பதிப்பாசிரியர்களாக இருக்கும் நண்பர்களின் கவனத்துக்கு,
சென்னை உயர்நீதி மன்றத்தில், பத்திரிகையாளர் சம்பந்தப்பட்ட வழக்கு வருகிற 5-ம் தேதி அடுத்த கட்ட விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் பெட்டிஷன் தரப்புக்காக பல முன்னணி பத்திரிக்கை செய்தியாளர்கள் கேவியட் மனு போட்டு சேர்ந்திருக்கிறார்கள். இதன் மூலம் பெட்டிஷன் தரப்பு வலுவாக உள்ளது
அதே நேரம் ரெஸ்பாண்டண்ட் தரப்பில் போதுமான அளவு நம்மவர்கள் சேர்ந்து கொள்ளவில்லை. இதனால் டிபன்ஸ் அல்லது சிறு பத்திரிக்கை பதிப்பாளர்கள் கருத்துக்கள் முன் வைக்கப்பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாக கருதுகிறேன்.
பெட்டிஷன் தரப்பு வலுபெற்றதன் மூலம், அவர்கள் ஏ.பி.சி., ஆடிட்டிங் செய்யும் பத்திரிகை, அதிகளவு விற்பனை ஆகும் பத்திரிகைகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்க உள்ளனர்.
டிபன்ஸ் தரப்பில் அதை மறுத்து பேசவோ, அல்லது ஆர்.என்.ஐ., யை இந்த வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும். மேலும் ஆர்.என்.ஐ., தரும் சர்குலேஷன் சர்ட்டிபிகேட்டையே சிறு பத்திரிகைகளை அங்கீகாரம் செய்ய விண்ணப்பிக்க போதுமான ஆவணமாக ஏற்று கொள்ள செய்ய வேண்டும்.
மேலும் ஆர்.என்.ஐ.,யில் பதிப்பாளர்கள் செய்யும் இ பைலிங் பிரதி, பத்திரிக்கை அச்சக பில்கள் போன்றவற்றையும் சர்குலேஷன் ஆதாரமாக காட்ட உத்தரவிட கோர்ட்டை கேட்டு கொள்ள வேண்டும்.
இது தவிர ஐ.ஆர்.எஸ். உள்பட மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற சர்குலேஷன் ஆடிட்டிங் நிறுவனங்கள் தரும் ஆடிட் சான்றிதழ்களை சர்குலேஷன் சான்றாக ஏற்றுக்கொள்ள கோர வேண்டும்.
ஏனென்றால், இதுவரை மேற்படி வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஏ.பி.சி., ( Audit Bureau of CIrculation ) கடைகளில் விற்பனையை கணக்கிட்டு, அதன் பிறகு ரிட்டர்ன் கணக்கிட்டு சோதனை செய்து பிறகே சர்குலேஷன் சர்டிபிகேட் தருகிறது.
ஆனால் சிறு பத்திரிகைகள் கடைகளில் விற்கப்படுபவை அல்ல, செய்தியாளர்கள், சில ஏஜெண்டுகள் மூலம் நேரடியாக விற்பனை செய்யப்படுபவை . எனவே மேற்படி ஆர்.என்.ஐ., இ-பைலிங் போன்ற சான்றுகளை ஏற்க செய்ய வேண்டும்.
அல்லது சந்தாதாரர் முகவரிகளை அளிப்பதன் மூலம் கணக்கீடு செய்து அங்கீகாரம் வழங்கும்படி செய்ய வேண்டும். வெறும் ஏ.பி.சி., ஆடிட்டிங் என்பது இந்த வழக்கில் சிறு பத்திரிகைகளுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்.
இறுதியாக இவர்கள் வைக்கப்போகும் கோரிக்கை குறைந்தது 25 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும் நாளிதழ்களை தான் அங்கீகாரம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கின் போக்கை மாற்றுவார்கள். எனவே சிறு பத்திரிகையாளர் தரப்பில் குறைந்தது 2 ஆயிரம் அல்லது 5 ஆயிரம் பிரதி விற்கப்படும், அல்லது சர்குலேஷன் கொண்ட பத்திரிகைக்கு அங்கீகாரம் வழங்க கோர வேண்டும்.
ஏனென்றால் சென்னை பதிப்பிலேயே, மத்திய அரசிடம் டி.ஏ.வி.பி., எம்பேனல் செய்து மத்திய அரசு விளம்பரம் பெறும் பத்திரிகைகள் என்ற பட்டியலில் 3500 பிரதிகள் சர்குலேஷன் கொண்ட பத்திரிகைகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது. டி.ஏ.வி.பி., விளம்பரங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில் சிறு பத்திரிகையாளர்கள் அங்கீகாரத்தை வழங்க கோரலாம்.
சென்னை அல்லாத பதிப்பில் 2600 சர்குலேஷன் கொண்ட ஒரு பத்திரிகையும் மத்திய அரசு அங்கீகாரம் பெற்று உள்ளது. இது நமக்கு பாசிட்டிவ் செய்திகள். இதையெல்லாம் பதிப்பாளர்கள் தரப்பில் ஆஜராகி பதிப்பாளர் சங்கங்கள் ஐ கோர்ட்டில் ரிட்டன் ஸ்டேட்மென்ட் ஆக பதிவு செய்து நமது அங்கீகாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.
அதன் பிறகு சிறு பத்திரிகைகளில் கூட இல்லாமல், போலியாக ரிப்போர்ட்டர் என்ற பெயரில் சுற்றுபவர்களை எப்படி களை எடுப்பது என்று நமது தரப்பில் ஆலோசனை செய்து, அதை கோர்ட்டில் தெரிவித்து பத்திரிக்கை துறையை காக்க நாம் தான் முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையெல்லாம் செய்ய கோர்ட்டில் உள்ள மேற்படி வழக்கில் நம்மில் சில பதிப்பாளர்களோ அல்லது நம் அனைவரின் சார்பில், யாராவது ஒருவரோ வழக்கு தரப்பில் பெட்டிஷன் போட்டு இணைய வேண்டும். அப்போது தான் இந்த நடைமுறைகளை கோர்ட்டில் எடுத்துரைத்து நீதியரசர்களிடம் நமது கோரிக்கையை வைத்து, நம் உரிமையை மீட்டெடுக்க முடியும்.
இல்லாமல் இந்த வழக்கை இப்படியே விட்டோமானால், இப்போதிருக்கும் நிலைமையில் பெட்டிஷன் தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது. எனவே நாம் உணர்ச்சிவசப்படாமல் இந்த வழக்கின் போக்கில் இணைந்து நம் உரிமையை மீட்டெடுக்க ஆவண செய்வோம்.
இதற்கான முதல்கட்டமாக, அங்கீகார அட்டை பெற்றவர்கள் என்று ஜூ.வி., வெளியிட்ட பட்டியலில் உள்ளவர்கள் ஒன்றிணைவோம்.
அரசியலமைப்பு சட்டம் சொல்லும் கருத்துரிமையை வெல்வோம்!
-உங்களில் ஒருவன்