கொரோனா குறித்த முன்னெச்சரி
க்கை நடவடிக்கைகளை பற்றி பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார் ,
. அப்போது அவர், ‘21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். பொருட்களை வாங்குவதற்கு ஒரே இடத்தில் குவிய வேண்டாம். ஏழை மக்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும். ஒரு நபருக்கு பாதித்தால் 10 நாட்களில் நூற்றுக்கனக்கானோருக்கு பரவி விடும். மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின்றி ஏதேனும் மருந்துகளை உட்கொள்ளவேண்டாம். உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகளின் ஆலோசனைப்படி செயல்படுகிறோம். கொரோனா குறித்த வதந்தி மற்றும் மூட நம்பிக்கைகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.