப்பு எபிநேசன், ம.ருக்குமணி, மகேஷ்கிருஷ்ணன் அபிராமி, திவாகர், மணி பாபு, அம்மா எக்ஸ்பிரஸ் அசிம், கோபிநாத், தனக்கோடி, மோசஸ், ஹரிதாஸ், நல்லப்பா, கமலக்கண்ணன், டேனியல், அருண், கயல்விழி, கமலகண்ணன், அருண், கேமாந்த் குமார், ஹரிதாஸ், கார்த்திகேயன், ரவிக்குமார், கோபிநாத், மோசஸ், தனலட்சுமி, லதா, ஷிஜி, வெங்கடேஷ், செல்வப்ரியன், தமிழரசன், குமரேசன், லக்ஷ்மணன், மகேஷ், பொன்ராஜ், மணிமாறன், மோனிஷ் குமார், சத்யா, ராஜேஷ், ஈஸ்வரன், வெங்கடேசன், சேகர், சரவணன், பால்ராஜ், சூரியகுமார், சக்திவேல், முஹமத்காசிம், கிரைம் ஸ்பாட் புவனேஸ்வரி, டெய்லி இந்திய நியூஸ் பாலாஜி, நமது தமிழகம் செந்தமிழ் செல்வி, சித்ரா, குன்றத்தூர் சூரியகுமார் உள்ளாட்சி முரசு காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர், குன்றத்தூர் வெங்கடேசன் உள்ளாட்சி முரசு மற்றும் துப்பறியும் விசாரணை, சத்தியா கிரைம் ஸ்பாட்
புகழேந்தி, டி.கே. மூர்த்தி, அருணாச்சலம், வினோத், அகிலன், பாஸ்கர், இளவரசன், ஸ்ரீராம், அசோக்குமார், கோதண்டன் ,பிரதீப்குமார், செல்வம், ஹரிகிருஷ்ணன், விக்கி, சாமிநாதன், நா.சதீஸ்குமார், விஜயகுமார், ஸ்ரீனிவாசன், கபீல் தாஸ், விக்னேஷ், திவாகர், சுகுமார், ராஜேஷ், மணிகண்டன், S.கிரீஷ், முத்துப்பாண்டி, ந.மோகன், சரவணன், கதீர்வேல், அன்பு, சதீஸ், அஸ்லாம், முகமது இலியாஸ், கார்த்தி, சக்தி, திருநாவுக்கரசு, சண்முகசுந்தரம், முரளி, கண்ணன், சுரேஷ், செந்தில், சரவணன், மணி, பிரவின், விக்கி, துரை, சாம்சங் செல்வகுமார், கணேச பாண்டி, விஜய், சண்முகம், சுபாஷ் சந்திரன், ரவிக்குமார், ஜேம்ஸ் என்ற பெருமாள், ஜோயல், சங்கர், முகமது ரவி, செல்வம், ஜெயராமன், கார்த்திக், சதக், முனியப்பன், பாபு, ராஜன், தங்கமணி, செந்தில்ராஜன், ஸ்ரீனிவாசன், குமரேசன், ஜான்சன் ராஜா, உமாகாந்தன், அமிர்தலிங்கம், ரமேஷ், ராஜன், டைக்சன், நைனா முகம்மது, வெங்கடேஷ், திலிப்குமார், மகேஷ், எழிலரசன், ரமேஷ் உள்ளிட்ட 300க்கு மேற்ப்பட்ட பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் கலந்துக் கொண்டார்கள்.



இந்தியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி :. 3 விக்கெட் வீழ்த்தினார்முகமது ஷமி.

 இந்தியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி :

இந்தியாவுக்கு 375 ரன்களை இலக்காக நிர்ணயித்த‌து ஆஸ்திரேலிய அணி

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் குவித்த‌து.அதிகபட்சமாக ஆரோன் பிஞ்ச் 114, ஸ்டீவன் ஸ்மித் 105, டேவிட் வார்னர் 69 ரன்கள் குவித்தனர்.

முகமது ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்

நொச்சிக்குப்பத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு

 சென்னை மயிலாப்பூரில் உள்ள மீனவ பகுதியான நொச்சிக்குப்பத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.தொடர்ந்து தி. நகருக்கு செல்ல உள்ள ஸ்டாலின், அங்கு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்…

"மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 % இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை" _உச்சநீதிமன்ற நீதிபதி

 "மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 % இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை"என மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவுஉச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் 25 கல்லூரிகளில் 584 இடங்கள் ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை அறிவித்துள்ளது.

டிசம்பர் 1 முதல் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

 வங்க‌க் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.தென் கிழக்கு வங்க‌க் கடலில் உருவாகி, தமிழகம் புதுச்சேரி நோக்கி நகரும்எனவும்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால், டிசம்பர் 1 முதல் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்அறிவித்துள்ளது

Thursday, 26 November 2020

சென்னை விமான நிலையம்மீண்டும் இன்று காலை 9 மணி முதல் செயல்படத் தொடங்கும்

 சென்னை விமான நிலையம் காலை 9 மணி முதல் செயல்படத் தொடங்கும் என தகவல்


நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் இன்று செயல்படும்

 சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது


தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் பாதிப்பு


சென்னையின் பெரும்பாலான சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி உள்ளது

டிசம்பர் 2, 5ல் அடுத்தடுத்து தமிழகத்திற்கு வரிசை கட்டி வரும் புயல்கள்.

  டிசம்பர் 2, 5ல் அடுத்தடுத்து தமிழகத்திற்கு வரிசை கட்டி வரும் புயல்கள்.


நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில் வங்கக் கடலில் அடுத்த புயல் உருவாகிறது. இந்த புயல் டிசம்பர் 2ம் தேதி தமிழகத்தில் கரையைக் கடக்கிறது.

 இதையடுத்து டிசம்பர் 5ம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் மேலும் ஒரு புயல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் வரும் வட கிழக்கு பருவமழை காலத்தில் பல காற்றழுத்தங்கள் உருவாகி புயலாக மாறும். 


வங்கக் கடலில் கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை சுமார் 60 புயல்கள் வந்து சென்றுள்ளன. குறிப்பிட்ட சில புயல்கள் கடும் சேதங்களை ஏற்படுத்தி இன்னும் பேசப்படும் நிலையில் இருக்கின்றன.

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்த நிவர் புயல் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் நிவர் புயல் தரையைத்தொட்ட நிலையில், வலுவிழந்தது. தற்போது இந்த புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று கொண்டு இருக்கிறது. 

இந்த புயல் 28ம் தேதி ஆந்திராவைக் கடந்து சென்று வலுவிழந்து சாதாரண காற்றழுத்தமாக கடந்து செல்லும். இந்நிலையில், வங்கக் கடலில் இருந்த நிவர் புயல் சென்று விட்டதால், இந்த ஆண்டுக்கான அடுத்த புயல் தற்போது உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.


அதாவது தெற்கு அந்தமான் பகுதியில் 30ம் தேதி உருவாகும் காற்றழுத்தம் வலுப்பெற்று வட மேற்கு திசையில் மெல்ல மெல்ல நகர்ந்து வந்து டிசம்பர் 2ம் தேதி நாகப்பட்டினம், தஞ்சாவூர் பகுதியில் கரையைக் கடக்க உள்ளது. 


 இதற்கு பிறகு டிசம்பர் முதல் வார இறுதியில் இரண்டாவதாக மேலும் ஒரு புயல் டிசம்பர் 5ம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாக உள்ளது. இந்த புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து சென்னை வழியாக கரையைக்கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளைக்குள் முழுமையாக மின் இணைப்பு வழங்கப்படும்.

 கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளைக்குள் முழுமையாக மின் இணைப்பு வழங்கப்படும். கடலூர் மாவட்டத்தில் 215 துணை மின் நிலையங்களில் புயலால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்விரு மாவட்டங்களில் மொத்தம் 144 மின் கம்பங்கள் புயலுக்கு சாய்ந்துள்ளன.


தங்களின் பாதுகாப்பை கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.